Blog

/Blog

அறிவு நிரந்தரம்

புல்லாங் குழலில் உள்ளது வெற்றிடம் புதிய ஸ்வரங்கள் பிறந்துவிடும் கல்விக்குப் போகும் குழந்தையின் மனதில் காண்பவை எல்லாம் பதிந்துவிடும்! எழுதாப் பலகை ஆகாயம் என எல்லா விடியலும் சொல்கிறது அழகிய நிலவு விண்மீன் கோள்கள் ஆதவன் எல்லாம் தவழ்கிறது! உள்ளம் திறக்கும் ஒவ்வொரு நொடியும் உனக்குள் மழைவிழும் அறிவாக! வெள்ளம் போலது வளர்ந்து பெருகி வாழ்வை நனைக்கும் நதியாக! படித்து முடித்தேன் என்பது மடமை பட்டம் மட்டும் படிப்பல்ல அடிமனதுக்குள் அனல்விடும் தேடல் அணைந்து போகும் நெருப்பல்ல! ...

உன் பெயர் பதித்திடு

காகிதம் போன்றது நம் மனம் காவியம் கூட எழுதலாம் ஓவியத் தூரிகை நம் மனம் உயிரோவியமே வரையலாம் வெற்றுக் கரியைப் பூசவும் வாய்ப்புகள் உண்டு தோழனே சற்றே கவனம் சிதறினால் செயலின் அடிப்படை மாறுமே! கல்லில் செதுக்கிய சிற்பமாய்க் காரியம் ஆற்றிடத் தோன்றினோம் சொல்லில் செயலில் புதுமைகள் செய்து காட்டிடப் போகிறோம் ஒவ்வொரு நிமிடமும் வாய்ப்புகள் ஒவ்வொரு விதத்தில் கிடைக்கலாம் கல்வி இழுத்திடத் தயங்கினால் கைகளைவிட்டு நழுவலாம் வெற்றிக்கு ஆசைகள் வளர்த்திடு வேட்கையை தவமாய் மலர்த்திடு உற்றிடும் ...

நாளை என்றொரு நாளுண்டு

எல்லாம் புதிதாய்த் தொடங்கவென இன்னொரு வாய்ப்பைத் தேடுகிறோம்; என்றோ செய்த தவறுகளை இன்று திருத்த எண்ணுகிறோம். புதிதாய் முயற்சி தொடங்கிவிட புத்தம் புது நாள் எதற்காக? இதயத்தின் ஆழத்திலும் முழுவிருப்பம் இருந்தால் போதும் நமக்காக! முன்னை விடவும் தெளிவிருந்தால் மன்னிக்கின்ற பரிவிருந்தால் இன்னும் கொஞ்சம் வெளிச்சம் வரும் என்றும் வாழ்வில் மகிழ்ச்சி வரும். மண்ணில் நிகழ்கிற விடியலெல்லாம் மற்றொரு வாய்ப்பை வழங்கத்தான்! எண்ணம் எதுவும் கைகூடும் என்கிற உறுதியை மொழியத்தான்! ஆளைக் கவிழ்க்கிற தோல்விகளும் அடியுடன் வீழ்த்தப் ...

புலப்படுத்தும்

நகரும் நிமிடங்கள் முதலீடு -இதில் நஷ்டக் கணக்குகள் கூடாது சிகரம் தொடுவது நம் இலக்கு -இதில் சுணக்கம் என்பதே ஆகாது! முகமில்லாத தினங்களுக்கும் -ஒரு முகவரி கொடுப்பது நம் உழைப்பு பகலும் இரவும் நம் வசத்தில் -இதில் பயன்கள் காணட்டும் நம்முனைப்பு பத்துவிரல்களின் பிடியினிலே -மிகப் பத்திரமாய் நம் நிகழ்காலம் யுத்த களத்தின் வீரனைப்போல் -நீ எழுந்தால் உனக்கே எதிர்காலம் புத்தகம் பேசும் உறுதிகளை – உன் புத்தியில் இறக்கிப் பயன்படுத்து நித்தமும் உன்னைப் புதுப்பித்து -அட ...

காலங்கள் காக்கட்டும்

மின்னல் வந்து இருள்தின்னும் ஒரு மழைநாள் இரவினிலே ஜன்னல் வழியே பன்னீரைமுகில் சிந்திய வேளையிலே என்ன பண்டிகை வானிலென்றே -நான் எட்டிப் பார்த்தேனா -அட உன்னைத் தானெதிர் பார்த்தேன் என்கிற என்றிடி ஒங்கிச் சிரித்ததடா! கண்களில் மழைவரும் கால்ங்களில்நீ கோழையில் கோழையடா எண்ணி எண்ணி ஏங்கித் தவிப்பவன் இவன்தான் எழையடா மண்ணுக் கெந்த பயனுமில் லாமல் மனம்போல் வாழுபவன் -தான் பண்ணிய தவறுகள் எண்ணி அழுவதில் பயனொன்றில்லையடா மற்றவர்க்குதவிய மகிழ்ச்சியில் கண்கள் மழையாய்ப் பொழியட்டும் உற்றவர் பரிவினில் ...

திசைகள் திறந்துவிடும்

உனக்கென உள்ளது ஒருலகம் – அதை உருவாக்குவதே உன் கடமை தனக்கெனத் தடைகள் வந்தாலும் -மனம் தளராதிருப்பதே தனிப்பெருமை மனக்கதவுகளைத் திறந்துவிடும் -புது மலர்ச்சியை உள்ளம் உணர்ந்துவிடும் தினம் தினம் முயற்சி தொடர்ந்துவிடும் -உன் திசைகள் அனைத்தும் திறந்துவிடும்! வெற்றிக்கு வியர்வை விலையாகும் -உன் வழியினில் புகழும் நிலையாகும் கற்றதை நிகழ்த்துதல் கலையாகும் -அது கைவரப் பெற்றால் நலமாகும்! திட்டம் வகுப்பது பழகிவிட்டால் -அது திறமை செயலால் வளர்ந்துவிட்டால் எட்ட முடியும் எண்ணியதை-நீ எளிதில் தொடுவாய் சிகரங்களை ...
More...More...More...More...