Blog

/Blog

உறியடி வாழ்க்கை

குறிக்கோள் நோக்கிப் பயணம் போகையில் கனவுகள் குதிரைகள் ஆகும் குதிரையை சுண்டிக் கிள்ம்பிடு தோழா கருதிய எதுவும் கைகூடும் மறிக்கும் தடைகளை அகற்றும் சக்தி மனிதனின் கனவுக்குண்டு மயக்கம் தயக்கம் முற்றிலும் நீக்கி முயன்றால் வெற்றிகள் உண்டு தறியின் சுதியின் தாள் கதியில் இழைகள் நெசவும் ஆகும் கவின் சுதியில் செயல்கள் பிறந்தால் காலம் உன்பெயர் கூறும் உறியடிக்கான வழுக்கு மரமாய் உள்ளது தம்பி உலகம் உந்தி உந்தி மேலேஏறு உலகம் உன்னைப் புகழும். ...

முயற்சி வேண்டும்

அசையாமல் நீயிருக்க யோகியுமல்ல! அப்படியே உட்காரப் பாறையுமல்ல! திசையாவும் திரிகின்ற பறவையைப் பார் நீ! திரிந்தலைய அதன் தேவை கோடி செல்வமா? விசை வேண்டும் நம்முடற்கு வீணில் கிடப்பதா? வேலையொன்றும் செய்யாமல் சோம்பி இருப்பதா? இரும்பு கூடத் தரைகிடந்தால் துருப்பிடிக்குமாம் விரும்பு எதையும் செய்ய விரும்பு விடிவு காணலாம் வேலை யாவும் சுமைகளல்ல சுகமும் காணலாம் கரும்பு போல வாழ்வை மாற்றக் கடமை யாற்றுவாய்! காலநேரம் பார்த்தி டாமல் உழைப்பில் மூழ்குவாய். தண்ணீரில் சிறகடித்தால் அலையில் மிதக்கலாம் ...

மனிதம் வாழ்க!

காலத்தால் பண்படுதல் மனித நீதி கருணைதான் நீதிக்குள் குலவும் சோதி கோலங்கள் மாறுகையில் திட்டம் மாறும் கொள்கைகள் வளர்கையிலே சட்டம் மாறும் வேலெடுத்து நாட்டியதும் வீரம் அன்று வெண்கொடியைக் காட்டுவதும் விவேகம் இன்று நூலறிவும் நுண்ணிறிவும் வளரும்போது நேற்றிருந்த சட்டங்கள் இன்றைக்கேது? தூக்கிலிடும் சட்டத்தை பலதேசங்கள் தூக்கியெறிந்தே இங்கு தூய்மை ஆச்சு ஆக்கமுடன் அகிம்சையினைத் தந்த நாட்டில் அடிப்படைகள் மாற்றிவைத்தால் என்ன பேச்சு? தூக்கமில்லா சிறைவாழ்க்கை நெடுநாள் தந்தார் தொலைந்துவிட்ட காலத்தைக் கணக்கில் பார்த்தால் மூவருக்கு மட்டுமல்ல! ...

உயிரின் குணம்

விதைபோல் கனவு விழுகிறது வெளித்தெரியாமல் வளர்கிறது எதையோ பருகி நிமிர்கிறது என்றேர் வெளியே தெரிகிறது! எண்ணமும் வேர்களில் நீர்வார்க்கும் எத்தனமும் வளர்ச்சியை சரிபார்க்கும் மண்ணில் பெற்றவை உரமானால் மிக நிச்சயமாய் பூப்பூக்கும்! ஒவ்வெர்ரு பருவமும் பலம்கொடுக்கும் ஒவ்வெர்ரு விடியலும் ஒளிகொடுக்கும் ஒவ்வெர்ரு முகிலும் துளி கொடுக்கும் ஒவ்வெர்ரு படியாய் வளரந்திருக்கும்! வேர்விடும் வாழ்க்கை நிமிரட்டுமே வேண்டிய உயரம் அடையட்டுமே பார்வையில் பசுமை சிரிக்கட்டுமே பலன்கள் ஒருநாள் பழுக்கட்டுமே! தாவரம் போல்தான் கனவுகளும் தாங்கி வளர்த்தால் வலிமை வரும் ...

படையோடு நடைபோடு

படையோடு நடைபோடு படையோடு நடைபோடு வாழத்தானே பூமிக்கு வந்தோம் வெற்றிகள் குவித்திட ஏதுதடை தோழா நாமும் தோற்பதும் இல்லை தொடர்ந்து நடக்கும் நமதுபடை பாதையின் தடைகள் யாவும் கடந்து தோள்கள் தட்டி நடைபோடு வேதனை வலிகள் யாவும் மறந்து சேர்ந்து நடநீ படையோடு படையோடு நடைபோடு படையோடு நடைபோடு ஆயிரம் ஆயிரம் இலட்சியம் நெஞ்சில் அத்தனை இலக்கும் தொட்டிடலாம் பாய்கிற வேங்கையின் வீரியம் உண்டு வெற்றிக் கொடிநாம் நட்டிடலாம் தகுதிகள் இருக்கு மகுடங்கள் உனக்கு தயக்கங்கள் ஏனோ ...

உந்தன் கனவென்ன?

முகிலின் கனவுகள் மழையானால் மழையின் கனவுகள் நதியானால் அகலின் கனவுகள் ஒளியானால் அகமே உந்தன் கனவென்ன? யாழின் கனவுகள் ஸ்வரமானால் ஸ்வரங்களின் கனவுகள் இசையானால் வாழையின் கனவுகள் கன்றானால் வாழ்வே உந்தன் கனவென்ன? கடலின் கனவுகள் முத்தானால் நித்திலக் கனவுகள் ஒளியானால் மடலின் கனவுகள் பதிலானால் மனமே உந்தன் கனவென்ன? தோணியின் கனவுகள் துடுப்பானால் துடுப்பின் கனவுகள் திசையானால் காணிநிலம் கவி கனவானால் கூறக உந்தன் கனவென்ன? எல்லார் மனதிலும் கனவுண்டு கனவுகள் அனைத்துக்கும் வடிவுண்டு சொல்லாக் ...
More...More...More...More...