படையோடு நடைபோடு
படையோடு நடைபோடு

வாழத்தானே பூமிக்கு வந்தோம்
வெற்றிகள் குவித்திட ஏதுதடை
தோழா நாமும் தோற்பதும் இல்லை
தொடர்ந்து நடக்கும் நமதுபடை

பாதையின் தடைகள் யாவும் கடந்து
தோள்கள் தட்டி நடைபோடு
வேதனை வலிகள் யாவும் மறந்து
சேர்ந்து நடநீ படையோடு

படையோடு நடைபோடு
படையோடு நடைபோடு

ஆயிரம் ஆயிரம் இலட்சியம் நெஞ்சில்
அத்தனை இலக்கும் தொட்டிடலாம்
பாய்கிற வேங்கையின் வீரியம் உண்டு
வெற்றிக் கொடிநாம் நட்டிடலாம்

தகுதிகள் இருக்கு மகுடங்கள் உனக்கு
தயக்கங்கள் ஏனோ மனதோடு
கனவுகள் விதைத்து காரியம் நிகழ்த்து
வானம் உந்தன் கையோடு

படையோடு நடைபோடு
படையோடு நடைபோடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *