
2026 நவராத்திரி கவிதைகள் 9
ஈர மண்ணில் விளைவதெல்லாம் ஈஸ்வரி பிரசாதம்
ஈகை மனம் அம்பிகை இருக்கும் சன்னிதானம்
கார்முகிலின் திரட்சி எல்லாம்
காளி தரும் விதானம்
காடு நிறை பசுமை எல்லாம்
கன்னி அவள் ரூபம்
காணும் திசை அத்தனையும் காட்சி என்று விரிவாள்
கண்மூடும் போதினிலும் கனவினிலே நிறைவாள்
பேணுவதும் வதைப்பதுமாய் பிச்சி நகை புரிவாள்
பேறு நூறு அள்ளித் தந்து பார்க்கும் முன்னே ஒளிவாள்
அத்தனைக்கும் சாட்சியவள் ஆனபோதும் மௌனம்
பித்தனுக்கு ராணி அவள் பிரபஞ்சம் மீது கவனம்
சித்தர்களின் வாலை அவள் செய்யும் லீலை அதிகம்
முக்தி தரும் மூலம் அவள் முக்கண்ணியே சரணம்
_ மரபின் மைந்தன் முத்தையா




