2026 நவராத்திரி கவிதைகள் -8

மூன்று விழி திறந்திருக்கும் மோகினி
மூலக்கனல் தூண்டுகிற யோகினி
தோன்றி வந்த அதிசயமோ தேவிநீ
தொழுத கையில் வரம் அருளும் ராணி நீ

லிங்க வடிவாய் எழுந்த பைரவி
லீலைகளை ஆக்குவிக்கும் பைரவி
எங்கெங்கும் நிறைந்து நின்றாய் பைரவி
எங்கள் வாழ்வின் காவல் நீயே பைரவி

நாளும் உன்னை ஆயிரம் பேர் நாடுவார்
நாயகி உன் நாமம் சொல்லிப் பாடுவார்
தோளில் ஏற்றி பவனி வந்து ஆடுவார் தோய்ந்த பக்தி பொங்கப் பொங்க கூடுவார்

மங்கலங்கள் நிகழ்வதும் உன் முனம் மறைந்தவர்க்கு சடங்குகளும் உன் முனம்
சங்கமங்கள் அத்தனையும் உன் வசம்
சாதிக்கவோ சோதிக்கவோ திருவுளம்

– மரபின் மைந்தன் முத்தையா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *