Blog

/Blog

சிரிப்பெனப்படுவது…

“கலகல” வென்று சிரித்தால் என்ன கவலை வரும்போது “சிடுசிடு” வென்று இருப்பதாலே எதுவும் மாறாது ஒருசில நாட்கள் சூரியன் தூங்கும் ஒருசில நாட்கள் தவறாய்ப்போகும் நடக்கும் தவறு நமது லீலை சிரித்து விட்டுத் தொடர்க உன் வேலை பிடித்து வைத்த களிமண்போல இருக்கக் கூடாது சிரித்துவிட்டால் இதயக்கோவிலில் குப்பை சேராது பாதையின் வளைவு வழியைக் காட்டும் புன்னகை விளைவு வலியைப் போக்கும் வேதனை இல்லா வீடுகள் இல்லை வாழ்வோ தாழ்வோ நிரந்தர மில்லை மனசைக் கொட்டிக் கவிழ்க்கும் ...

மும்மத வேழமாய் இங்கிருந்தான்

மூடிக் கிடந்த குளிர்பெட்டி – அதில் மூச்சினைத் தொலைத்துக் கிடந்தானே பாடி முடிந்த கீர்த்தனையாய் – எங்கள் பாட்டுடைத் தலைவன் தெரிந்தானே மேடுகள் ஏறிய ஜீவநதி – நெடும் மௌனத்தில் தூங்கிய தருணமிது கூடு கிடத்தி சிறகடித்தான் – ஒரு கனல்பறவை கொண்ட மரணமிது மீசை வருடும் இருகரங்கள் – அவன் மார்புக் கூட்டினில் கோர்த்திருக்க வீசும் வெளிச்ச விழியிரண்டும் – ஒரு விடுகதை போலத் துயின்றிருக்க பேசி உலுக்கிய இதழிரண்டும் – ஒரு பிரளய முடிவென ...

குதிரையைத் தட்டுங்கள்

காதில் விழுந்த கேலிச் சொற்களைக் காற்றில் எறியுங்கள் வீசிய பந்தாய் திரும்பிப் போகும்.. விட்டுத் தள்ளுங்கள் வாதம் செய்பவர் வழியில் வந்தால் விலகிச் செல்லுங்கள் வாழ்வில் நினைத்ததை அடைவதன் மூலம் வெற்றி கொள்ளுங்கள் குறுக்குப்பாதை இருக்கிறதென்றால் காதுகள் பொத்துங்கள் குறிக்கோள் எட்ட நேர்வழி போதும் குதிரையைத் தட்டுங்கள் வெறுக்கத் தக்கவர் வீண்சொல் தெருவில் வீசிச் செல்லுங்கள் விதைத்தவர் தமக்கே முள்ளாய் போகும் விளக்கிக் கொள்ளுங்கள். ஊக்கம் கொஞ்சம் குறைந்தால் கூட உடனே பாருங்கள் உங்களை நீங்கள் நம்புவதாலே ...

மனிதர்கள் தான் உலகம்

யாரோ உருட்டிய பகடையிலே ஏதோ விழுவதா உன்வாழ்க்கை? ஊரோ உலகோ கொடுப்பதல்ல உனக்குள் இருப்பதே உன்வாழ்க்கை நீரோ நெருப்போ எதுவரினும் எல்லாம் நமது செயலாலே போரோ புகழோ எல்லாமே பழகும் நமது இயல்பாலே பத்து நிமிடம் பேசியதும் பழக சிலரிடம் பிடிக்கிறது எத்தனை வருடமாய் தெரிந்தாலும் ஏனோ சிலரை வெறுக்கிறது வித்தைகள் காட்டத் தேவையில்லை வெளிப்படையான பேச்சிருந்தால் முத்திரை மனங்களில் பதித்திடலாம் மனிதரை நம்வசம் ஈர்த்திடலாம் வெள்ளைப் பேச்சால் வெற்றி வரும் வெகுளிச் சிரிப்பால் வெற்றி வரும் ...

விசுவம் எங்கும் அவன்நாதம்

கருவி இசைத்துக் கற்றானா கருவில் இருந்தே பெற்றானா சரிகம பதநி சுரங்களெல்லாம் சுடர்விரல் நுனிகளில் உற்றானா வரிகளில் இசையைக் கண்டானா வானின் அமுதம் தந்தானா ஒருமுறை வந்த இசை மன்னன் உலகுக்கு மீண்டும் வருவானா ஆர்மோனியத்தின் ஆளுமையாய் அமர கவியின் தோழமையாய் வேறொன்றெதுவும் அறியாமல் வேர்விட்டிருந்த மேதைமையாய் தாரா கணமாய் ஒளிர்ந்தானே தன்னிகர் இல்லா எம்.எஸ்.வி பாரோர் அழுது கேட்டாலும் பரமன் மீண்டும் தருவானா நாடக உலகில் நுழைந்தவனை நாளும் பாடுகள் பட்டவனை மூடச் சிலபேர் முயன்றாலும் ...

வெற்றிகள் குவித்திடு

வீசும் புயலை வெளியில் நிறுத்து பேசும் பேச்சில் பேரொளி மலர்த்து ஈசல் போலே இறகுதிராதே வாசல் திறக்கும் வாடி விடாதே தடங்கல்கள் எத்தனை தாண்டியிருக்கிறாய் மயங்கி நிமிர்ந்து மீண்டிருக்கிறாய் நடுங்கும் அவசியம் நமக்கினி இல்லை தொடர்ந்து நடையிடு! திசைகளே எல்லை ஆகச்சிறந்த ஆக்கங்கள் வளர்த்து வேகத்தை நிறுத்தும் வேதனை விலக்கு யோகம் பயின்று ஏற்றங்கள் நிகழ்த்து வாகைகள் சூடி வாழ்வினை நடத்து எல்லைகள் எல்லாம் நாமே வகுப்பது இல்லா எதிர்ப்புகள் இதயம் நினைப்பது வில்லாய் மனதை விரும்பி ...
More...More...More...More...