Blog

/Blog

வென்ற பின்னாலும் தேடு

குமுறிய மனங்களில் பிறந்தவைதான் குறிக்கோள் தொடுகிற வேகம் சமுத்திரம் கொடுத்ததை சுமந்ததில்தான் கொட்டி முழக்குது மேகம் அமைதியைப் புரட்டிடும் சம்பவங்கள் அவற்றிலும் நன்மைகள் நேரும் நிமிடங்கள் கடக்கும் பொறுமையில்தான் நினைத்தவை நிஜமாய் ஆகும். பூமியில் தோன்றிய தெய்வங்களும் பாரங்கள் சுமந்தன பாவம் சாமிகள் என்கிற போதினிலும் சாமானியராய் வாழும் ஆமையின் ஓடாய் மனமிருந்தால் ஆயிரம் தயக்கங்கள் சூழும் நாமந்த வானாய் விரிதிருந்தால் நாளும்விடியல்கள் சேரும் கிழக்கா மேற்கா எனும்திகைப்பு கதிரவன் கொண்டதும் இல்லை வழக்குகள் ஆயிரம் வளர்ப்பதுதான் ...

பாதை வகுக்கப் போராடு!

ஆயிரம் கனவுகள் அணிவகுக்கும் & நீ ஆணை பிறப்பிக்கக் காத்திருக்கும்! பாய்கிற குதிரையைத் தூங்கவிட்டால் & அது பாரம் சுமப்பதை மறந்திருக்கும்! ஓய்வெனும் பெயரில் உன்துடிப்பை & நீ ஓயச் செய்திடக் கூடாது! பாயும் நதியெனப் புறப்படு நீ & உன் பாதையை வகுத்திடப் போராடு! பாதம் பதிக்கும் உறுதியிலே & உன் பாதையின் பள்ளங்கள் மாறிவிடும்! தேசங்கள் ஏதும் நிகழ்ந்தாலும் & உன் செயலில் காயங்கள் ஆறிவிடும்! வீதிகள் யாரோ வகுத்ததுதான் & அட வாழ்வின் ...

மனிதர்கள் நடுவே

எதிர்ப்படும் மனிதர்கள் முகங்களிலே என்னென்ன தெரியுதுதேடுங்கள் புதையல் எடுக்கும் அவசரத்தில் புதிராய்த் திரிவதைப் பாருங்கள் இருப்பதில் சிலபேர் மகிழ்கின்றார் இருந்தும் சிலபேர் அழுகின்றார் சலிப்பில் பலபேர் நடக்கின்றார் சிலர்தான் முழுதாய் வாழ்கின்றார் விந்தை மனிதர்கள் சந்தையிது வேடிக்கை பார்த்தால் வேதாந்தம் சிந்தனை கொஞ்சம் ஓடவிட்டால் ஜெயித்திட அதுவே சித்தாந்தம் உங்கள் கண்களில் ஒளி நிறைத்து ஊரைச் சுற்றி வாருங்கள் உங்கள் கதையினைக் கேட்டாலே உலகம் சிலிர்த்திட வாழுங்க! ...

உடனே செய்து விடு

பூமியின் ஆயுள் என்னவென்றே -சிலர் புலம்பித் தள்ளிடுவார் சாமியின் ஆயுள் என்னவென்றும் – சிலர் சஞ்சலம் கொண்டிடுவார் ஆமிந்த உலகின் ஆயுளெல்லாம் நாம் ஆக்கும் செயல்களிலே தாமதம் இன்றி செயல்புரிந்தால் அவை தாமாய் நிலைத்திருக்கும் ஏதும் நிரந்தரம் இல்லையெனில் – அட ஏனிந்தப் பாடுகளும் வாதம் புரிந்திட நேரமில்லை – இந்த வாழ்வே ஆடுகளம் மோதிப் பார்ப்பதில் உள்ளசுகம் – அதை மேதைகள் உணர்ந்திருப்பார் ஏதும் செய்திட அறியாதோர் – தினம் ஏக்கத்தில் ஆழ்ந்திருப்பார் சின்னச் சின்ன ...

வெற்றி ரகசியம்

நேர்க்கோடுகளாய் நிமிர்ந்த வாழ்க்கையை யாரோ வளைத்தால் அது அகங்காரம்! நீயாய் வளைத்தால் அது அலங்காரம்! வளைந்து கிடந்த வில்லை இராமன் நிமிர்த்த முயன்றான் அதுவரை நியாயம். ஒடித்தான்: என்செய்? அவன் அவதாரம்!! வளைந்து கிடக்கும் கேள்விக்குறியை நிமிர்ந்து நிற்கும் வியப்புக் குறியாய் நிகழ்த்திக் காட்டுதல் நல்ல அதிசயம் வாழ்வில் அதுதான் வெற்றி ரகசியம். அரைக்காற்புள்ளியோ அடுத்தது என்ன என்கிறதயக்கத்தை எடுத்துக் காட்டும் தொடர்ப் புள்ளியாகி தொலைந்ததை மீட்கும் நிறுத்தற்குறிகளால் நிகழும் வாழ்க்கையில் வருத்தத்தைக் கழித்தால் வெளிச்சம் பெருகும் ...

கடல்

தனித்தனியாய் நாமொரு துளி துளித்துளியாய் நாமொரு கடல் தனித்தனியாய் நாமொரு கனி கனி கனியாய் நாமொரு வனம் தனித்தனியாய் அனுபவங்கள் தொகுத்துவைத்தால் சரித்திரங்கள் தனித்தனியாய் சம்பவங்கள் தொகுத்துச் சொன்னால் சாதனைகள் தனித்தனியாய் தவத்திலிரு வரம்கிடைத்தால் பகிர்ந்துகொடு தனித்தனியாய் மூச்சடக்கு முத்தெடுத்தால் விலைக்குக் கொடு தனித்திருந்தால் முக்திவரும் தோள்கொடுத்தால் சக்திவரும் தனித்தனியாய் உலகமில்லை சேர்ந்திருந்தால் துயரமில்லை கடலெனவே எழுந்துவிடு கவலையெலாம் மறந்துவிடு தடைகளெல்லாம் நொறுங்கும்படி அலையலையாய் ஆற்றல்பெறு தீவுகளோ தேசமில்லை தனிமையிலே இனிமையில்லை வாழ்வதென்றே துணிந்துவிடு வெளியில்வந்து கலந்துவிடு ...
More...More...More...More...