தனித்தனியாய் நாமொரு துளி
துளித்துளியாய் நாமொரு கடல்
தனித்தனியாய் நாமொரு கனி
கனி கனியாய் நாமொரு வனம்

தனித்தனியாய் அனுபவங்கள்
தொகுத்துவைத்தால் சரித்திரங்கள்
தனித்தனியாய் சம்பவங்கள்
தொகுத்துச் சொன்னால் சாதனைகள்

தனித்தனியாய் தவத்திலிரு
வரம்கிடைத்தால் பகிர்ந்துகொடு
தனித்தனியாய் மூச்சடக்கு
முத்தெடுத்தால் விலைக்குக் கொடு

தனித்திருந்தால் முக்திவரும்
தோள்கொடுத்தால் சக்திவரும்
தனித்தனியாய் உலகமில்லை
சேர்ந்திருந்தால் துயரமில்லை

கடலெனவே எழுந்துவிடு
கவலையெலாம் மறந்துவிடு
தடைகளெல்லாம் நொறுங்கும்படி
அலையலையாய் ஆற்றல்பெறு

தீவுகளோ தேசமில்லை
தனிமையிலே இனிமையில்லை
வாழ்வதென்றே துணிந்துவிடு
வெளியில்வந்து கலந்துவிடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *