Blog

/Blog

ஒரு கனவின் கதை

நானொரு கனவில் திளைத்திருந்தேன் – அது நாளும் வருமென்று நினைத்திருந்தேன் தேனொரு கையில் இருக்கிறது -அதில் தேவ மூலிகை மணக்கிறது தானாய் ஒருதுளி பருகிவிட்டால் – பின்னர் தேவரும் மூவரும் வரந்தருவார் ஆனால் கைதான் அசையவில்லை – இதன் அர்த்தம் நெடுநாள் புரியவில்லை நீண்ட காலம் யோசித்தேன் – பல நூல்களைத் தேடி வாசித்தேன் மீண்டும் கனவு வரவுமில்லை -அதன் மூல ரகசியம் புரியவில்லை தூண்டும் தேடல் துரத்தியால் -எனைத் துளைத்துத் துளைத்து சிந்தித்தேன் ஆண்டுகள் கொஞ்சம் ...

மலர்ப்பாதை

பாதைகள் இல்லாப் பாறைகள் வழியே பாய்ந்து வருகிற நதியொன்று! மோதி நடந்து தரையில் விழுந்து மெல்ல வகுக்கும் வழியொன்று! “ஆதரவில்லை எனக்”கெனும் சொல்லை அழித்து நடக்கும் பேராறு! ஏதுமில்லாமல் தொடங்கி ஜெயித்தால் எழுதுமுன் பெயரை வரலாறு! உள்ளுக்குள்ளே உரமாய் இருந்தால் உலகம் உன்னை உணர்ந்துவிடும் தள்ளிய பிறகும் துடிப்பாய் எழுந்தால் தீரன் நீயெனத் தெரிந்துவிடும் வெள்ளம் போல சுவடுகள் கரைந்துவிடும் முள்ளில் நடந்த கால்களுக்காக மலர்கள் ஒருநாள் பாதையிடும் வீசும் புயல்கள் வருவதை எண்ணி விதைகள் பயந்தால் ...

எங்கள் தலைமுறை

பல்லவி உலகம் எங்கும் தினம் அழகுபொங்கும் அட எங்கள் தலைமுறையினாலெ மழலை பேசிவரும் மலர்கள் வீசும்மணம் அன்பு நிறைவதனாலே பூமி எங்கள் தாய்மடி வாழச்சொல்லும் வான்வெளி நாடு நகரம் எங்கும் பாடும் பறவைகளாம் நாங்கள் போகும்வழி புதுவழி! சரணம் சின்னச் சிறகுகளே மின்னல் பறவைகளே எந்தத் திசைகளிலும் எங்கள் உறவுகளே ஆயுதம் இல்லா உலகம் – இனி ஆனந்தமாக மலரும் சோகங்கள் எல்லாம் முடியும் – புது ஜோதியில் நாளை விடியும் எட்டுத்திக்கும் நட்புகொண்டு பாலமிடுவோம் தக்கதிமி ...

நாள் இன்று

நேற்றின் கிழிசல்கள் தைப்பந்து நாளொன்று மலர்ந்தது இன்றைக்கு காற்றில் எழுதிய கனவுகளைக் கைப்பற்றும் காலம் இன்றைக்கு தள்ளிப் போட்டது போதாதே தயங்கி நின்றதும் போதாதே துள்ளி எழுந்துன் இலக்குகளைத் தொட்டிட முனைந்தால் ஆகாதோ? செந்தளிர்ப் பூக்களில் வண்டமா ஜாதகம் எதுவும் பார்ப்பதில்லை சிந்தையில் தெளிவுகள் இருக்கும்வரை பாதகம் நிகழப் போவதில்லை தீயெனச் சுடர்விடு துணிவோடு தடைகள் சொல்லிட யாரிங்கு? நீயாய்த் தடைகள் எழுப்பாதே நினைத்ததை முடித்திடும் நாள் இன்று! ...

தடையில்லை

மரங்களின் வேர்கள் மண்ணோடு மலர்களின் வாசனை காற்றோடு உறவுகள் இருகட்டும் வாழ்வோடு உணர்வுகள் கலக்கட்டும் வானோடு இப்படி பூமியில் பிறக்கும்வரை இருந்தோம் கருவில் கண்மூடி தொப்புள்கொடியை வெட்டியபின் தானாய் வளர்ந்தோம் உறவாடி உனக்கென உறவுகள் அவசியம்தான் உயர்வுக்கு அலையும் உடனிருக்கும் தனக்கென மட்டும் வாழாதே திசைகள் எட்டும் திறந்திருக்கும் வீடு மட்டும் நீயில்லை வரவும் செலவும் நீயில்லை கூடு பறவையின் இடமில்லை குதித்துக் கிளம்பு! தடையில்லை! ...

நான்கு திசைகளும் நமதாகும்

காற்றே சிறகாய் மாறிய பின்னே கைகளில் வானம் குடியிருக்கும் நேற்றின் வலிகள ஞாபகம் இருந்தால் நேர்ப்படும் எதிலும் சுகமிருக்கும் ஆற்றின் கரையில் ஆடிய நாணல் ஆயிரம் அலைகளைக் கண்டிருக்கும் மாற்றங்கள் எல்லாம் ஏற்கிற உள்ளம் மறுபடி மறுபடி ஜெயித்திருக்கும் மீண்டும் மீண்டும் அலைகளின் நடுவே மீன்கள் துள்ளி விளையாடும் தூண்டில் முனைக்குத் தப்பிய மீன்தான் தொடர்ந்து நீந்தி உறவாடும் நீண்ட வாழ்வே நதியின் பயணம் நின்றால் எல்லாம் தடையாகும் மூண்டெழும் வேகம் வெளிப்படும் நேரம் மூன்று காலங்கள் ...
More...More...More...More...