Blog

/Blog

வயதுக்கேற்ற வாழ்க்கை

பத்தில் ஆனந்தம் புத்தகம் பயில்வது இருபதில் ஆனந்தம் காதலில் விழுவது முப்பதில் ஆனந்தம் கல்யாணம் ஆவது நாற்பதில் ஆனந்தம் நன்மைதீமை உணர்வது ஐம்பதில் ஆனந்தம் அனுபவங்கள் சேர்வது அறுபதில் ஆனந்தம் வலிபழகிப் போவது எழுபதில் ஆனந்தம் எதிரியின்றி வாழ்வது எண்பதில் ஆனந்தம் எண்ணங்கள் ஓய்வது தொண்ணூறில் ஆனந்தம் தெய்வம்போல் ஆவது நூறில் ஆனந்தம் நன்றிசொல்லிப் போவது……… ...

இறுக்கம் எதற்கு?

கோணலென்று சிலமூடர் குற்றம் சொல்வார் குழைகிறதே நெறிகிறதே என்றும் சொல்வார் ஊனமென்றும் சிலரதனை உளறக்கூடும் உணராமல் பலவகையாய் பேசக் கூடும் நாணலது காற்றினிலே வளையும் போக்கை நாலும்தெ ரிந்தவர்கள் என்ன சொல்வார்? ஞானமென்று கொண்டாடி மகிழ்வார் – ஆமாம் நாணல்போல் வாழ்பவர்க்கு நன்மை உண்டு. எப்போதும் இரும்பைப் போல் இருப்பதென்றால் எதற்காக இதயமென ஒன்று வேண்டும்? முப்போதும் கல்போலக் கிடப்பதென்றால் மூச்சுவிட எதற்காக முயல வேண்டும்? இப்போதும் அப்போதும் மாற்றம் நூறு ஏராளம் என்பதனை உணர வேண்டும் ...

முயலுக முனைப்போடு

எட்டிப் பிடிக்க வானம் உண்டு எத்தனை பேரிங்கு தாவுகிறார்? கட்டி எழுப்பக் கோட்டைகள் உண்டு கனவுடன் வாழ்பவர் ஆளுகிறார் முட்டி முளைக்கும் தாவர முயற்சி மனிதர்கள் பலருக்கும் இருப்பதில்லை வெட்டிவிட்டாலும் வளரும் முனைப்பு வந்தால் மனிதன் தோற்பதில்லை. ஆகாயத்தில் மழையும் வெயிலும் அதிலே யாருக்கு முரண்பாடு போகும் வழியில் பகையும் நட்பும் பூமியில் அதுதான் ஏற்பாடு ஆகாதவர்கள் அவரிவர் என்பவர் அடைந்து கிடப்பார் வீட்டோடு தாகம் இருப்பவர் துணிந்து நடப்பார் நினைத்ததை முடிப்பார் துணிவோடு ஏமாற்றங்கள் எதிர்ப்படுமென்றே ...

கறுப்பு வெள்ளை

கறுப்பு வெள்ளை புகைப்படத்தில் கனவின் வண்ணம் நூறு! கறுப்பு வெள்ளை திரைப்படத்தில் காவியங்கள் நூறு! கறுப்பு வெள்ளை கனவுகள்தான் காணுகின்றோம் நாமும்! கறுப்பு வெள்ளை சித்திரங்கள் காலம் தாண்டி வாழும்! வண்ண வண்ணப் பூக்கள் உண்டு வேரின் வண்ணம் என்ன? கண்கள் ரெண்டும் கறுப்பு வெள்ளை ஆன போதும் என்ன? விண்ணில் என்றும் கறுப்பு வெள்ளை வந்து போவதென்ன? எண்ணிப் பார்த்தால் சதுரங்கத்தில் இருக்கும் நிறங்கள் என்ன? வயது போக மனிதன் தலையில் வண்ணம் கறுப்பு வெள்ளை! ...

எது பெரிசு?

ஒற்றை வானம் ரெட்டைச் சிறகு பறவை தானே பெரிசு ஒற்றைப் பாறை ரெட்டைக் கைகள் உளிகள் தானே பெரிசு ஒற்றைப் பாதை ரெட்டைக் கால்கள் பயணம்தானே பெரிசு ஒற்றைக் கடவுள் ரெட்டைக் கால்கள் பக்திதானே பெரிசு எண்ணிக்கைதான் பெருமை என்றால் இதுதான் இங்கே உண்மை எண்ணிப் பார்த்தால் எல்லாம் உன்னில் நம்பி வாழ்ந்தால் நன்மை வண்ணம் நூறு வந்து போகும் வானம் போலே வாழ்க்கை எண்ணம் மட்டும் நலமாயிருந்தால் என்றும் வெற்றிச் சேர்க்கை உன்னைச் சிறிதாய் எண்ணிக் ...

கூவி அழைக்குது பார்

நிலவின் கிரணம் பருகும் விழிகள் நட்சத் திரங்கள் எண்ணட்டும் ஒளிரும் கதிரின் விடியல் பொழுதில் உலகில் நுழைந்து வெல்லட்டும் மலரும் அரும்பில் மதுவின் புதையல் மனமே வாழ்வும் அதுபோலே உலரா உறுதி உனக்குள் இருந்தால் உயர்வுகள் எல்லாம மனம்போலே பரவிக் கிடக்கும் இயற்கை அழகைப் பருகும் மனதில் பலம்கூடும் புரவிக் குளம்பின் ஒலியை நொடியின் நகர்வில் உணர்ந்தால் விசைகூடும் அருவிக் குளியல் போன்றது வாழ்க்கை அரைகுறை நாட்டம் போதாது குருவிக் கிருக்கும் குறுகுறு வேகம் நமக்கேன் இருக்கக் ...
More...More...More...More...