அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்
உலக வாழ்வின் இன்பங்களுக்குப் பொருளே அடிப்படை. அதுவே ஆதாரம்.ஆனால் அதுதான் எல்லாமுமா என்றால் இல்லையென்றே சொல்ல வேண்டும்.பொருளின் பெருமை பேசும் திருக்குறள் ஒன்று. “பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்ல தில்லை பொருள்.” இதன் பொருள் என்ன? பொருட்படுத்தத்தக்க தகுதிகள் ஏதுமில்லாதவர்களைக் கூட பொருட்படுத்தத் தக்கவர்களாக மாற்றும்பொருட்செல்வத்தை விடவும் பெருமை வாய்ந்தது வேறேதுமில்லை. திருவள்ளுவர் இப்படிச் சொல்வாரா? “பொருட்செல்வம் பூரியார் கண்ணும்உள” என்று சொன்னவரல்லவா அவர்? அப்படியானால் இந்தக்குறளை நாம் எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும்?எனக்குத் தோன்றுவது ...
அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்
வானவர்களுக்கு வாய்க்காத பெருமையெல்லாம் மண்ணில் உள்ள மனிதர்களுக்கு அபிராமியால் அருளப்பட்டிருப்பதை சொல்லிக் கொள்வதில் அபிராமி பட்டருக்கு அலாதியான ஆனந்தம். பிறைநிலா நிலவின் பிளவு. அந்தப் பிறைநிலாவின் வாசன் வீசும் திருவடிகள் அபிராமியின் திருவடிகள் என்கிறார். அப்படியானால் பிறைநிலவு அம்பிகையின் திருவடிகளில் பதிந்திருக்க வேண்டும். அவ்வாறெனில்,தன் தலையில் நிலவை சூடியிருக்கும் ஒருவர் அம்பிகையின் திருவடிகளில் விழுந்து வணங்கும் போது அந்த நிலவின் வாசனை அன்னையின் திருவடிகளில் பதிந்திருக்கும். ஒருமுறை விழுந்து வணங்கினால் வாசனை படியுமா என்ன? அடிக்கடி விழுந்து ...
அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்
உங்கள் மீது மிகுந்த நேசம் வைத்திருக்கும் ஒரு பெரிய மனிதரை சந்திக்க குடும்பத்துடன் போகிறீர்கள்.உங்களை வரவேற்று உபசரித்த அவர் தன்னுடைய மாளிகையில் மிக அதிகமான வசதிகள் கொண்ட தன்னுடைய அறையிலேயே உங்களைக் குடும்பத்துடன் தங்கச் சொல்கிறார். அவருக்கு நீங்கள் எவ்வளவு முக்கியம் என்று வீட்டில் இருப்பவர்களுக்குக் காட்டுவதுதான் அவருடைய நோக்கம். இப்படிச் செய்துவிட்டாரே இவர் எங்கே தங்குவார் என்று கவலையுடன்அவருடைய வேலையாளைக் கேட்கிறீர்கள்.”இது என்ன பிரமாதம்?அடுத்த தெருவிலேயே அய்யாவுக்கு ஒரு பங்களா இருக்கிறது.அவருடைய ஆலையில் அருமையான விருந்தினர் ...
அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்
அம்பிகையின் திருவடிகள் தலைமேல் சூட்டப்பட்டதால் வினைகள் முற்றிலும் நீங்குகின்றன.எனவே காலன் அருகே வருவதில்லை. இதுதான் இந்தப் பாடல் நமக்குச் சொல்கிற விஷயம். அது எப்படி என்கிறகேள்வி எழலாம்.அதற்கான முழு விளக்கத்தை அடுத்த பாடலில் அருள்கிறார்அபிராமி பட்டர். பொதுவாகவே தீவிரவாதிகள் ஊடுருவலைத் தடுக்க வேண்டுமென்றால்அவர்கள் வருவதற்கான பாதையை அடைப்பார்கள்.எந்த வழியாக எமன் வருகிறான் என்று பார்த்து அந்தப் பாதையை அடைக்கும் உபாயத்தைஉணர்ந்து கொள்கிறார் அபிராமி பட்டர். “இழைக்கும் வினை வழியே அடும் காலன்” உண்மையில் எமன் செய்வது அஞ்சல் ...
ஆனந்த் அரவிந்தாக்ஷனும் ஆட்டுக்கறி பாயாவும்
காலை ஏழரை மணிக்கே திறக்கப்படும் பாய் கடைக்குள் இருந்து அந்த நண்பர் எட்டு மணிக்கெல்லாம் சிவந்த முகத்துடன் வெளியே வந்து கொண்டிருந்தார். அவர் எதையோ முணுமுணுக்கிறார் என்று தான் முதலில் நினைத்தேன். அவர் ஓர் இசைக்கலைஞர்.(ஜான் சுந்தர் அல்ல).மேடைகளில் பாடவேண்டும் என்னும் ஆசை கொண்டவர் (இளஞ்சேரலும் அல்ல) ஆனால் அவர் சற்றுமுன் சாப்பிட்ட பாயாவின் எச்ச சொச்ச எலும்புத் துண்டுகளை தேடித்தேடி மென்று கொண்டிருந்தார். முகத்தில் உண்ட நிறைவை விட கடித்துத் துப்பிய நிறைவே காணப்பட்டது.விஷயம் வேறொன்றுமில்லை.மனிதர், ...
அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்
தன்னுடைய திருவடிகளை தலையின்மேல் அம்பிகை சூட்டியதால் என்ன நிகழ்ந்தது என்று சொல்லும் இந்தப் பாடலிலும் இதற்கடுத்த பாடலிலும் மரணமிலாப் பெருவாழ்வின் மாட்சியையும் அதற்கான மார்க்கத்தையும் உணர்த்துகிறார் அபிராமி பட்டர். கடலில் அகப்பட்டுக் கொண்டு தத்தளிக்கிற மனிதனுக்கு கரை சேர வேண்டுமெனும் ஆசை வருகிறது. அருகிலொரு கப்பல் வந்து கயிறு வீசினால் கரைசேர முடிகிறது.ஆனால் ஒரு பெருங்கடல் இருக்கிறது. அது பிறவிப் பெருங்கடல்.அலையலையாய் ஆசைகள் ஆள்கிற கடல். இந்த ஆசைக்கடலில் வரும் கயிறு பாசக்கயிறு. அது நம்மைக் கரை ...