Blog

/Blog

கிழக்கு பார்த்த வீடு

கிழக்குப் பார்த்த வீட்டில் நுழைந்தால் கீற்று வெளிச்சம் முதலில் தெரியும். அரக்குப் பட்டின் அதீத வாசனை; அதன்மேல் பிச்சி செண்பக நறுமணம்; கனக்கும் வெளிச்சம் கனலும் சுடர்கள்; ‘கலகல’ வென்று வெண்கலச் சிரிப்பு; ஒளிக்கும் ஒளிதரும் ஒய்யாரக் கருமை; ஒவ்வோர் உயிரையும் உலுக்கும் தாய்மை; துளித் துளியாக துலங்கும் அழகு; தொடர்ந்தும் தொட்டிட முடியாக் கனவு; பளிங்குக் கண்களில் படரும் குறும்பு; பக்கத் தொலிக்கும் பண்தமிழ்,பழமறை; மேலைத் திசையில் மணிவிழி பதித்து வாலையைப் பார்ப்பான் அமுத கடேசன்; ...

மாநகர் வாழ்க்கை

சொந்தம் கொள்ள ஒருநதி இல்லை சொல்லிக் கொள்ள ஒருமலை இல்லை     பந்தம் கொள்ள ஒரு வனமில்லை     பாதுகாப்பாய் மாநகர் வாழ்க்கை..      பார்த்துச் சிரிக்க உறவுகள் இல்லை      பார்க்கத் தோன்றி வருபவர் இல்லை      வேர்த்து நடக்க வயல்வெளி இல்லை      வேக வேகமாய் மாநகர் வாழ்க்கை     வழியில் பார்த்து வினவுதல் இல்லை     வணக்கம் சொல்லும் வழக்கமும் இல்லை     ...

எஸ்.எஸ்.ஆருடன் இரண்டுமணி நேரங்கள்

பாரதியார் பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பினராக இருந்த நேரம்.பல்கலைக்கழகம் சார்பில் அண்ணா நூற்றாண்டு விழாவிற்கான பதிப்புக் குழுவில் முக்கியப் பொறுப்பில் இருந்தேன். அண்ணாவுடன் பழகியவர்கள்  சிலரை நேரில் சந்தித்து அவர்கள் நினைவலைகளைப் பகிரச் செய்யும் நோக்கில் நான் சந்தித்த சிலரில் முக்கியமானவர் இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர். தொலைபேசியில் இரண்டுமுறை தொடர்பு கொண்டபோது “எழுதியனுப்புகிறேன் தம்பி”என்றார்.நினைவூட்டலுக்காக மீண்டும் அழைத்த போது அவர் துணைவியார்,”அவரு எங்கேங்க எழுதி அனுப்பப் போறாரு?நீங்க நேரில வந்து வாங்கீட்டுப் போயிடுங்க” என்றார்.. வீட்டின் பெயரே அண்ணா ...

யாரோ தேய்த்த எடைக்கல்

சின்னச் சின்ன தோல்விகளை சொல்லித் திரிவேன் நானாக “என்ன?எப்போ?”என்றபடி எதிரிகள் எல்லாம் கதை கேட்பார் இன்னும் கொஞ்சம் சுவைசேர்த்து இட்டுக் கட்டிப் பரப்பிடுவேன் தன்னை மறந்த மகிழ்ச்சியிலே தாமும் கதைசொல்லப் புறப்படுவார் “சேதி தெரியுமா” என்றவரும் சேர்த்துப் பரப்பிய கதையெல்லாம் காதில் வந்து விழும்முன்னே களத்தில் இறங்கி நடந்திருப்பேன் மீதி வெற்றிகள் எதையும்நான் மறந்தும் வெளியே சொல்வதில்லை நீதி இதிலே உண்டென நான் நீட்டி முழக்கவும் போவதில்லை நம்மைப் பற்றிப் பேசுபவர் நாக்குச் சுகத்தில் நின்றிடுவார் இம்மி ...

ஒரு சொல்

ஒருசொல் சொன்னது வானம்- அதன் ஒவ்வோர் எழுத்திலும் ஒவ்வொரு விடுகதை ஒருசொல் இசைத்தது கானம்- அதன் ஒவ்வொரு ஸ்வரத்திலும் ஒவ்வொரு பழங்கதை ஒருசொல் உரைத்தது ஞானம்-அதன் ஒவ்வோர் இடுக்கிலும் மௌனத்தின் வினாவிடை ஒருசொல் உரைத்தது காலம்-அதன் ஒவ்வோர் அதிர்விலும் ஒவ்வொரு சிறுகதை  ஒருசொல் எறிந்தது வானம்-அதில் ஒவ்வோர் உயிருக்கும் ஒவ்வொரு சேதி ஒருசொல் அடைந்தது வேதம்-அதில் ஒவ்வொரு யுகத்துக்கும் ஒவ்வொரு நீதி ஒரு சொல் சொன்னது காலம்-அதில் ஒவ்வோர் ஆணிலும் பெண்ணொரு பாதி ஒருசொல் வளர்த்தது யாகம்-அதில் ...

படகாட்டம்

பால்வெளி விரித்த படுக்கையின் விரிப்பில் நூறு சுருக்கங்கள் நீவி நிமிர்கையில் காலப் போர்வையைக் கைகளில் மடிக்கும் காதல் பெருக நின்றிருந்தாய் நீ… நிகழ்கணம் மீது நித்திரை கொண்ட என் இதழ்களில் ஏதோ எழுத வந்தவள் கீற்று வெளிச்சம் வீசிய வெய்யில் திகைக்கும் படியாய்திரைச்சீலை இழுத்தாய். அந்தக் கணமே அடர்ந்த இருளின் நதியில் இறங்கி நீந்திய உன்னைப் படகென உணர்ந்து பாய்ந்தேறியதும் துடுப்புகள் கைக்குத் தட்டுப்பட்டன.. அந்தகார இருள்மிசை துலங்கிய நட்சத்திரங்கள்  இரண்டின் வெளிச்சம் இன்னும் உந்த என்னைத் ...
More...More...More...More...