Blog

/Blog

ஏகலைவம்

( இதுவும் முகநூலில் இரண்டிரண்டு வரிகளாய் எழுதியதன் தொகுப்புதான்) ஏவிய அம்பை எதிர்கொள்ளும் போது பீஷ்மர் கொஞ்சம் பதறிப் போனார் உதறித் திரியும் துரியோதனர்க்காய் பதறும் விதுரன் பண்ணுவதென்ன.. வார்ப்படம் செய்தது தருமனைப் படைக்க வார்த்தபின் சகுனி வந்து தொலைக்க… திருதிராஷ்டிரனுக்கு காட்சிகள் இல்லை சஞ்சயன் சொல்லுக்கு சாட்சிகள் இல்லை குருஷேத் திரத்தில் குவிந்த படைகள் விஜயன் கேள்விக்கு விதியின் விடைகள் மோதத் துடிப்பவர் மூர்க்கத்தில் இருந்தே கீதையின் முதல் சொல் கண்ணன் புனைந்தான் அர்ச்சுனன் மனதை ...

+2 தேர்வு முடிவுகள்: வந்ததும் செய்ய வேண்டியதென்ன….?

+2 தேர்வு  முடிவுகள் வெளிவந்ததுமே பெற்றோர்களும் மணவர்களும் கூட்டணி அமைத்து உடனடியாக செய்ய வேண்டிய செயல்கள் சில உண்டு. 1) வருகிற தேர்வு முடிவுகளை மனதார ஏற்றுக் கொள்ளுங்கள்.மிக மிக அரிதாக,மறு மதிப்பீட்டுக்கு தேவையான சூழல் ஏற்படக்கூடிய மிகச்சிலரைத் தவிர மற்றவர்கள் “இப்படி வந்திருக்கலாமே,அப்படி வந்திருக்கலாமே” என்பது போன்ற வீண் விவாதங்களையும் பதட்டங்களையும் தவிர்த்து விடுங்கள். 2) குடும்பத்துடன் அமர்ந்து சில நிமிடங்கள் கண்மூடி பிரார்த்தனை செய்யுங்கள். முன்னதாகவே கல்லூரி விண்ணப்பங்களை வாங்கி வைத்திருப்பீர்கள். இப்போது மதிப்பெண்கள் ...

கிருஷ்ண காந்தம்

(முகநூலில் இரண்டிரண்டு வரிகளாய் கண்ணனைப் பற்றி எழுதிக் கொண்டே வந்த வரிகள் கைகோர்த்து கவிதையாயின) வெண்ணெய் கனவில் கண்ணன் புரள கண்ணன் நினைவில் குழலும் உருள எழுந்த சங்கீதம் எவர்செய் ததுவோ கண்ணன் செவ்வாய் உண்ட பின்னை மண்ணும் வெண்ணெய்; அறியாள் அன்னை உரலில் கட்டிய யசோதையை விடவும் குரலில் கட்டிய மீரா பெரியவள் கண்ணனை ஒருத்தி கள்வன் என்கிறாள் கள்வனை ஒருத்தி கண்ணன் என்கிறாள் ஆலிங்கனத்தில் அகப்பட மாட்டான் காளிங்கனுக்கு பயப்பட மாட்டான் கோபியர் மடிமேல் ...

தனித்தனி இல்லை

பெரிதாய் எதையும் சொல்வதற்கில்லை பெரிதென எதையும் சொல்வதுமில்லை சிறிதாய் எதுவும் தோன்றவுமில்லை சிறுமையும் பெருமையும் அவரவர் எல்லை பொதுவாய் எதையும் சொல்வதற்கில்லை பொதுவெனசொல்பவை பொதுவும் இல்லை நதிநிலம் கடலெதும்நமக்கென இல்லை நாமில்லாமலும் நதிநிலம் இல்லை விரல்களுக்குள்ளே வித்தைகள் இல்லை வித்தையில்லாத விரல்களும் இல்லை நிரல்களை நம்பி நிமிடங்கள் இல்லை நிகழ்கணம் இருக்கையில் நிமிடங்கள் இல்லை எவரும் எதையும் மாற்றுவ தில்லை எவருக்கும் எதுவும் மாறுவ தில்லை தவறோ சரியோ தொடருவதில்லை தவறும் சரியும் தனித்தனி இல்லை ...

காது கொடுத்துக் கேளுங்கள்

“வீணைகள்” என்னும்சொல்லில் தொடங்கும் விடுகதைகள் எழுதிக் குவிக்கிறேன் ராவண குணத்தின் உருவகமாய் ராட்சச அதிர்வின் எதிரொலியாய் ஆணவத்தால் கயிலாயத்தை அசைத்தவன் சிக்கிய அழுகையாய் மாளிகை தன்னில் மண்டோதரியின் மஞ்சத்தில் எழுகிற விசும்பலாய் அபசுரம் கூட அழகாய் ஒலிக்கும் அசுர சாதக அதிர்ச்சியாய் தபத்தில் கிடைத்த தனிப்பெரும் வரத்தால் தருக்கித் திரியும் தலைக்கனமாய் விபத்துப் போல வீசிய காற்றில் விதிர்க்கும் நரம்பில் வரும் இசையாய் கனத்த மகுடத்தைகழற்ற மறுத்து சயனத்தில் தவிக்கும் சங்கடமாய் மாயமான்களின் உற்பத்திச் சாலையில் மாரீசன்களின் ...

அந்தப் புதிர்

திரளும் முகில்கள் தயங்கி நடக்கும் உருளும் தேர்களாய் உயரே அசையும். எந்தப் பரப்பில் எந்த நொடியில் விழுவதென்றே வியூகம் அமைக்கும். சொந்த முடிவா?சந்தர்ப்ப வசமா? எந்த வகையிலோ இறங்கத் தவிக்கும். எம்மழை எவ்விடம்…என்பது எவர்வசம் அந்தப் புதிர்தான் ஆதிப் பரவசம். ...
More...More...More...More...