Blog

/Blog

அந்தக் கனவில் அவள்மட்டும் இருந்தாள் ….

வந்தவர் போனவர் வகைதெரியாமல்  சொந்தம் பகையின் சுவடறியாமல்  சந்தடி ஓசைகள் சிறிதுமில்லாமல் செந்துர ஒளியாய் சந்திரப் பிழிவாய்……    அந்தக் கனவில் அவள்மட்டும் இருந்தாள்  செந்நிறப் பட்டில் சூரிய ஜரிகை  கண்கள் மூன்றினில் கனிகிற மழலை  பொன்னொளிர் திருவடி பொலிகிற சலங்கை  தன்னிழல் மடியிலும் தாய்மை ததும்ப..   அந்தக் கனவில் அவள்மட்டும் இருந்தாள்   ஏதுமில்லாத ஏக்கத்தின் முடிவாய்  பாதையில்லாத பயணத்தின் தெளிவாய்  பேதமில்லாத பார்வையின் கனிவாய்  வேதம்சொல்லாத விடைகளின் வடிவாய்..  அந்தக் கனவில் அவள்மட்டும் இருந்தாள்  ...

எங்கள் இறைவா சரணம்

களிற்று வடிவே கலியின் முடிவே கண்ணிறை அழகே சரணம் ஒளிக்கும் ஒளியே ஓமெனும் ஒலியே ஒப்பில் முதலே சரணம் துளிர்க்கும் தருவில் தோன்றும் தளிரே துணையே திருவே சரணம் களிக்கும் மகவே கருணைக் கனலே கணபதி  நாதா சரணம் சந்தம் செழித்த செந்தமிழ் உகந்த சந்தனப் பொலிவே சரணம் தந்தம் ஒடித்த தயையே எங்கள் தலைவிதி அழிப்பாய் சரணம் விந்தை நிகழ்த்தும் வித்தக நலமே வெற்றியின் தலைவா சரணம் சிந்தை திருத்தி ஆலயமென்றால் சரியென்று நுழைவோய் சரணம் ...

மக்கள் தொலைக்காட்சியில் என் புதிய நிகழ்ச்சி

இதுவரை மக்கள் தொலைக்காட்சியில் மகான்கள் பற்றி பேசி வந்தேன்…இனி திங்கள் முதல் வெள்ளி வரை காலை 7.50 மணிக்கு “பிறவிப் பெருங்கடல்”என்னும் தலைப்பில் பேசுகிறேன்.. பிரியமான மனிதர்களிலிருந்து பிரம்மாண்டமான ஆளுமைகள் வரை….. சின்னச் சின்ன சம்பவங்களில் இருந்து சிலிர்ப்பூட்டும் சாகசங்கள் வரை.. பலவும் பேசும் களமாய்..மக்கள்தொலைக்காட்சியின் காலை வணக்கம் நிகழ்ச்சியின் அங்கமாய்…. பிறவிப் பெருங்கடல் ...

ஞானத் தனிநிழல்

(பூஜ்யஶ்ரீ தயானந்த சரஸ்வதி சுவாமிகள்  நலம்பெற வேண்டி…) நல்லால மரமொன்று  நெடுநாளாய் இருக்கிறது சொல்லாத வேதமெல்லாம் சொன்னபடி நிற்கிறது கல்லால மரநிழலில் கால்மடித்த உபதேசி நில்லாமல் தொடங்கிவைத்த நெடுமரபின் நீட்சியது; வேதபுரப் பறவைகளும் வந்ததிலே கூடுகட்டும் சாதகப் பட்சிகளும் சங்கீதப் பாட்டிசைக்கும் ஆதாரம் வேரென்றே அறிந்துகொண்ட விழுதுகளும் பாதார விந்தம்தொழ பூமியினைத் தொட்டிருக்கும் தென்றலை வடிகட்டும்; தெளிநிலவின் பாலருந்தும்; மன்றங்கள்,  சபைகளுக்கு மரநிழலே மடிவிரிக்கும் என்ன வயதானாலும் இந்தமரம் இறைவன்வரம் நின்றொளிர வேண்டுமென நிலமிதனை வேண்டிநிற்கும் வேர்சிறிதே ...

இதுவும் சேர்ந்ததே அது

பிம்பங்கள் எதுவும் பேசவில்லை-உன் படங்களின் மௌனம் என்ன நிறம்? நம்மிடை மலர்ந்தது நேசமெனில்-அதன் நேர்த்தியும் பதமும் என்னவிதம்? இம்மியும் நெருக்கம் குறையவில்லை-இரு இதழ்களின் சுழிப்பாய் இந்த இதம் நிம்மதி தருமுன் தழுவலினை-இந்த நொடியினில் நினைத்தேன்..என்ன சுகம்! ஆற்றின் குறுமணல் கைகளிலே-கொஞ்சம் அள்ளியெடுக்கிற வேளையிலே கீற்றென உரசும் குறுகுறுப்பில்-மெல்ல கிளர்கிற புன்னகை உன்நினைவு  நேற்றின் துவர்ப்பும் தேனினிப்பும்-எந்த நொடியிலும் வெடிக்கும் கோபங்களும் ஏற்றிய ஆசையின் தீபத்திலே-அடி எண்ணெய் எப்படி வார்க்கிறது? வார்த்தைகள் எத்தனை இறைத்திருப்போம்-அதன் விளிம்பினில் மௌனங்கள் பூத்திருப்போம் ...
More...More...More...More...