Blog

/Blog

தோள்கள் தொட்டுப் பேசவா? 1(சுறு சுறு சுயமுன்னேற்றத் தொடர்)

எட்டிப்பிடிக்கும் தூரத்தில்தான் எல்லா வசதிகளும், ஆனால், தொட்டுப் பேசும் உரிமையில் பலருக்கும் தோழமை வாய்ப்பதில்லை. தோள் தொட்டுப் பேசுவது உறவுக்கும் உரிமைக்கும் அடையாளம். பரிவுக்கும், நட்புக்கும் அடையாளம். தோழனே! உனது தோள்களைத் தொட்டு நான், வாழைத்தண்டுபோல் வழவழப்பான வார்த்தைகள் சொல்ல வந்திருக்கிறேன். வாழைத்தண்டு வயிற்றுக்கு நல்லது. இந்த வார்த்தைகளோ உன் வாழ்க்கைக்கு நல்லது. நாம் ஒவ்வொருவருமே, வாழ்க்கையென்னும் கடலுக்குள்ளே சுழல்கின்ற சூறாவளிதான். நம்மில் சில சூறாவளிகள் கரைகடக்கும் முன்பே வலுவிழக்கின்றன. தடைகளை உடைக்கும் உற்சாகத்தோடு புறப்படும் உள்ளங்கள் ...

இரண்டாயிரம் ஆண்டுகள் முன் “இதய தெய்வம்”

ஓர் அரசன் தன் குடிகளை சரியாகப் பராமரித்து காப்பாற்றினால் அவர் குடிமக்களுக்கு கடவுள் போன்றவர் என்பதை திருவள்ளுவர் முன்மொழிந்தார். “முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்(கு) இறையென்று வைக்கப்படும்” என்கிறார். இனியன செய்தால் இதய தெய்வமென்று நேரடிப் பொருள் எடுக்க வாய்ப்பான திருக்குறள். பொதுவாகவே ஆட்சியாளர்கள் ஆண்டவனின் அம்சமாகக் காணப்படுவது வழக்கம். “திருவுடை மன்னரைக் காணின் திருமாலைக் கண்டேனே” என்று ஆழ்வார் பாடுகிறார். இது அரசனை மகிழ்விக்கும் கருதுகோள் அல்ல.அரசனின் கடமையை உணர்த்தும் அணுகுமுறை. எத்தனையோ விதமான மனிதர்களை ...

குழந்தை பாடும் தாலாட்டு

ஒரு குழந்தையின் பார்வையில் ஒவ்வொரு தினமும் தாயிடம் தொடங்கி தாயிடமே முடிகிறது. மூன்று வயதிலேயே திருவருட் தொடர்பும் உமையம்மையின் திருமுலைப்பால் அருந்தும் பேறும் பெற்ற திருஞானசம்பந்தக் குழந்தைக்கு? அம்மே அப்பா என்றழுதபோது அம்மையும் அப்பனுமாய் தோன்றி ஆட்கொண்டனர். திருவருள் பெற்ற புதிதில் பல பதிகளுக்கு தந்தையே தோள்களில் சுமந்தார். பிறகு இறைவன் சிவிகை அனுப்பினான். போதாக்குறைக்கு தந்தை முறை வைத்தழைக்க திருநாவுக்கரசராகிய அப்பரும் வந்து சேர்ந்தார். சம்பந்தக் குழந்தையுடன் அவருடைய தாயார் தலங்கள் தோறும் சென்றார் என்று ...

பசும்புல் சித்திரங்கள்- வறுமையின் பசுமை

நீங்கள்  கடந்த இருபதாண்டுகளாகக் கோவையின் இலக்கிய உலகுடன் பரிச்சயம் கொண்டவராக இருந்தால் கோவை பழநிசாமி என்னும் பெயரையோ அப்பெயர் கொண்ட மனிதரையோ ஒருமுறையேனும் கடந்து வந்திருக்கக் கூடும். விஜயா பதிப்பகத்தில்,வேனில் கிருஷ்ணமூர்த்தியின் நந்தினி அச்சகத்தில்,கோவையில் பரவலாக நடைபெறும் பற்பல இலக்கியக் கூட்டங்களில்,அவர் அடிக்கடி தட்டுப்படுவார். அணை போட முடியாத ஆர்வக்காரர். தன் சட்டைப்பையிலோ கால்சட்டைப் பையிலோ சமீபத்தில் அவர் எழுதிய கவிதையை எப்போதும் இருப்பில் வைத்திருப்பார். பாரத ஸ்டேட் வங்கியில் நல்ல பணியில் இருந்தவர்.அதன் தொழிற்சங்கத்திலும் முக்கியப் ...

லிமரிக் எனும் சுவாரசியம்

( அமெரிக்காவிலிருந்து இறக்குமதியான எழுத்துச் சரக்கு, லிமரிக். இந்த வடிவத்தில் தமிழில் எத்தனையோ ஆண்டுகளாய் லிமரிக் கவிதைகள் இயங்குகின்றன. முகநூலில் இயங்கும் லிமரிக் குழுவில் நானெழுதிய லிமரிக்குகள் சில) மிதிவண்டி பழகிவிட்டா மிகவுமது சொகுசு மிகுதியா வண்டிகளோ மார்க்கெட்டில் புதுசு அதுபோல்தான் லிமரிக்கா அதனூரா அமெரிக்கா எதுவானா என்னங்க எழுதினா கைகூடும் தினுசு   கூடையிலே சரம்சரமாய் கோர்த்தமலர் கிடக்க கூந்தலுமே காற்றினிலே கண்மறைத்துப் பறக்க கோடையிலே நடப்பாள் கூவிக்கூவி சலிப்பாள் வாடைமலர் வாசம்தாண்டி வேர்வையெங்கும் மணக்க ...

வைரமுத்து சிறுகதைகளும் ஜெயமோகன் விமர்சனமும் -4 (நிறைவுப் பகுதி)

சிறுகதையின் வடிவம்தான் அதன் வெற்றியின் மிக முக்கியமான அம்சம். பல ஆண்டுகளுக்கு முன்னர் தன் கவிதையொன்றில் “முடிக்கத் தெரியாத சிறுகதையை குறுநாவல் என்று கூப்பிட்ட மாதிரி” என்று கிண்டல் செய்தகவிஞர் வைரமுத்து தன்சிறுகதைகளை மிக நேர்த்தியாகக் கொண்டு செலுத்துகிறார் என்பது நான் வாசித்துணர்ந்த ஒன்று . இங்கு நான் செய்நேர்த்தியை சொல்லவில்லை.நிரம்பிய குடத்தை அலுங்காமல் எடுத்து இடுப்பில் வைப்பது போல,சிந்தாமல் சிதறாமல் இவரால் கதைசொல்ல முடிகிறது. திருமணத்திற்கு முன் தன் ஆண்மை குறித்து ஐயம் கொண்ட இளைஞன் ...
More...More...More...More...