Blog

/Blog

மார்கழி 6 திசையெல்லாம் சிவனே

தோழிகளிடையே ஆன உரையாடல் என்னும் எல்லை கடந்து சிந்திக்கும் போத,திருவெம்பாவையின் சூட்சுமப் பரிமாணங்கள் பலவும் புரிபடுகின்றன. “நாளை எங்களை எழுப்புவேன் என நேற்று சொல்லிச் சென்ற தோழியசின்னும் விடியவில்லையா?நாணமேயின்றி அச்சொல் எந்தத் திசையில் தொலைந்ததுவோ? வானம் நிலம் மற்றும் உளவெல்லாம் அறிவதற்கு அரியவனாகிய சிவன் தாமாக வந்தெம்மை ஆட்கொள்ளும் சீர்கழல்களைப் போற்றி வரும் எங்களுக்குன் வாசல் திறக்க மாட்டாயா?ஊனுருக மாட்டாயா? உனக்குரிய எமக்கும் பிறர்க்குமாகிய தலைவனை பாடுவாயாக” என்பது திரண்ட பொருள். இதில் “உன் வாக்கு நாணமின்றித் ...

மார்கழி 5-காட்டுவித்தால் யாரொருவர்…

வெளிப்படையாய் இந்தப் பாடலுக்குத் தென்படும் உரை,ஒரு பெண்ணைப் பழிப்பதுபோல் உள்ளது. திருமாலும் நான்முகனும் அறியா சிவனை நாம் அறிவோம் என்று இனிய சொற்களால் பொய்யுரைத்த பெண்ணே !கதவைத்திற!அண்ணும் விண்ணும் அறியவொண்ணா மகாதேவன் நம்மை ஆட்கொண்டு சீராட்ட வருகிற சீலத்தைப் பாடி சிவனே சிவனே என ஓலமிட்டு நாங்கள் வீதிவழி வருவதை நீ அறியமாட்டாயா” என்பது வெளிப்படையான பொருள். இதிலுள்ள முரண்பாட்டை நம்மால் உணரமுடிகிறது.ஒருபக்கம் மாலும் அயனும் அறியவொண்ணா இறைவனை அறிவோம் என்பதை பொய் என்கிறார்கள்.ஆனால் அந்தப் பெண்களே ...

மார்கழி 4-ஒன்றாய் ஒன்றும் பலர்

திருவெம்பாவையின் நான்காம் பாடல் இன்னொரு பெண் வீட்டு வாசலில் தொடங்குகிறது. அவளும் முத்தனைய சிரிப்பழகிதான். ஒளிவீசும் நித்திலமோ ,உறங்குவதால்,ஒளிந்திருக்கும் நித்திலமோ–ஒண் நித்தில நகையாய் இன்னும் உனக்கு விடியவில்லையா என அழைக்கிறார்கள். உடனே அவள் “வண்ணக் கிளி மொழியார் எல்லோரும் வந்தாரோ” என்கிறாள்.கிளிபோல் அழகிய மொழியுடைய தோழியர் என்பது வெளிப்படையாகத் தோன்றும் பொருள். எல்லாப் பெண்களும் ஒன்று போல் சிவநாமங்களை உரக்கச் சொன்ன வண்ணம் வருவதால் அவர்களைக் கிளிமொழியார் என்கிறாள். எல்லோரும் வந்துள்ளனரா என எண்ணிச் சொல்லுகிறோம் என்றவர்கள், ...

மார்கழி 3 அடியார்க்கு அடியார்; இப்பூங்கொடியார்

திருவெம்பாவையின் மூன்றாம் பாடலை முந்தைய இரண்டு பாடல்களின் தொடர்ச்சியாகக் காண முற்படுவோமேயானால்,வழக்கமாகப் பொருள் கொள்ளும் விதத்திலிருந்து சற்றே மாறுபட்ட சிந்தனை ஒன்று தோன்றுகிறது.வீட்டினுள் உறங்குகிற பெண்ணை கடைதிறவாய் என்று வெளியே உறங்கும் பெண்கள் கேட்க,அவர்களை பழ அடியார் என்றும் தன்னை புத்தடியோம் என்றும் அந்தப் பெண் வர்ணித்து ஆட்கொள்ள வேண்டுவதாக பொதுவாக உரை சொல்வார்கள். “பத்துடையீர்-ஈசன் பழ அடியீர்-பாங்குடையீர்” என்னும் வரி,உள்ளே இருக்கும் பெண் வெளியே நிற்பவர்களை விளிப்பது போலவும்,”புத்தடியோம்” என்று அவள் தன்னையே சொல்லிக் கொள்வது ...

மார்கழி 2- இது சுகபோகமல்ல..சிவயோகம்

ஈஷாவில் சூன்ய தியான தீட்சை பெற்ற புதிது.மதுரை மீனாட்சியம்மன் ஆலயம் சென்றிருந்தேன். தரிசனத்துக்குப் பின்னர் ஓர் ஓரமாக தியானத்தில் அமர்ந்தேன். சில நிமிடங்கள் சென்றிருக்கும். யாரோ ஒருவர் என்னை உலுக்கி எழுப்பினார்.நான் உறங்குவதாய் எண்ணி விட்டார் போலும். கண் திறப்பதற்குள் அவரைக் காணவில்லை. பக்தர்கள் ஒருவரையொருவர் தவறாகப் புரிந்து கொள்வது பலகாலமாய் உள்ளதுதான். இங்கே ஒரு பெண் உறங்குவதாய் நினைத்து இன்னொருபெண் தோழியருடன் வாயிலில் நின்று எள்ளி நகையாடுகிறாள். ” சோதிமயமான பரம்பொருளாகிய சிவபெருமான்மேல் உனக்குப் பாசமென்று ...

மார்கழி-1-ஏன் மயங்குகிறாள் இந்த மாது?

மார்கழியின் விடியற்காலைகளை பாவையர் கோலங்களும் பாவை பாடல்களும் புலர்வித்த காலங்கள் உண்டு..பெண்கள் கூடி பெருமான் பெருமை பேசி நீராடப் போவதாய் பாவை பாடல்களின் கட்டமைப்பு. இது சங்க இலக்கியங்களின் “தைந்நீராடல்” மரபின் நீட்சி என்பார்கள். பாவை பாடல் ஒவ்வொன்றையும் பல்வேறு நிலைகளில் காட்சிப்படுத்திப் பார்ப்பது அவரவரின் பக்குவத்திற்கேற்றது. திருவெம்பாவையின் முதல் பாடல் அப்படி காட்சிப்படுத்திப் பார்க்கத்தக்கது.”எல்லையிலாததும் அரியதுமான” பெருஞ்சோதிப் பிழம்பாகிய சிவபெருமானின் பெருமையை நான் பேசி வருகிறேன்.கூரியதும் பெரியதுமான கண்கள் கொண்ட பெண்ணே! கண் திறந்து பார்க்கவில்லையா?உன் ...
More...More...More...More...