Blog

/Blog

ஜெயமோகன் கீதை உரை-நிறைவு- இறகின் நிறங்கள்

கீதை தொடர் உரைகளின் நிறைவு நாளில் முந்தைய மூன்று நாட்களின் உரைகளை முதலில் தொகுத்துச் சொன்ன ஜெயமோகன் கீதையை வாசிக்கும்முறை பற்றி விரிவாகச் சொன்னார்.மனனம் ஸ்வாத்யாயம்,தியானம்என்னும் படிநிலைகளுக்கு உட்படுத்தி,ஒரு பிரதியை அணுகும்போது வாசிப்பனுபவம் முழுமை பெறுவதை விளக்கினார். அப்போது எனக்கொன்று தோன்றியது. தியன சுலோகங்கள்,அல்லது நம் முயற்சியின்றி நமக்குள் ஒலிக்கத் தொ0டங்கும் மூத்தோர் வரிகள்,தனி கவனத்திற்குரியவை.எப்போதோ அவை எழுதப்பட்டு விட்டாலும் நமக்கென்று முதிர்கணமொன்றில் அருளப்படுபவை. ஆயிரமாயிரம் வரிகளைக் கடந்து வருகையில் நம் சூழலுக்கொப்பவோ நம் தகுதிக்கொப்பவோ சில ...

கீதை குறித்து ஜெயமோகனின் உரை-3- ஒளி ஊடுருவும் தருணம்

ஜெயமோகனின் மூன்றாம் நாள் கீதை உரையினை வலையேற்றத்தில் கேட்டேன்.முரண்பாடுகளுக்கும் முரணியக்கத்துக்கும் நடுவிலான வேறுபாடுகளை விரித்துரைக்கும் இந்த அமர்வு நிறைய விவாதங்களை முன்னெடுக்கும் தளமாக அமைந்ததில் மகிழ்ச்சி. விவாதத்திற்கு முன்னதாக இந்த உரையின் முக்கியமான பகுதிகள் என்று நான் கருதும் சிலவற்றைப் பதிவு செய்கிறேன். தன் வாழ்வில் தொடராக நிகழ்ந்த சோக நிகழ்வுகளால் உயிராகிய காண்டீபத்தை தண்டவாளத்தில் கிடத்தமுற்பட்டு புறப்பட்டுப் போன புலர்காலைப் பொழுதில் ஒரு புல்லினில் வெய்யில் ஊடுருவிய காட்சி “கீதை முகூர்த்தம்” நிகழ்ந்ததைக் குறிப்பிடும் இடமும் ...

ஜெயமோகனின் கீதை உரை:-பொன்படகும் பொன்பட்டு நூலும்

கீதையின் இடம் எது என்னும் கேள்வியில் தொடங்கி,கீதையின் இடம் இது என்னும் சுட்டுதலில் நிறைவுற்றது ஜெயமோகனின் இன்றைய உரை.மிக மெல்லிய தாள்களில் தங்க டாலருக்குள் பொதியப்பட்ட கீதையை, ஜோதிடர் சொல்கேட்டு கழுத்தில் அணிந்திருந்த ஒருவரைப் பற்றிய சித்திரத்துடன் தொடங்கியது உரை. உரையின் போக்கில்,மெய்யியலின் ஆகப்பெரிய பிரம்மாண்டமான இந்து தர்மம்,ஜோதிடனின் வழிகாட்டுதலில் ஆலயங்களைத் தேடிப் போகும் கூட்டத்தை உருவாக்கியிருக்கும் சூழலில் இந்நிலைக்கொரு மாற்றாய் கீதை திகழும் என்னும் முரணழகு மிளிரும் தன் நம்பிக்கையையும் அவர் முன் வைத்தார். கீதைக்கு ...

ஜெயமோகனின் கீதை உரை தொடர்பாக

கோவையில் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஒருங்கிணைப்பில் ஜெயமோகன் கீதை குறித்து நிகழ்த்தும் மூன்று நாட்கள் தொடர் நிகழ்ச்சியின் முதல் நாள் உரையை வலையேற்றத்தில்தான் கேட்க முடிந்தது. கீதையை அணுகுவதற்கான மாற்று மனநிலையை இந்த உரையில் ஜெயமோகன் முன்வைக்கிறார். கீதை சொல்லும் நால்வருணம் சாதி சார்ந்ததல்ல கருங்கல்லில் தொடங்கி,விலங்குகள் மனிதர்கள் என அனைத்துமே நால்வகைகளாக அன்று பிரிக்கப்பட்டன என்கிறார். கீதையை வாசிக்காதவர்களுக்கும் வாயில் வருகிற சொல் கர்மயோகம். அது செயலைக் குறிப்பதல்லசெயல் தொடர்பு முடிவிலி என்கிறார். முடிவிலாச் செயல் ...
எம்.எஸ்.உதயமூர்த்தி-சில நினைவுகள்

எம்.எஸ்.உதயமூர்த்தி-சில நினைவுகள்

தமிழ்நாடு உணவகத்தின் கூட்ட அரங்கில் ஏராளமானவர்கள் கூடியிருந்தார்கள். பெரும்பாலானவர்கள் கோவையையும் அதன் சுற்றுப்பகுதிகளையும் சேர்ந்த கல்லூரி மாணவர்கள்.அனைவரும் அடிக்கடி வாயிலைப் பார்த்துக் கொண்டிருந்தனர். வகுப்பறைக்குள் நுழையும் பேராசிரியர் போல் கால்சட்டைக்குள்உள்ளிடப்பட்ட மேல்சட்டையுடன் சிரித்த முகமாய் நுழைந்தார் எம்.எஸ்.உதயமூர்த்தி.சுற்றிலும் வெள்ளைச்சட்டையில் ஏராளமான பிரமுகர்கள்.மேடையின் பின்புலத்திலிருந்த எளிய பதாகையில் “மக்கள் சக்திஇயக்கம்”என்று எழுதப்பட்டிருந்தது. அப்போதே பிரபலமாயிருந்த கல்லூரி மாணவப் பேச்சாளர் ஜெயஸ்ரீ பத்ரிநாத் மேடைக்கு வந்து அறிவிக்க மற்ற பொறுப்பாளர்களுடன் மேடையேறினார் எம்.எஸ்.உதயமூர்த்தி. அவர் பேசுவதற்காக ஒலிபெருக்கி முன்னர் வந்தபோது ...
More...More...More...More...