Blog

/Blog
சஷ்டி நாயகன் சண்முகன்-5-வேல்முருகன்

சஷ்டி நாயகன் சண்முகன்-5-வேல்முருகன்

திருவாசகத்தில் பெரும்பாலானவர்களுக்கு நன்கு தெரிந்த பகுதி,சிவபுராணம். அதில் ஒரு வரி,”வேதங்கள் ஐயா எனவோங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே”.இந்த வாக்கியம் முருகனுக்கும் முருகன் கை வேலுக்கும் மிகப்பொருத்தம்.வேதங்களுக்கு அப்பாற்பட்டவன் அவன் என்பதால் “சுப்ரமண்யோஹம்” என மும்முறை விளித்து வணங்கின. அவன்கை வேல்,ஆழ்ந்தது.அகன்றது.நுண்ணியது. வேலின் வீர தீரபராக்கிரமங்கள் எவ்வளவோ. அவை அனைத்திலும் மேம்பட்டது ஒவ்வொரு பக்தருக்கும் உடன்வரும் துணையாய் வேல் திகழ்கிறது என்பதை அருளாளர்கள் திரும்பத் திரும்ப வலியுறுத்துவதுதான். கடலை வற்ற வைத்தவேல், கிரௌஞ்ச மலையைப் பிளந்த வேல், மாமரத்தைப் பிளந்த ...
சஷ்டி நாயகன் சண்முகன்.4. அறுபடை முருகன்

சஷ்டி நாயகன் சண்முகன்.4. அறுபடை முருகன்

சமீபத்தில் எழுத்தாளர் திரு.ஜெயமோகனுடனான அலைபேசி உரையாடலில் முருக வழிபாடு பற்றிப் பேச்சு வந்தது.பாரதம் முழுவதும் இருக்கும் முருக வழிபாட்டை சுட்டிய அவர், முருகனை தமிழ்க்கடவுள் என்று சொல்வது பற்றிய விவாதங்களை ஓரிரு சொற்களில் சுட்டினார். தொல்காப்பிய காலத்திற்கு முன்பிருந்தே முருகவழிபாடு தமிழகத்தில் உண்டு. சிவனை வடநாட்டினர் “ஹர் ஹர் மஹாதேவ்வ்” என்னும் முன்னரே அவன் தென்னாடுடைய சிவனாக இருந்திருக்கிறான். சிவன் ,முருகன் இருவருமே தமிழ்ச்சங்கத்தில் பங்காற்றியிருக்கிறார்கள். “கூடல் புரந்தொருகால் கூடல் புலவரெதிர்  பாடல் அறிவித்த படைவேள்“ என ...
“குங்குமக் கோலங்கள் கோயில் கொண்டாட…’

“குங்குமக் கோலங்கள் கோயில் கொண்டாட…’

இன்று இளங்காலையில், கோவை பந்தயச்சாலையில் நடை.காதுகளில் இசை ஒலிப்பான் பொருத்தியிருந்தேன். வாணி ஜெயராம் வாரி வழங்கிக் கொண்டிருந்தார். அவருடைய பாடல்கள் நம்மோடு பேசும்.முற்றிலும் புதிய மொழியில், இசையின் புதுப்புது நிறங்களில்… ஒரு பாடலின் நிறைவுக்கும் மறு பாடலின் தொடக்கத்திற்கும் நடுவிலான எதிர்பார்ப்பில் ஒளிர்கிறது எட்டாம் ஸ்வரம். வசீகர ஆலாபனைக்குப் பிறகு வெய்யிற்கீற்றாய் வருகிறது பல்லவி… “குங்குமக் கோலங்கள் கோவில் கொண்டாட கோதை நாயகன் வருவானடி கோடிக் காலங்கள் நான் தேடி நின்றேன் அவனை அறிவேனடி குங்குமக் கோலங்கள் ...
சஷ்டி நாயகன் சண்முகன்.3.குரு முருகன்

சஷ்டி நாயகன் சண்முகன்.3.குரு முருகன்

குழந்தைகள் உலகம் நல்லறங்களால் நிறைந்தது. பிள்ளைகளுக்கு ஏற்படும் முதல் அதிர்ச்சியே பெரியவர்கள் பொய் சொல்வார்கள் என்பதுதான்.பச்சை விளக்கு வருமுன் சீறிக்கிளம்பும் வாகனங்களை,வெளிப்படையான விதிமீறல்களை ஒரு குழந்தை தெய்வக் கண்கொண்டு,கண்டு மிரள்கிறது. குழந்தைகளும் தெய்வங்கள் என்பது இதனால்தான்.இப்படி இருக்கும்போது தெய்வக் குழந்தைகளின் உறுதிப்பாட்டை கேட்கவா வேண்டும்.எதையும் தொடங்கும் முன்னர் விநாயகரை வணங்க வேண்டும் என்பது மரபு.திரிபுரங்களை எரிக்கக் கிளம்பிய சிவபெருமான் அந்த விதியி மீறுகிறார்.உடனே விநாயகர் அவருடைய தேரின் அச்சினை தூள்தூளாக்குகிறார். ‘முப்புரம் எரிசெய்த அச்சிவன் உறைரதம் அச்சது ...
சஷ்டி நாயகன் சண்முகன்.2.குழந்தை முருகன்

சஷ்டி நாயகன் சண்முகன்.2.குழந்தை முருகன்

தனித்தனியாய் சரவணப் பொய்கையில் வளர்ந்த குமர குமாரர்களை பராசக்தி அரவணைக்க ஒன்றான திருவுரு,கந்தன் என்னும் வடிவமாய் கொண்டாடப்படுகிறது. ஆறு திருவுருவங்கள் என்றாலும் ஒரே வடிவமாய் நின்றாலும்,குழந்தைக் குமரனை கொஞ்சித் தீர்க்கிறது தமிழ்.”சின்னஞ் சிறுபிள்ளை,செங்கோட்டுப் பிள்ளை சிவந்த பிள்ளை” என உச்சி முகர்கிறது. சைவ மரபில், பிள்ளையார் என்றால் முருகனைத்தான் குறிக்கும். மூத்த பிள்ளையார் என்றால்தான் விநாயகரைக் குறிக்கும். எல்லா தெய்வங்களுக்கும் பிள்ளைத் தமிழ் எழுதப்பட்டாலும்,அது வெகுவாகப் பொருந்துவது முருகனுக்குத்தான்.முருகனைப் பற்றியே எத்தனையோ பிள்ளைத் தமிழ் நூல்கள் எழுதப்பட்டிருந்தாலும் ...
சஷ்டி நாயகன் சண்முகன் 1-பாலமுருகன்

சஷ்டி நாயகன் சண்முகன் 1-பாலமுருகன்

“சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்”எனும் முதுமொழியின் நாயகன் கந்தன். பிள்ளைப்பேறு இல்லாத பெண்கள் சஷ்டியில் நோன்பிருந்து மகப்பேற்றுக்கு உரியவர்கள் ஆவது தொடங்கி மனமாகிய பையில் அருள் சுரக்கும் என்பது வரை பல தாத்பர்யங்கள் இதிலே அடக்கம். மன்மதனை எரித்த நெற்றிக்கண் வழி முருகன் உதித்தான் என்பது காமத்தை அழித்தால் ஞானம் பிறக்கும் என்பதன் குறியீடு  என்பாரும் உளர். எல்லாவற்றையும் விட முக்கியம்,முருகன் அவதரிக்கவில்லை என்பதுதான்.குறிப்பிட்ட சங்கல்பத்திற்காக, எங்கும் நிறைந்திருக்கும் ,எல்லாமாகவும் பொலிந்திருக்கும் பரம்பொருள் வடிவுகொண்டு தோன்றியது. அருவமும் ...
More...More...More...More...