வியாச மனம்-2 (ஜெயமோகனின் முதற்கனல் நூலை முன்வைத்து..)
சில ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த சம்பவம் இது.நண்பர் ஒருவரின் அலுவலகத்தில் விஜயதசமி பூஜை.அவர் வைதீக மரபில் வந்தவர். அவருடைய குடும்பத்தினரும் அவருடைய சகோதரர் குடும்பத்தினருமாக வந்து பூஜை ஏற்பாடுகளை ஒழுங்கு செய்து கொண்டிருந்தனர். இரண்டு வயது முதல் பதினான்கு வயதிலான குழந்தைகள் இருந்தனர். நிவேதனத்திற்காக வைக்கப்பட்டிருந்த இனிப்புகளையும் சுண்டல் வடைவகையறாக்களையும் பழங்களையும் தொடக்கூடாதென்று அந்த நண்பர் குழந்தைகளை எச்சரித்த வண்ணம் இருந்தார். அதேநேரம் அவருடைய சகோதரரின் இரண்டு வயதுக் குழந்தை இலையில் வைக்கப்பட்டிருந்த இனிப்பை எடுத்து வாயில் ...
சத்குரு ஞானோதயத் திருநாள்
திசையெங்கும் பொன்னொளிரத் திறந்ததொரு கதவு அசைவின்மை எனும்நதியில் அசைந்ததொரு படகு கசிகின்ற கண்ணிரண்டும் கங்கைநதி மதகு இசைதாண்டும் மௌனத்தில் எழுந்தசுக அதிர்வு பாறையின்மேல் பூவொன்று பூத்ததிந்த தருணம் மாறாத ஞானத்தின் மூலம்மேல் கவனம் கீறாமல் கீறிவிட்ட ஆக்ஞையிலே சலனம் ஆறாகப் பெருக்கெடுக்கும் ஆனந்த அமுதம் சாமுண்டி மலையிலந்த சாகசத்தின் பிறப்பு தாமென்ற எல்லையினைத் தாண்டியதோர் இருப்பு ஓமென்னும் அதிர்வினிலே ஒப்பற்ற லயிப்பு நாமெல்லாம் கரையேற நாயகனின் சிலிர்ப்பு முன்னமொரு பிறவியிலே மலர்ந்ததந்த ஞானம் பின்னுமொரு பிறப்பினிலே பெருகிவந்த ...
வியாச மனம்-1 (ஜெயமோகனின் முதற்கனல் நூலை முன்வைத்து..)
மற்ற காவியங்கள் போலன்றி,மகாபாரதம் மறுபடி மறுபடி எழுதப்படுகிறது.காலச்சூழலின் கண்ணாடியாய்,உச்சம் தொடும் படைப்பு மனங்களின் உண்டியலாய்,மகாபாரதம் திகழ்வதாலேயே யுகந்தோறும் அதில் அபூர்வ பிம்பங்கள் பிரதிபலிக்கின்றன.அழகிய மணிகள் சேகரமாகின்றன. நடந்து முடிந்த சம்பவங்களை ஒழுங்கமைக்கும் மேதைமை,அவற்றிலிருந்து நிலையான நீதிகளைக் கண்டுணர்ந்து உரக்க அறிவிக்கும்.வான்மீகி,வியாசர் போன்ற மகரிஷிகள் அவற்றை அநாயசமாய் செய்து முடித்தனர். இதிகாசங்களில் காணப்படும் சம்பவங்களை கேள்விக்குட்படுத்தத் தொடங்கும்போது,அதற்கான தர்க்க நியாயங்களில் கவனம் செலுத்தும் வாசக மனம்,காவிய அனுபவத்தை இழந்துவிடக்கூடும் என்று கருதியோ என்னவோ,அந்தப் படைப்பினால் பெறப்படும் நீதிகளை இதிகாச ...
ஶ்ரீநிவாசனின் சயனம்
கருவியும் புதிது-உன் குறுநகை புதிது கைகளின் வித்தை புதிது அருவியைப்போல வருகிற ஸ்வரங்கள் அத்தனை அத்தனை புதிது திருமலை நாதன் பெயரொடு வந்து தந்தசங் கீதம் புதிது ஒருவரும் நினையாப் பொழுதினில் மறைந்தாய் காலனுக்கேது மனது தூண்டிய விளக்காய் திகழ்கிற முகத்தில் துலங்கிய சாந்தமும் எங்கே வேண்டிய வரைக்கும் புகழினைக் குவித்தும் வணங்கிடும் பணிவும் எங்கே மாண்டலின் எனுமொரு விந்தைக் கருவியின் மாபெரும் தலைவன் எங்கே மாண்டனன் என்றதும் மருகிய மனங்கள் மயக்கத்தில் ஆழ்ந்தன இங்கே முதல்தர ...
அலகுத் தேடல்
நிறைந்து கிடக்கிற பத்தாயத்தில் வழிந்து கொண்டிருக்கிற தானியம்நடுவே தன்பெயர் பொறித்த கார்நெல் தேடி சின்னக் குருவி சமன்குலைக்கிறது. பெயர்கள் பொறிக்கும் அவசரத்தில் குருவியின் பெயர் விட்டுப் போனதாய் கைகள் பிசையும் நான்முகனுக்கு செய்வதேதெனத் தெரியவேயில்லை தத்தும் குருவியின் கண்களில் படாமல் பத்தாயத்தினுள் புழுவாய் இறங்கி கிடைக்கும் நெல்லில் குருவியின் பெயரை பொறித்து வரவே புறப்பட்டான் அவன் யாதுஞ் சுவடு படாமையினாலே பேதுற்றிருக்கும் குருவியின் கண்கள் பதுங்கி நெளியும் புழுவைப் பார்த்ததும் ஒற்றை மின்னல் ஒடி நெளிந்தது காரியம் ...
வண்ணதாசனாய் வாழுவது…..
எவரோ நீட்டும் கரம்பார்த்தும் என்கரம் பற்றிச் சிரிக்கின்றீர் தவமே அன்பாய் ஆனதனால் தானாய் மகானாய் இருக்கின்றீர் தவறோ சரியோ எனக்கேட்டால் தவறும் சரியும் ஒன்றென்பீர் திவலை நீர்த்துளி பட்டாலும் தேன்குளம் என்றே கொள்கின்றீர் வண்ண தாசன் என்பவர்க்கோ வண்ணங்கள் எல்லாம் ஒன்றேதான் வண்ண தாசனைப் படித்தவர்க்கோ விரியும் உலகம் வேறேதான் வண்ண தாசனை வாழ்த்துவது விரியும் மொட்டை வாழ்த்துவது வண்ணதாசனாய் வாழுவது வாழ்வை புதிதாய்க் காணுவது தந்தை பதித்த தடமிருக்க தமையன் விட்ட இடமிருக்க முந்தும் தமிழே ...