மெய்யிருப்பு…
அவர்களிடமிருக்கிறது அக்கினிப்பரிட்சையின் கேள்வித்தாள் அவனிடமிருப்பதோ அலைமேல் மிதப்பதற்கான சூத்திரம்…. அவர்களிடமிருக்கிறது ஆயிரம் இரைப்பைகளின் அசுரப்பசி அவனிடமிருப்பதோ ஆதிரை உடைத்த அட்சய பாத்திரம்….. அவர்களிடமிருக்கிறது தேய்த்துத் தேய்ந்த அற்புத விளக்கு அவனிடமிருப்பதோ அந்த பூதத்தின் விருப்ப ஓய்வுக் கடிதம்…. அவர்களிடமிருக்கிறது கிழக்கை மேற்கென கதைகட்டும் சாத்திரம் அவனிடமிருப்பதோ விடியலின் கிழிந்த வரைபடம்….. அவர்களிடமிருக்கிறது ஆடம்பரக் கூச்சலின் அடாவடி ஓசை அவனிடமிருப்பதோ கலைமகளின் கருணையில் கனிந்த இசை…. அவர்களிடமிருக்கிறது ஒருபோதும் உறங்கவிடாத மனச்சலனம் அவனிடமிருப்பதோ வற்றாத அமைதியின் ஆழ்ந்த மௌனம்…. ...
வயதுக்கேற்ற வாழ்க்கை
பத்தில் ஆனந்தம் புத்தகம் பயில்வது இருபதில் ஆனந்தம் காதலில் விழுவது முப்பதில் ஆனந்தம் கல்யாணம் ஆவது நாற்பதில் ஆனந்தம் நன்மைதீமை உணர்வது ஐம்பதில் ஆனந்தம் அனுபவங்கள் சேர்வது அறுபதில் ஆனந்தம் வலிபழகிப் போவது எழுபதில் ஆனந்தம் எதிரியின்றி வாழ்வது எண்பதில் ஆனந்தம் எண்ணங்கள் ஓய்வது தொண்ணூறில் ஆனந்தம் தெய்வம்போல் ஆவது நூறில் ஆனந்தம் நன்றிசொல்லிப் போவது… ( “ஆனந்தம் ஆரம்பம்” கவியரங்கில் வாசித்தது) ...
கோவையில் சித்திரை….
(சற்று முன்னர் கோவை பாலிமர் சேனலில் வாசித்த கவிதை) புத்தம் புதிதாய் இன்னோர் ஆண்டு புறப்படத் தொடங்கும் வேளையிலே சித்திரைத் திங்கள் முதல்நாள் எனது வாழ்த்துகள் ஏற்பீர் நேயர்களே காலையில் எழுந்து கண்கள் திறந்ததும் கண்ணாடி யோடு கனிகண்டு நாளெல்லாம் நல் வாழ்த்துகள் சொல்கையில் நெஞ்சில் இனிக்கும் கல்கண்டு சித்திரை வெய்யில் சூடு குறைந்து “சில்”லென்று காற்று வருகிறது கத்திரி வெய்யில் நாடு முழுவதும்… கோவையில் சூடு குறைகிறது நல்ல வெய்யில் கோவையில்-ஆனால் கொல்லும் வெய்யில் கிடையாது ...
ஒழுங்கின்மை தானே ஒழுங்கு
கடந்த சில மாதங்களாகவே கல்வி நிறுவனங்களின் ஆண்டு விழாக்களில் பங்கேற்று வருகிறேன். மாணவர்களுக்குப் பேசுவது என்பதும் ஆண்டு விழாக்களில் பேசுவதும் வெவ்வேறு தன்மைகள் வாய்ந்தவை.மாணவர்கள் மட்டுமே நிறைந்த அவையில் அவர்களுக்கு சொல்ல வேண்டியதை சொல்லலாம். பெற்றோர் மட்டுமே இருக்கும் அவையில் பெற்றோர்களுக்கானதை பேசலாம்.இருவரும் கலந்திருக்கும் அவையில் பொதுவாகப் பேச வேண்டும்.குறிப்பாக மாணவர்களை வைத்துக் கொண்டு பெற்றோர்களுக்கு பிள்ளை வளர்ப்பின் அம்சங்களைப் பேசலாகாது. சில மாதங்களுக்கு முன் பவானியில் ஆப்டிமஸ் பள்ளியின் மாண்டிஸோரி பிரிவு ஆண்டுவிழா.தை அமாவாசையை ஒட்டி ...
வாக்களிக்க வாருங்கள்
வாசல்தேடிக் கும்பிடுவோர் விரலகள் பாருங்கள்-அவர் விரல்களிலே என்ன கறை என்று தேடுங்கள் பேசும்பேச்சில் உண்மையுண்டா என்று கேளுங்கள்-ஒரு புதுவெளிச்சம் வரும்சுவடு தன்னைத் தேடுங்கள் ஆட்டம்காணும் ஆட்சியிங்கு தேவையில்லையே-வெறும் ஆள்பிடிக்கும் உத்திக்குநாம் அடிமையில்லையே ஓட்டு வாங்கி மறப்பவரைரை ஓடச் செய்யுங்கள்-நல்ல உயர்ந்த மாற்றம் தருபவரை ஆளச் செய்யுங்கள் கொள்கைகளை அடகுவைக்கும் கட்சிகள்வேண்டாம்-வெறும் கோஷ்டிகளை வளர்த்துவிடும் கட்சிகள் வேண்டாம் உள்ளபடி நல்லபடி ஆள்பவர் யாரோ-அந்த உயர்ந்தவரைக் கூட்டிவந்துஅமரச் செய்யுங்கள் வல்லரசாய் வருவதற்கு வாய்ப்பு உள்ளதா-அந்த வழியைக்கூட இதுவரைக்கும் காட்டவில்லையே நல்லரசாய் ...
மேடையில் தந்த மணிவிழா வாழ்த்து
புகைப்படம்: சுகா (இசைக்கவி ரமணன் அவர்களுக்கு ஒவ்வொரு பிறந்தநாளிலும் என் வாழ்த்துக் கவிதை சில ஆண்டுகளாய் இணைய வெளியிலே உலா வரும்.இந்தமுறை அவர் பிறந்தநாளையொட்டி”ஆனந்தம் ஆரம்பம்” என்னுந் தலைப்பில் அவருடைய மணிவிழா கவியரங்கிலேயே வாழ்த்துக் கவிதையையும் வாசிக்க முடிந்தது) “குருவென்னும் போதையில் குளிர்கொண்ட கோடையில் குடிகொண்ட கவிதை மேகம் குழுவொன்றும் இன்றியே குதூகலச் சிறுவனாய் குலவிடும் இனிய நேயம் அருளென்னும் கங்கையில் அன்றாடம் மூழ்கியும் ...