Blog

/Blog

முதன்முதலாய் காசி போன போது…3

“கங்கையிரு கரையுடையான் கணக்கிறந்த நாவாயான்” என்று குகனை அறிமுகப்படுத்துவார் கம்பர்.இன்றும் கங்கைக்கரையில் கணக்கில்லாத நாவாய்கள் நிற்கின்றன.படகுக்காரர்களும் வேட்டைக்காரர்கள் போல் வாடிக்கையாளர்களைக் குறிவைத்துக் காத்திருக்கிறார்கள் .இரண்டு மணிநேரப் படகுப்பயணத்திற்கு 250 ரூபாய் என்று பேசிப் படகேறினோம் .கங்கைக்கரையிலிருந்து நதிக்குள் படகு புகுமுகத்தில் போக்குவரத்து நெரிசல்.படகின் கயிறவிழ்த்த கையோடு முட்டிக் கொண்டு நிற்கும் பத்துப் பதினைந்து படகுகளைக் கைகளால் தள்ளிக்கொண்டே படகோட்டி கங்கைக்குள் பிரவேசம் நிகழ்த்தினார்.ஒவ்வொரு படித்துரைக்கும் “காட்” என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.உடன் வந்த நண்பர்கள் காட் கதைகள் கேட்கக் காதுகளைத் தீட்டிக் காத்திருக்க மனம் கங்கைக்குள் இறங்கியிருந்தது.ஆயிரமாயிரம் ஆண்டுகளாய்ப் பிரவாகத்தில் இருக்கும் நீர்த்தடத்தில் இறங்கியிருப்பது ,தொடர் பிறவிகளின் ஆன்மப் பயணத்தில் ஒரு மைல்கல் என்று பட்டது.  இரவு ...

முதன்முதலாய் காசி போன போது…….2

பாலத்தின் மேல் தடதடத்த ரயிலிலிருந்து பார்த்த போது, கம்பீரமான பிரவாகத்தில் இருந்தாள் கங்காமாதா.வாரணாசி ரயில்நிலையத்தில்காலை எட்டரை மணிக்கு இறங்கும்போதே வெறித்தனமான பக்தியுடன் வெய்யில் காசியை வலம்வரத் தொடங்கியிருந்தது.நாட்டுக்கோட்டை நகரத்தார் காசி விசுவநாதரின் நித்திய பூஜைக்குப் பொறுப்பேற்றிருந்ததால் தஞ்சை நகரத்தார் சங்கத்திலிருந்து கடிதம் பெற்று வந்திருந்தார் நண்பர் செழியன்.நகரத்தார் சங்கம் என்றால் யாருக்கும் தெரிவதில்லை.”நாட்கோட் சத்ரம்” என்றால் வீதியில் வெறுமனே நிற்கும் மாடுகள் கூட வாலைச் சுழற்றி வழிகாட்டுகின்றன.எண்பது ரூபாய் கேட்டார் ஆட்டோக்காரர்.அவர் கடந்த தொலைவுக்கு நம்மூரில் நிச்சயம் இருநூறு ரூபாய் கேட்டிருப்பார்கள்.ஒற்றையடிப்பாதைதான் எல்லா வீதிகளும்.சென்னை ...

முதன்முதலாய் காசி போன போது…….

(சத்குரு அவர்களுடன் காசியில் நிகழ்ந்த உரையாடலின் ஒளிப்பதிவு தற்போதுஸ்டார் விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகி வருகிறது. அது நான்காவது முறையாய் காசி சென்றபோது கிட்டிய பெரும்பேறு.2009ல் முதன்முதலாய் காசி சென்ற அனுபவங்களை அப்போது இணையக் குழுமம் ஒன்றில் எழுதியிருந்தேன்.அவை இப்போது உங்களுக்காக..)   கல்கத்தாவின் அவ்வளவு பெரிய விமான நிலையத்தில் என் கண்கள் வேறெதையும் தேடவில்லை. என் பெயர் எங்கே தட்டுப்படுகிறது என்றுதான் தேடினேன்.தேடுங்கள் கண்டடைவீர்கள் என்பதற்கேற்ப,என் பெயரையும்,உடன் வந்த நண்பர் மாரியப்பனின் பெயரையும்துவாலைச்சீட்டு ஒன்றில் (துண்டுச்சீட்டை விட ...

நாவலர்கள் நால்வருக்கு நல்ல விழா

சில விழாக்கள்,தனிமனிதர்களைக் கொண்டாடும். சில விழாக்களோ வெற்றிகளைக் கொண்டாடும்.அபூர்வமாய் சில விழாக்கள்தான் வாழ்க்கையைக் கொண்டாடும். அப்படியொரு விழாவை தமிழ் மணக்க மணக்க நிகழ்த்தியது திருச்சி நகைச்சுவை மன்றம்.நவம்பர் 24 ஞாயிறு மாலை 6.00 மணிக்கு திருச்சி தில்லைநகர் கி.ஆ.பெ.விசுவநாதன் பள்ளி கலையரங்கில் விழா நிகழ்ந்தது. தமிழ் மேடைகளை நெடுங்காலமாய் தாங்கிப் பிடிக்கும் நாவன்மை மிக்க பேரறிஞர்கள்,பெரும்புலவர்.பா.நமசிவாயம், நாவுக்கரசர். சோ.சத்தியசீலன்,ஆய்வுரைத் திலகம் அறிவொளி,நகைச்சுவைத் தென்றல் இரெ.சண்முகவடிவேல் ஆகியோருக்கு வணக்கம் செலுத்தி விருதளித்த விழா,அனைத்து வகைகளிலும் அர்த்தமுள்ள விழா. நாடாளுமன்ற ...

இந்த நம்பர் பிஸியாக உள்ளது

“அலோ!’ மரபின்மைந்தருங்களா?” “ஆமாங்க!வணக்கம்” வணக்கம்யா! நீங்க ஏடு படிப்பீகளா?” காலை ஆறரை மணிக்கு இந்த அழைப்பு வந்தபோது தஞ்சாவூர் ஞானம் ஹோட்டல் அறையில் பயணக்களைப்பு நீங்க படுத்துக் கிடந்த   எனக்கு ஒன்றும் புரியவில்லை. “என்னங்க கேட்டீங்க?” “அதாம்யா! ஏடு படிப்பீகளான்னு கேட்டேன்.எங்கூட்ல எங்க முப்பாட்டன் காலத்து ஏடுகள்லாம் கெடக்கு. நீங்க படிச்சுச் சொல்லுவீகளா?” “அதெல்லாம் நமக்கு பழக்கமில்லையே” “அப்படியா?பின்ன  நீங்க என்னமோ கவிஞ்சருன்னு போட்டிருக்கு!!” “எதிலீங்க போட்டிருக்கு?” “இன்னைக்கு தினமலருல ஒங்க போட்டா போட்டு நம்பரப் ...

சீண்டும் சவால்கள்

நாற்றுகளின் தலைகலைத்து நடக்கும் தென்றல் நாளைகளின் மெல்லரும்பை சீண்டிப் பார்க்கும் கீற்றுகளைக் கொட்டுகிற முழுவெண் திங்கள் குளத்திலுள்ள அல்லிகளை சீண்டிப் பார்க்கும் நேற்றுகளின் நினைவுகளோ இன்று வந்து நிகழ்கணத்தை மெதுவாக சீண்டிப் பார்க்கும் ஊற்றெடுக்கும் உன்சக்தி என்னவென்றே உருவாகும் சவால்களெல்லாம் சீண்டிப் பார்க்கும் தன்போக்கில் நடக்கின்ற நதிக்குக் கூட தடைகள்தான் உந்துசக்தி யாகும்- இங்கே உன்போக்கில் வாழ்வதென்று நினைத்தால் கூட உலகத்தின் போக்குன்னை உந்தித் தள்ளும் மின்போக்கில் போகுமொளி போலே நீயும் முன்னேற்றப் பாதையிலே மோகம் கொண்டால் ...
More...More...More...More...