Blog

/Blog

-ஜெராக்ஸின் அசல் ஹீரோக்கள்

” இந்த பேப்பரை ஜெராக்ஸ் எடுத்துட்டு வாங்க”என்று நாம் சொல்லாத நாட்களே இல்லை.நகலெடுப்பதை ஆங்கிலத்தில் ஜெராக்ஸ் எடுப்பதென்றுதான் பலரும் சொல்கிறோம்.நியாயமாகப் பார்த்தால் “ஃபோட்டோ காப்பி எடுத்து வாங்க” என்றுதான் சொல்ல வேண்டும்.நகலெடுக்கும் எந்திரத்தை உருவாக்கிய நிறுவனத்தின் பெயர் ஜெராக்ஸ். இந்த டிசம்பர் மாதம் 19ஆம்தேதியுடன் ஜெராக்ஸ் நிறுவனத்தின் முக்கிய ஹீரோவுக்கு வயது 103. ஜே.சி.வில்சன் நியூயார்க் அருகிலுள்ள ரோசஸ்டர் என்னும் இடத்தில்,1909 டிசம்பர் மாதம் 19ஆம்தேதி பிறந்தார்ஜோசஃப் சேம்பர்லெய்ன் வில்சன்.இவரை செல்லமாக ஜே.சி.வில்சன் என்றே அழைப்போம். இவர்அசலா ஜெராக்ஸா என்று பார்த்தால் அசலென்றும் சொல்லலாம்.ஜெராக்ஸ் என்றும் சொல்லலாம். ஏனென்றால் இவருடைய தாத்தா பெயரும் ஜோசஃப் சேம்பர்லெய்ன் வில்சன்தான்.ஆனால் ...

சத்குரு சந்நிதி…

சத்குருவின் ஞானோதயத் தலம்..சாமுண்டி மலையில்… பார்க்க நினைத்துத் தவித்திருப்பேன் -உனைப் பார்த்ததும் கண்கள் பனித்துவிடும் கேட்க நினைத்த கேள்விகளை -மனம் கணப்பொழு துக்குள் தொலைத்துவிடும் மூர்க்கத் தினவுகள் அவிந்தடங்கி-ஒரு மழலையைப் போலெனைக் குழைத்துவிடும் தீர்க்க முடியாப் புதிர்களையோ- உன் தீட்சண்யப் பார்வை எரித்துவிடும் அத்தன் அன்னை உடன்பிறந்தோர்-என அத்தனை உறவுகள் இருந்துமென்ன எத்தனை காதல் உன்னிடத்தில்-இது எப்படி மலர்ந்தது என்னிடத்தில் சித்தன் யோகி என்றெல்லாம் -உனை சிமிழுக்குள் அடைக்க முடியாதே பித்து மனதின் புலம்பலைப்போல்-நல்ல பிரார்த்தனை பிரபஞ்சத்தில் ...

சத்குரு அவர்களை வரவேற்று….

(2010 ஆம் ஆண்டு..மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு அயல்நாட்டுப் பயணங்களிலிருந்து சத்குரு திரும்பினார். சுவாமி ஆதிரூபா கேட்டபடி சத்குருவை வரவேற்று எழுதித் தந்த பாடல் இது…) பல்லவி வருக வருக எங்கள் வான்மழையே-எங்கள் வாழ்வில் இனிக்கிற தேன்துளியே தருக தருக உந்தன் தரிசனமே-எட்டுத் திசைகள் அளந்துவரும் பூரணமே சரணம்-1 திருவடி பாராமல் திருமுகம் காணாமல் தினமொரு யுகமாய் கழிந்தது குருநிழல் சேராமல் அருள்மொழி கேளாமல் திசைகளும் இருளாய் இருந்தது மாதங்கள் பறந்தன மாதவமே மனமெங்கும் நிறைந்தது உன்முகமே ...

சத்குருவின் மஹாபாரத்-வாழ்க்கை வலியா?வரமா?

சத்குருவின் மஹாபாரத் நிகழ்ச்சிக்காக, மகாபாரதக் கதையைப் பின்புலத்தில் கொண்டு வாழ்வின் அடிப்படைகளை வினவும் விதமாய் ஒரு பாடல் வேண்டுமென சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷா குழுவினர் கேட்டிருந்தார்கள். அவர்களுக்குத் தந்த பாடல் இது:  யாரும் போடாத பாதை- இது எங்கோ போகின்ற சாலை வேர்கள் இல்லாத மரமா-இந்த வாழ்க்கை வலியா வரமா முடிவே இல்லாத பயணம்-அட முனிவன் நெஞ்சிலும் சலனம் விடிந்த பின்னாலும் இருளா-இந்த வாழ்க்கை புதிரா பதிலா தர்மம் வனத்தினில் பதுங்கும்-இங்கு தலைக்கனம் ஆட்சியைத் தொடங்கும் மர்மம் ...

சத்குருவின் மஹா பாரத் நிகழ்ச்சி…அரங்கேறாத பாடல்

(2012 ல் சத்குரு ஈஷாவில் நடத்திய மஹாபாரத் நிகழ்ச்சியில் பாட சவுண்ட்ஸ் ஆஃப்  ஈஷா குழுவினருக்கு சில பாடல்கள் எழுதினேன். அவற்றில் அரங்கேறாத பாடல் இது ) வீணைகள் உறங்கிய இரவினிலே ராகங்கள் உறங்கவில்லை சேனைகள் தூங்கிய வேளையிலும் கோபங்கள்  தூங்கவில்லை போர்க்களம் சிவந்தது போதாதோ பாண்டவர் கௌரவரே வாள்களின் பசியென்ன தீராதோ வீரர்கள் மாண்டனரே குருதியின் நதியில் குளிக்கிறதே இதற்கா குருஷேத்ரம் அருகினில் இறைவன் இருக்கின்றான் சாட்சி நிலைமாத்ரம் உங்களின் வன்மம் தீர்வதற்கே உயிர்கள் மாளுவதோ ...

போதிதர்மர்- அகலாத மர்மங்கள்

அறிய வேண்டிய ஆளுமைகள் ஆயிரமாயிரம் என்றாலும் அறிந்தே ஆக வேண்டிய ஆளுமைகளாக காலம் முன்னிறுத்தும் கம்பீரமான ஆளுமைகளில் ஒருவர், போதிதர்மர்.ஜென் தியான மார்க்கத்தின் பிதாமகர்களில் ஒருவராகக் கருதப்படும் இவரை வண்ணத்திரை புதிய தலைமுறையின் பார்வைக்குக் கொண்டு வந்தது. போதிதர்மர் பற்றிய முரண்பட்ட பல தகவல்கள் கலவையாகக் கலந்து கிடக்கின்றன.அப்படியிருந்தாலும் தமிழகத்திலிருந்து சென்ற இளவரசர் சீன மண்ணின் வழிபாட்டுக்குரிய குருவாய் வளர்ந்தார் என்பது எல்லா வகையிலும் பிரம்மிக்கத்தக்க வரலாறுதான். ஏழாம் அறிவு படத்தில் வருகிற அம்சங்களையும் கடந்து சில ...
More...More...More...More...