அவனது கணக்கு
குதிரைகள் லாயத்தில் கூடும்-ஒரு கணத்திலே நரியாக மாறும் புதிரைப் போட்டவன் சிவனே -இதன் பதிலும் தெரிந்தவன் அவனே வித்துகள் நடுவோம் வயலில் -அவை வளர்வதும் சிதைவதும் மழையில் எத்தனை எத்தனை பார்த்தோம்-அட இருந்தும் வாழ்ந்திடக் கேட்டோம் மணநாள் வேள்வியும் புகைதான் -அந்த மயான வேள்வியும் புகைதான் குணமும் பணமும் பொய்யே-அட கண்கள் கசக்குதல் மெய்யே எத்தனை உயிர்கள் படைப்பான் -அவன் எத்தனை ஓலைகள் கிழிப்பான் பித்தன் என்றதும் சரிதான் -அவன் பிழைகள் எல்லாமே சரிதான் கூட்டல்தெரியும் நமக்கு-அதில் ...
ஜெயமோகனும் ராஜேஷ்குமாரும்..
ஜெயமோகனும் நானும் பேருந்தொன்றில் பயணம் செய்து கொண்டிருக்கிறோம். அது வித்தியாசமான பேருந்து.உணவு வகைகள் ஆர்டர் செய்யலாம். அசைவ உணவு வகைகளின் பட்டியல் கொண்ட மெனுகார்டை பேருந்தில் உள்ள சர்வர் நீட்டுகிறார்.கேட்கும் உணவு ரகங்கள் எதுவுமில்லை.அதற்குள் நாங்கள் இறங்க வேண்டிய நிறுத்தம் வருகிறது. இறங்கியதும் ஜெயமோகனின் வாசகர் ஒருவர் எதிர்ப்படுகிறார். அவரிடம் நல்ல உணவகம் எங்கே என்று விசாரிக்கிறோம்.அவர் வழி சொல்லிக் கொண்டே அருகிலுள்ள வீட்டைக் காட்டி “இதுதான் எழுத்தாளர் ராஜேஷ்குமார் வீடு” என்று காட்டுகிறார். உடனே நான்,”இல்லையே! ...
பகவான் ரமணர்
நீரில் நனைந்தும் நனையாத அக்கினியை வேரினில் கொண்டானே வித்தகன்-நாரிலே கல்லுரிக் கும்சிவனை காணுமண் ணாமலையில் உள்ளுரித்துக் கண்டான் உவந்து. ஆனை புகுந்தவுடல் ஆக உடலசைய ஞான முனிவன் நடைபயின்றான் -தேனை அருந்திச் செரித்த அறுகாலாய் ஜென்ம மருந்தாய் அமர்ந்தான் மலர்ந்து. உள்ளம் தனைக்கொன்றே ஊனில் புதைத்தவனோ தள்ளிநின்று தன்னை தரிசித்தான் -பள்ளம் புகமண்டும் கங்கைப் புனலாய் சிவனும் அகம்வந்து சேர்ந்தான் அறி. பாதாள லிங்கம் புடம்போட்ட தங்கம்தான் ஆதாரம் தன்னை அறிந்தது-சேதாரம் மேனி தனில்நேர, மேன்மைதவம் செய்கூலி ...
இந்நாளில் அவன்தூங்கப் போனான்
இந்நாளில் அவன்தூங்கப் போனான்-தன் இசைபோல வடிவின்றி ஆனான் கண்ணா என்றழைக்கின்ற நாவும்-அதில் களிகொண்டு விளைகின்ற பாவும் எண்ணாத விந்தையென யாரும்-தினம் எண்ணியெண்ணிக் கொண்டாடும் சீரும் கொண்டு இந்நாளில் அவன்தூங்கப் போனான்-தன் இசைபோல வடிவின்றி ஆனான் குழந்தைக்கு நிகரான உள்ளம் -அதில் குமுறிவரும் தமிழ்க்கவிதை வெள்ளம் எழுந்தாலும் இருந்தாலும் அழகன்-என எல்லோரும் கொண்டாடும் இணையில்லாக் கவிஞன் இந்நாளில் அவன்தூங்கப் போனான்-தன் இசைபோல வடிவின்றி ஆனான் திரையோடு தீராத அலைகள்-அவன் மழைபோல பொழிகின்ற வரிகள் முறையோடு தமிழ்கற்றதில்லை-ஒரு முறைகூட அவன்தந்த ...
ஆனாலும் நீதான் கடல்
கடவுளின் கைப்பேசி பார்த்தேன் -அவர் கூப்பிட்ட ஒரே நண்பன் நீதான் நடைபோட்டு உன்வாசல் சேர்ந்தேன் -என் வழியெங்கும் ஒரேகாவல் நீதான் தடைபோட்ட எல்லாமே மாறி-உன் திசைகாட்டி நிற்கின்றதே விடைகேட்டு போகின்ற எல்லாம் -உன் வழிகேட்டு வரப்போகுதே ஆனந்த அலையாக வந்தாய் ஆனாலும் நீதான் கடல் வானாக விரிகின்ற ஈசா-உன் விழிபார்க்க எந்தன் மடல் எங்கெங்கே யார்தோன்ற வேண்டும் எல்லாமே நீபோட்ட கோடு மங்காமல் ஆனந்தம் பொங்கும் உன்னோடு நானுள்ள போது பொங்காதோ நெஞ்சங்கள் இங்கே-ஒரு பொன்வார்த்தை நீசொல்லும் ...