வந்தாள் கண்ணெதிரே
அவளுக்கு வடிவம் கிடையாது அழகுகள் எல்லாம் அவள் வடிவே அவளுக்குப் பெயரொன்று கிடையாது ஆயிரம் பெயர்களும் அவள்பெயரே அவளுக்கு நிகரிங்கு கிடையாது அவளுக்கு அவள்தான் ஒருநிகரே கவலைகள் எனக்கினி கிடையாது காளிவந்தாள் என் கண்ணெதிரே தோய்ந்திடும் நடுநிசி நிறமல்லவா தாமரை வதங்கிய நிறமல்லவா பாய்ந்திடும் மின்னலை போல்சிலிர்ப்பு பைரவி வருகிற விதமல்லவா ஆய்ந்திட முடியா அவள்கருணை அமுதம் பெருகிடும் வகையல்லவா கோயிலில் வீதியில் தொடர்வதனை காட்டிடும் குங்கும மணமல்லவா வைத்த கொலுவில் அவள்பொம்மை வாழ்வில் அவள்மட்டும் தானுண்மை ...
வழிகாட்டாய்
மனக்கேடு கொண்டெழுப்பும் கோட்டை-அது மணல்வீடாய் சரிந்துவிழும் ஓட்டை குணக்கேடு தீரேன்நீ பராசக்தி பாரேன்என் ஏட்டை-என்ன -சேட்டை குச்சியிலே கோடிழுத்தா கோலம்?-எனை குற்றம்சொல்லி துப்புதடி காலம் உச்சகட்டம் என்நடிப்பு உள்ளகதை உன்நினைப்பு தூலம்-அலங்-கோலம் கோயிலுக்குள் நின்றுகொண்ட கள்ளி-இவள் கொஞ்சுகிறாள்பிள்ளையினைக் கிள்ளி தாய்மிதித்துப் பிள்ளையழ நாமங்களை சொல்லியழ தள்ளி -சென்றாள்-துள்ளி எத்தனைநாள் இப்படியுன் ஆட்டம்-என் இமைநடுவே கண்ணீரின் மூட்டம் வித்தகியுன் கைவிரல்கள் பற்றியிங்கே பலவகையாய் காட்டும்-பொம்ம- லாட்டம் இப்போதென் அழுகுரலைக் கேட்டாய்-எனை இப்படியே விட்டுவிட மாட்டாய் தப்பேது ...
அழுதுவிடு! தொழுதுவிடு!
அர்ச்சனை நேரத்தில் இட்டமலர் அரைநாள் சென்றால் சருகாகும் உச்சி முகர்பவர் சொல்லொருநாள் உதறித் தள்ளும் பழியாகும் பிச்சியின் கூத்துகள் இவையெல்லாம் பாடம் நமக்கு நடத்துகிறாள் இச்சைத் தணலை அவித்துவிட்டு இலையைப் போடவும் சொல்லுகிறாள் மண்ணில் இறக்கி விட்டவள்தான் மழலை ஆட்டத்தை ரசிக்கின்றாள் கண்கள் கசக்கி அழுவதையும் கண்டு தனக்குள் சிரிக்கின்றாள் எண்ணி ஏங்கி அழுகையிலே இடுப்பில் சுமக்க மாட்டாளோ வண்ணப் பட்டால் விழிதுடைத்து விளையாட்டுகளும் காட்டாளோ படுவது பட்டுத் தெளிவதுதான் பக்குவம் என்பாள் பராசக்தி கெடு வைப்பதற்கு ...
கொலுவிலேறினாள்
கொட்டோடு முழக்கோடு கொலுவிலேறினாள் -அன்னை கொள்ளையெழில் பொங்கப் பொங்க மனதிலேறினாள் பொட்டோடு பூவோடு மாதர்வாழவே -அன்னை பூரணமாய் கருணைதந்து பரிவுகாட்டினாள் தீபத்தின் ஒளியினிலே தகதகக்கிறாள்-அன்னை திருவிளக்கின் சுடராகத் தானிருக்கிறாள் நாபிதனில் ஒலியாக நிறைந்திருக்கிறாள்-அன்னை நாதத்துள் மௌனமென மறைந்திருக்கிறாள் சாமரங்கள் வீசியுப சாரம்செய்கையில்-அவள் சிலையெனநாம் செம்பட்டு சார்த்தி நிற்கையில் நாமங்களோர் ஆயிரமும் நவின்றிருக்கையில்-அன்னை நேர்படவே மழலையாக வந்துநிற்கிறாள் கோடிமலர் பாதமிட்டும் தீரவில்லையே-அவள் கொலுவழகைப் பார்க்கும்வேட்கை ஆறவில்லையே தோடெறிந்த தேவதேவி தென்படுவாளே-வினை தானெரிந்து போகும்படி அருள்தருவாளே சந்தனமும் சரமலரும் சூட்டும் ...
மங்கலை கொண்டாள் மகாவெற்றி
சங்கல்பம் கொண்டு சமர்செய்ய வந்திங்கு மங்கலை கொண்டாள் மகாவெற்றி-எங்கெங்கும் நல்லவையே வென்றுவர நாயகி நாமங்கள் சொல்லிப் பணிந்தால் சுகம். புத்தி வலிவும் பொருள்பலமும் பாங்கான உத்தி பலமுமே உத்தமிதான் -சத்தியவள் போடும் கணக்கின் பதிலீட்ட வேண்டியே ஆடும் விதியாம் அரவு. வண்ணத் திருவடிகள் வையத்தின் ஆதாரம் கண்கள் கருணைக் கருவூலம்-பண்ணழகோ தேவி குரலாகும் தேடும் மனவனத்தே கூவி வருமே குயில். பொன்கயிலை ஆள்கின்ற பேரரசி மாதங்கி மென்மயிலைப் போற்ற மனம்மலரும்-மின்னொயிலை காணுதற்கும் நெஞ்சம் குழைவதற்கும் நாமங்கள் பேணுதற்கும் ...
துயரம் தீர்ப்பாள் மஹாலஷ்மி
அலைகள் புரண்டெழும் ஓசையிலே-ஓர் அழகியின் சிரிப்பொலி கேட்கிறது விலைகள் இல்லாப் புதையல்களில்-அவள் வண்ணத் திருமுகம் தெரிகிறது நிலைபெறும் பாற்கடல் பாம்பணையில்-அந்த நாயகி சரசம் நிகழ்கிறது வலைவிழும் மீன்களின் துள்ளலைப்போல்-அவள் விழிபடும் இடமெலாம் கொழிக்கிறது அறிதுயில் கொள்ளும் பரந்தாமன் -அவன் அமைதிக்குக் காரணம் மஹாலஷ்மி வறுமையைக் களையும் வரலஷ்மி-நல் வளங்கள் தருவாள் தனலஷ்மி மறுவே இல்லா நிலவாக-நம் மனங்களில் உதிப்பவள் கஜலஷ்மி மறுபடி மறுபடி வரும்பசியை-மிக மகிழ்வாய் தணிப்பாள் சுபலஷ்மி தானியக் களஞ்சியம் நிரம்பிடவும்-மிகு தங்கம் வைரம் நிறைந்திடவும் ...