சிவலயம்
எதிர்பார்த்து நின்றவர்க்கோ ஏதொன்றும் புரியவில்லை ஏறெடுத்தும் பாராதார் எல்லாமே அறிந்திருந்தார்: புதிர்போட்ட மனிதருக்கே பதில்மறந்து போயிருக்க விதியெல்லாம் கடந்தவர்தான் விடைதாண்டிப் போயிருந்தார் விதைபோட்டு வளர்த்தவரோ வெய்யிலிலே காய்ந்திருக்க பதறாமல் இருந்தவரே பழம்பறித்துப் புசித்திருந்தார் முதல்போட்ட வணிகருக்கோ மூலதனம் கரைகையிலே முதல்-ஈறு தெரிந்தவரே முழுசெல்வம் அடைந்திருந்தார் சதையெலும்பே சதமென்றோர் சஞ்சலத்தில் அலைபாய சிதைநெருப்பின் நடுவினிலும் சிவனாண்டி சிரித்திருந்தார் நதிபாய்ந்த நேரத்தில் நனையவந்தோர் ஏமாற நதிகாய்ந்த வேளையிலும் நிர்மலரே குளித்திருந்தார் மூடிவைத்த கைபோன்ற முழுவாழ்வின்சூனியத்தில் பாடிவந்த பரஞானி பிரிந்தவிரல் அறிந்திருந்தார் ...
ஆடிக்கு வந்தாள் அபிராமி
உற்சவக் கோலத்தில் உலாப்போகும் நேரத்தில் உற்சாக அலங்காரமோ கற்பகத் தாருவாம் கடவூராள் எழில்பார்க்க கண்கோடி இனிவேண்டுமோ பொற்பதம் மலர்க்கரம் பூமுகம் எங்கெங்கும் பூவாரம் எழில்சிந்துமோ கற்பனைக்கெட்டாத காருண்ய நாயகி கடைக்கண்கள் எமைத்தீண்டுமோ மின்னாயிரம் சேர்ந்த மலர்மேனி நிறமென்ன? மைவண்ணக் கறுப்பல்லவோ இந்நேரம் உற்சவத் திருமேனி எழில்மட்டும் இதமான சிகப்பல்லவோ பெண்ணாகப் பிறந்தார்க்கு புறப்பாட்டு நேரத்தில் பூச்சொன்றும் புதிதல்லவோ கண்ணான மாதரசி கவின்மஞ்சள் வண்ணத்தில் கிளம்புவதே அழகல்லவோ பெருவீதி நான்கினிலும் பெண்ணரசி வருகின்றாள் பொன் ஆடிப் பூரத்திலே ஒருநீதி ...
வங்கம் வழங்கிய ஞானஒளி
(ஜூலை-4 சுவாமி விவேகானந்தர் நினைவு நாள்) எல்லாத் திசைகளும் என்வீடு-என இங்கே வாழ்ந்தவர்யார்? நல்லார் அனைவரும் என்னோடு-என நெஞ்சு நிமிர்ந்தவர்யார்? நில்லா நதிபோல் விசையோடு-அட நாளும் நடந்தவர் யார்? கல்லார் நாடெனும் கறையகற்ற-சுடர்க் கணையாய்ப் பாய்ந்தவர்யார் எங்கள் கிழக்கில் எழுந்தகதிர்-புகழ் ஏந்திடும் மேல்திசையில் பொங்கும் எரிமலை போலெழுந்தே-இருள் போக்கிடும் நம்முயிரில் வங்கம் வழங்கிய ஞானஒளி-நம் விவேகானந்த ஒளி சிங்கப் பிடரி சிலிர்த்தபடி-அவர் சென்றது ஞானவழி பூமியை உலுக்கும் புயலாக-அவர் புறப்பட்ட வேகமென்ன சாமி உனக்குள் எனசொல்லி -அவர் சமத்துவம் ...
சொல்லச் சொன்னாள் அபிராமி
(இன்று காலை இசைக்கவி ரமணனை அலைபேசியில் அழைத்தேன். எங்கிருக்கிறீர்கள் என்றார். திருக்கடவூரில் என்றேன். அவரிடமிருந்து பேச்சே இல்லை. பின்னர் சொன்னார், “எங்கே இருக்கிறாய் தேவி! நீ எப்படி இருக்கிறாய்” என்று இப்போதுதான் எழுதிக் கொண்டிருக்கிறேன். நீங்கள் திருக்கடவூரில் இருப்பதாய் சொல்கிறீர்களே!” என்று. அவர் எனக்கனுப்பிய கவிதைக்கு எழுதிய பதில் கவிதை இது.) இப்படி ஏன்கேட்டாய்- நான் எங்கும் இருக்கின்றேன்..-என செப்பிடச் சொன்னாளே-அந்த சுந்தரி உன்னிடத்தில் அற்புதப் புன்னகையால் -புவி ஆள்கிற அபிராமி-நமை எப்படி மறப்பாளாம்-மறந்தே எவ்விதம் இருப்பாளாம். ...
மகாபாரதம் அல்ல….
கூடிக் கலையும் நாடகக் கூடம் போடப்போவது கௌரவ வேடம் மர்ம வலையின் மனிதன் விழுவான் கர்ணன் மனதைக் கண்ணன் அறிவான் என்றோ தின்ற உப்புக்காக இங்கே இன்று நட்புக்காக அரசல் புரசலாய் ஆயிரம் சலனம் அரச சபையில் விகர்ணன் மௌனம் சபதக் கனலில் திரௌபதி மூச்சு தருமன் சபையிலோ சமரசப் பேச்சு பகடையாட்டம் பழகிப் பழகி சகுனியாட்டமே சிரிக்கிறான் தருமன் வில்லை முறித்தது விதுரனின் வேகம் சொல்லை மறைத்தது குந்தியின் சோகம் கட்டை விரலைக் கொடுத்தவன் வாழ்க ...