பாவேந்தர்-ஓர் இளங்கதிர்
(22 ஆண்டுகளுக்கு முன் சென்னைத் தொலைக்காட்சியில் வாசித்த கவிதை… பாவேந்தர் நினைவாக இன்று..) சதைக்கவிதை உயிரின்றிப் பிறந்த காலம் சகதியிலே மையெடுத்துப் புனைந்த காலம் எதைக்கவிதை என்போமோ எனுமேக்கத்தில் எந்தமிழர் உயிர்வாடி இளைத்த காலம் புதுத்தமிழை நவகவிதை ஆக்கித் தந்த பாரதியோ மூத்தகதிர்-அவன்சுவட்டில் உதித்தெழுந்த இளங்கதிராய் ஒளிபரப்பி உலவியவன் புதுவைநகர் கவிதைவேந்தன் தேயவுடல் மீதமின்றித் தினமுழைத்தும் தகுந்தபலன் அடையாத மனித மந்தை ஓய்ந்திருந்த புழுக்களென்ற நிலைமை மாறி ஓங்கார வேங்கைகளாய் எழுந்த விந்தை பாவேந்தன் செய்ததுதாநீனும் என்ன? ...
அங்குசத்தைக் கும்பிடும் ஆனை
கவியன்பன்.கே.ஆர்.பாபு இது நடந்து இருபது ஆண்டுகள் இருக்கும்.கோவை நானி கலையரங்கில் ஓர் இலக்கிய நிகழ்ச்சி. பார்வையாளர்கள் வரிசையில் கவியன்பன் பாபுவும் நானும். இருவருக்குமே வெண்பா எழுதுவதில் விருப்பம். ஆளுக்கு இரண்டு வரிகளாய் பாடும் இரட்டைப் புலவர்களின் உத்தியை நாங்களும் கடைப்பிடித்திருந்தோம். மேடையில் பேச்சாளர்கள் தூள் கிளப்பினார்கள். தூள் கிளப்பினார்கள் என்றதுமே பிரமாதமாகப் பேசினார்கள் என்று நீங்கள் நினைத்துவிடக்கூடாது. மரத்தை ரம்பத்தால் அறுக்கும் போது தூள் கிளம்பும் அல்லவா? அந்த தூள் இது. ஆர்வக் கோளாறில் முதலிரண்டு வரிசைகளில் அமர்ந்து விட்ட நாங்களிருவரும் ஒருவரையொருவர் பரிதாபமாகப் பார்த்துக் கொண்டோம். கவியன்பன் பாபு,விழா நோட்டீசின் பின்புறம் இரண்டு வரிகளை எழுதி நீட்டினார். “வேண்டாம் இவர்களெல்லாம் வாயால் விஷம்தெளிப்பார் மாண்டுவிடும் நம்பொறுமை வாபோவோம்” மீதி இரண்டுவரிகளை நான் எழுதினேன். –தீண்டவரும் ...
ஷூட்டிங்கா?மீட்டிங்கா?
புகைப்படம்: வேற யாரு?அதுவும் அந்தச் சுகாதான்!! இந்தக் கேள்வியை 2005ல் முனைவர்.கு.ஞானசம்பந்தனிடம் கேட்பேன். “இப்போ ஷூட்டிங்தான்.நீங்க?”என்பார் பதிலுக்கு.நானும் ஷூட்டிங்தான் என்பேன். அப்போது நான் கஸ்தூரிமான் படத்தில் நடித்துக் (?) கொண்டிருந்தேன். பேராசிரியரும் படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். பெரும் கடன் வாங்கி லோகிததாஸ் தயாரித்து இயக்கிய படம் கஸ்தூரிமான். எனக்கு அந்தப் படத்தில் கிடைத்த நல்லபெயர் யாருக்கும் கிடைத்திருக்காது. “சே!எவ்வளவு நல்ல மனுசன்யா! கேமரா முன்னால கூட நடிக்கத் தெரியாத அளவு எதார்த்தம்” என்று எல்லோரும் கண்ணீர் மல்க ...
செய்திகள் வாசிப்பது மரபின்மைந்தன் முத்தையா
(13.04.2013 அன்று நிகழ்ந்த முத்திரைக் கவியரங்கில் வாசித்த கவிதை) வணக்கம்! தலைப்புச் செய்திகள்..தனியாய் இல்லை! துச்சாதனனின் இழுப்பில் வளர்ந்த திரௌபதி புடவைத் தலைப்பைப் போல மலைக்கவும் வைத்து களைக்கவும் வைக்கும் நடப்புகள் நாட்டில் நிறைய நடப்பதால் தலைப்புச் செய்திகள் தனியாய் இல்லை. ** தேங்கிப் போன கோப்புகளுக்குள் ஏங்கிக் கிடக்கும் ஏழை உயிர்களை எதுவும் செய்யலாம் என்கிற ஆணையை புதிதாய் இன்று பிறப்பித்துள்ளனர். ** வாழ்வா சாவா விடுகதைப் புதிரில் பூவா தலையா போட்டுப் பார்த்து முடிவு ...
இருக்கின்றாள் என்ற ஒன்றே
பவானி பாலிடெக்னிக் கல்லூரியின் சார்பில் பேராசிரியர் வெற்றிவேல் பேசினார்.”எங்க ஆண்டுவிழாவுக்கு வர ஒத்துக்கிட்டதுக்கு ரொம்ப நன்றிங்க. உங்களை பவானிக்கு அழைத்து வர நம்ம மாணவர் ஒருவர் வருவாருங்க”.பல கல்லூரிகள் சிறப்பு விருந்தினரை அழைத்து வர கல்லூரி விரிவுரையாளர்களையோ மாணவர்களையோ அனுப்புவது வழக்கம்தான்.சற்று நேரத்தில் மகேந்திரன் என்றொருவர் பேசினார். மறுநாள் காலை எட்டரை மணியளவில் வருவதாகத் தெரிவித்தார். வந்த “மாணவர்” வயது நாற்பதுக்கு மேலிருக்கும். பிறகுதான் தெரிந்தது, அந்தப் பேராசிரியரின் முன்னாள் மாணவர் மகேந்திரன் என்று. காளப்பட்டியில் செங்கல் ...
தெய்வம் தெரிகிறது
வானம் எனக்கென வரைந்து கொடுத்த வரைபடம் ஒன்றுண்டு நானே என்னைத் தேடி அடைந்திட நேர்வழி அதிலுண்டு ஊனெனும் வாகனம் ஓட்டி மகிழ்வது ஒருதுளி உயிராகும் ஏனென்றும் எங்கென்றும் யார்தான் கேட்பது எங்கோ அதுபோகும் காலம் அமைக்கிற சாலைகள் எல்லாம் காலுக்குச் சுகமில்லை ஆலாய்ப் பறந்து அடைந்தவை போலே வேறெதும் சுமையில்லை நீலம் பரவிய வானிலிருந்து நகைப்பது கேட்கிறது ஆலம் பரவிய கண்டத்திலிருந்து அதுவாய் எழுகிறது மாற்று வழிகளில் புகுந்தவன் வந்தேன் மறுபடி கருப்பைக்கு நேற்று வரைக்கும் நான்செய்த எல்லாம் ...