Blog

/Blog

தெய்வம் தெரிகிறது

 வானம் எனக்கென வரைந்து கொடுத்த  வரைபடம் ஒன்றுண்டு நானே என்னைத் தேடி அடைந்திட நேர்வழி அதிலுண்டு ஊனெனும் வாகனம்   ஓட்டி மகிழ்வது ஒருதுளி உயிராகும் ஏனென்றும் எங்கென்றும் யார்தான் கேட்பது எங்கோ அதுபோகும் காலம் அமைக்கிற சாலைகள் எல்லாம் காலுக்குச் சுகமில்லை ஆலாய்ப் பறந்து அடைந்தவை போலே வேறெதும் சுமையில்லை நீலம் பரவிய வானிலிருந்து நகைப்பது கேட்கிறது ஆலம் பரவிய கண்டத்திலிருந்து அதுவாய் எழுகிறது மாற்று வழிகளில் புகுந்தவன் வந்தேன் மறுபடி கருப்பைக்கு நேற்று வரைக்கும் நான்செய்த எல்லாம் ...

மருதாசலம்

திருநீறு தினம்பூசி தேவாரத் தமிழ்பாடி வருவோரை சிவன்காக்கும் அருணாசலம்-அவன் மடிமீது மகிழ்ந்தேறி ஓங்காரப் பொருள்கூறும் மகன்வாழும் தலம்தானே மருதாசலம் சிவன்வாழும் மலைதானே அருணாசலம்-அவன் மகன்வாழும் தலம்தானே மருதாசலம்! சிவநாமம் தினம்கூறி பனிபாயும் கொடியாகி உமையாளும் தவம்செய்யும் இமயாசலம்-அவள் அருளாலே உருவாகி பாம்பாட்டி சித்தர்முன் மகன்தோன்றும் தலம்தானே மருதாசலம் உமையாளும் தவம்செய்யும் இமயாசலம்-அவள் மகன்தோன்றும் தலம்தானே மருதாசலம் புவிவாழ மனம்கொண்டு அவதாரம் பலகொண்ட திருமாலும் அரசாளும் வெங்கடாசலம்-அவன் மருமானின் அருகாக இருமான்கள் துணையாகும் அழகான தலம்தானே மருதாசலம் திருமாலும் ...

வேர்கள் சொன்ன விபரம்

“ஆலம் விதையோ பூமியிலே ஆழ்ந்து வேர்கள் பதிக்கிறது காலம் கடந்தபின் விழுதெல்லாம் கனிவாய்த் தாங்க வருகிறது!” காலங் காலமாய் இப்படித்தான் கதைகள் சொன்னார் நம்பிவந்தேன் ஆலின் நுண்ணிய ஆன்மாவை ஆழ்கன வொன்றில் கண்டுகொண்டேன் “வேருக்கு விழுது துணையென்று வெட்டிக் கதைகள் பேசுகிறீர் யாரறிவீர்கள்” என்றென்னை ஏளனம் செய்தது ஆலினுயிர். ஏழு ஸ்வரங்களின் கருவறையில் எழுகிற ராகங்கள் வேறில்லை சூழும் விழுதுகள் ராகங்கள் ஸ்வரங்களில்லாமல் இசையில்லை ஆ வேர்தான் மூலப் பரம்பொருளாம் விழுதுகள் எல்லாம் அவதாரம் வேரின் சக்தியை வாங்கித்தான் விழுதுகள் எல்லாம் வெளியாகும் மாறுவேடத்தில் வேர்பார்த்து மனிதர்கள் விழுதெனச் சொல்லுகிறார் கூறுகள் போட்டே பழகியவர் கண்கள் சொல்வதை நம்புகிறார். ...

ஓடாத்தூர்.மு.அர்ச்சுனன்

பெரிய கல்வி நிறுவனங்களை உருவாக்கி வைத்திருக்கும் ஒருவர்,மதுரைக்குப் போகும் வழியில் தன் அலுவலர் ஒருவரிடம் சிலவற்றை சொல்வதற்காக அலைபேசியில் அழைத்திருக்கிறார்.”மதுரைக்குப் போகாதேடீ”என்ற பாடல் ஒலித்ததும் அதிர்ந்து போன அவருக்கு சொல்ல வந்தது மறந்துபோனது. அவர் மதுரைக்குப் போனார்.அந்த அலுவலர் அடுத்த நிமிடமே அந்தப் பாட்டை மாற்றிக் கொடுக்குமாறு கேட்டு அந்த அலைபேசி நிலையத்துக்கே போனார்.ஒருகாலத்தில் நான் மதுரைக்கு மாதம் ஒருமுறையாவது போவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். அதாவது தொண்ணூறுகளின் தொடக்கத்தில்…. ஒரே நேரத்தில் கொத்துக் கொத்தாய் எனக்கு இலக்கிய நண்பர்கள் ஏகத்துக்குக் கிடைத்தது மதுரையில்தான்.மேலப்பெருமாள் மேஸ்திரி வீதியில் இருக்கும் ஹோட்டல் பிரேம்நிவாஸ் என் வழக்கமான வாசஸ்தலமாக மாறியிருந்தது. அப்போதெல்லாம் அங்கே அடிக்கடி வந்து தங்குபவர்களில் திரு.தமிழருவி மணியன் குறிப்பிடத்தக்கவர். பிரேம்நிவாஸ் ஹோட்டல் மனிதத்தேனீ இரா.சொக்கலிங்கம், திரு.பாபாராஜ்,திரு.வீரபாண்டியத் தென்னவன் என்று நீளுமந்தப் பட்டியலில் முக்கியமான இரண்டு பேர்கள் கவிஞர் மு.அர்ச்சுனனும் கவிஞர் இரா.பொற்கைப் பாண்டியனும். இவர்களில் அர்ச்சுனன் புதுக்கவிஞர்.சங்க இலக்கியம் தொடங்கி சமகால இலக்கியம் வரை நல்ல வாசிப்பும் விமர்சனமும் உள்ளவர்.பொற்கை ...

கோயம்புத்தூர் விழாவில் இலக்கிய மாலை

கோவையின் எழுத்தையும் பண்பாட்டையும் கொண்டாடும் திருவிழா….               கண்டிப்பா வாங்க!! ...

எம்.எஸ்.உதயமூர்த்தி-எழுத்தின் எழுச்சி

ஓவியம் :திரு.ஜீவா தமிழ்நாடு உணவகத்தின் கூட்ட அரங்கில் ஏராளமானவர்கள் கூடியிருந்தார்கள்.பெரும்பாலானவர்கள்கோவையையும் அதன் சுற்றுப்பகுதிகளையும் சேர்ந்த கல்லூரி மாணவர்கள்.அனைவரும் அடிக்கடி வாயிலைப் பார்த்துக் கொண்டிருந்தனர். வகுப்பறைக்குள் நுழையும் பேராசிரியர் போல் கால்சட்டைக்குள் உள்ளிடப்பட்ட மேல்சட்டையுடன் சிரித்த முகமாய் நுழைந்தார் எம்.எஸ்.உதயமூர்த்தி.சுற்றிலும் வெள்ளைச் சட்டையில் ஏராளமான பிரமுகர்கள்.மேடையின் பின்புலத்திலிருந்த எளிய பதாகையில் “மக்கள் சக்தி இயக்கம்”என்று எழுதப்பட்டிருந்தது. அப்போதே பிரபலமாயிருந்த கல்லூரி மாணவப் பேச்சாளர் ஜெயஸ்ரீ பத்ரிநாத் மேடைக்கு வந்து அறிவிக்க மற்ற பொறுப்பாளர்களுடன் மேடையேறினார் எம்.எஸ்.உதயமூர்த்தி. அவர் பேசுவதற்காக ...
More...More...More...More...