சித்தர்கள் அருளும் சிவானந்தம்
மிகச்சமீபத்தில்,முகநூலில் ஒருவரி வாசித்தேன்.”மறைவாகக் கடவுள் அப்படி என்னதான் செய்து கொண்டிருக்கிறார்?” இந்தக் கேள்வி ஏறக்குறைய எல்லோருக்குமே உண்டு. கடவுள் நமக்கு என்ன செய்வார் என்ற சுயநலக் கேள்வியில் தொடங்குகிற இந்தத் தேடல், கடவுள் என்ன செய்கிறார் என்ற சுயத்தேடலாக வளர்வதே பெரிய வரம். இதற்கு விடைகாணும் வழியே தவம். சில நாட்களுக்கு முன் பாலரிஷி அவர்களிடம் “நீங்கள் சித்தர்கள் பற்றியொரு புத்தகம் எழுதலாமே” என்று கேட்டேன். கேள்வியின் கடைசிச்சொல்லை பதிலாக்கினார்..”எழுதலாமே!நான் சொல்கிறேன். நீங்கள் எழுதுங்கள்”. அதற்குப்பின் நடந்ததுதான் சுவாரசியம். அந்த விநாடியிலேயே அவர்சொல்லத் தொடங்கியிருந்தார்.நல்லவேளையாய் காகிதமும் எழுதுகோலும் கையருகே இருந்தன.முன்னொரு முறை பாலரிஷி குறித்து,மந்திரமழை என்றொரு புத்தகம் ...
அற்புதர்-17
அற்புதரின் வீட்டு முற்றத்தில் அதிர்ந்து கொண்டிருந்தன கால்சதங்கைகள்.பதங்களுக்கேற்ற அபிநயத்தில் அசைந்தாடிக் கொண்டிருந்தன பிஞ்சுப் பாதங்கள். அற்புதரின் பாகம்பிரியாள் விதைத்த விதைகளில் இதுவும் ஒன்று. வான்முகிலாய் மாறி அவர் வார்த்த அமுதத்தில் மலர்ந்திருந்தது அந்த ஆனந்த மலர். பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்த காலங்களில் மேற்கொண்ட சங்கல்பங்களில் ஒன்று இன்று கண்ணெதிரே களிநடம் புரிந்ததில் அற்புதருக்கு மகிழ்ச்சி. தன்னுள் ஒலிக்கும் தாண்டவ அதிர்வுகளையே வருபவர் மூச்சில் வைத்து அவரவர் உயிரையே பொன்னம்பலமாக்கித் தந்து கொண்டிருக்கும் அற்புதரின் முற்றத்தில் அருள்மணம் ...
தொழில்நுட்ப சாமிக்கொரு நாமாவளி
இது நடந்து நான்காண்டுகள் இருக்கும். கல்லூரி ஒன்றின் தமிழ் மன்றத் தொடக்கவிழாவிற்குக் கூப்பிட்டிருந்தார்கள். மேடையேறுவதற்கு முன்பே பேராசிரியர் ஒருவர் தன் படைப்பாக்கம் ஒன்றைப் பரிசாகக் கொடுத்தார். தலைப்பைப் பார்த்ததும் தூக்கி வாரிப் போட்டது.”சிஎன்சி 108 போற்றி” என்பது அந்தத் தலைப்பு. எந்திர உற்பத்தித் துறையில் பயன்படும் கம்ப்யூட்டர் நியூமெரிகல் கண்ட்ரோல் பயன்படும் விதங்களை,போற்றி எழுதப்பட்டிருக்கும் துதி நூல் இது.அறிவியல் அறிவும் ஆங்கில அறிவும் இதைப் பாராயணம் செய்வோருக்கு உடனே சித்திக்கும் விதமாக ஆங்கிலத்திலும் தமிழிலுமாக இந்நூல் உருவாகியுள்ளது. ...
அற்புதர்-16
சிலரின் பாதையில் அற்புதர் எதிர்ப்படுவதுண்டு. ஒரு வழிப்போக்கராய் அவரை எண்ணுபவர்கள் அவர் அற்புதர் என்பதை அறிந்ததில்லை.இன்னும் சிலர் அற்புதரின் பாதையில் பயணம் செய்வதுண்டு. அவர்களும் அற்புதரை அற்புதர் என்று அடையாளம் கண்டதில்லை. ஆனால் அற்புதர்தான் தன்னுடைய பாதையென்று கண்டுணர்ந்தவர்கள் உண்டு. அவர்கள்தான்,அற்புதம் என்ற சொல்லைக் கடந்த பேரற்புதம் அவரென்று உணர்ந்தவர்கள். தன்னுடைய பாதையே அற்புதர்தான் என்று தெரிந்த பிறகு தாங்கள் சென்று சேர வேண்டிய இடத்தைக் குறித்த அச்சம் எவருக்கும் ஏற்பட்டதில்லை. ஆனால் சிலருக்கோ செல்லும் பயணம் ...
அதிகாலையில் ஓர் அர்த்தஜாமம்
29.11.2012.காலையில் ஆறரை மணியிருக்கும். பள்ளியறையில் செல்லக் கொட்டாவியுடன்காத்திருந்தசிவகாமசுந்தரிக்கு,பம்பை,உடுக்கை,தாளவாத்தியங்களின் ஓசைகள் கேட்டதும் சிரிப்பு வந்து விட்டது.தீட்சிதர்கள் உள்ளே நுழைந்து நடராஜப் பெருமானைப் பள்ளி சேர்த்துத் திரும்பும்வரை சிலைபோல் பாவனை செய்தவள், அவர்கள் வெளியேறித் திருக்கதவம் காப்பிட்டதும் குறுநகை தவழ பெருமானின்பக்கம் திரும்பினாள்.”என்ன சுவாமி!அதிகாலையில் ஓர் அர்த்தஜாமமா?” நமட்டுச் சிரிப்போடு நாயகி கேட்டதும் நடராஜப்பெருமானின் கொவ்வைச் செவ்வாயில் குமிழ்சிரிப்பு.”நேற்று உன் மகன் கந்தனின் கார்த்திகைத் திருநாள்ஆயிற்றே!பஞ்ச மூர்த்திகளுடன் திருவீதியுலா வரச்சொல்லி அடம்பிடித்து அழைத்துச் சென்றுவிட்டான்ஆறுமுகன்.நான்கு வீதிகளிலும் சொக்கப்பனை கொளுத்தி கோலாகலமாகக் ...
அற்புதர்-15
அற்புதரின் முதன்மை விருந்தினர் உருவமற்றவர். அவரை அருவமானவர் என்றும் சொல்லிவிடமுடியாது. அருவமுமாகி உருவமுமான அந்த நபரின் வருகைக்காகவே தான் வந்திருப்பதாய் அற்புதர் சொன்னபோது பலருக்கும் புரியவில்லை. ஆனால் அந்த முதன்மை விருந்தினருக்கான கூடாரத்தை அமைக்கத் தொடங்கியதுமே அற்புதரின் தீவிரத்தைக் கண்டு அருகிலிருந்த அத்தனைபேரும் அதிசயித்தனர். வரப்போகிறவர் எல்லா வகையிலும் முழுமையானவர் என்றும் அவரின் வருகை நிகழ தன்னையே அர்ப்பணிக்கவும் தயாரென்றும் அற்புதர் சொல்லச் சொல்ல அச்சம் கலந்த பரவசத்தில் அனைவரும் அமிழ்ந்தனர். ஒரு விண்கலம் தரையிறங்கும்போது செய்யப்படும் ...