யானை தப்பித்து வந்தால்…..
“மிருகக்காட்சி சாலையில் இருந்து ஒரு யானை தப்பித்து விட்டது. அங்கே ஒரு பள்ளிக்கூடம் வேறு. இப்போது யானையைப் பிடிக்க என்ன செய்வீர்கள்?” அந்த இளைஞர்கள் மத்தியில் இந்தக் கேள்வியை விசியபோது யானைகள் பற்றிய எத்தனையோ எண்ணங்கள் எனக்குள் ஓடத் தொடங்கின. வனப்பகுதிகளை இழந்த யானைகள் நகர்ப்புறப் பகுதிகளில் நுழையத் தொடங்கி நீண்ட காலம் ஆகிவிட்டது. அநேகமாய் அடுத்த தலைமுறைக்குள் இது பழகி விடலாம். “உன் வேலையை நீபார் என் வேலையை நான் பார்க்கிறேன்” என்று யானைக்கும் மனிதனுக்கும் ...
நவராத்திரி கவிதைகள்……….10
அந்தமில்லாச் சுகமடைந்தோம் கோட்டைகள் நடுவே ஸ்ரீபுரத்தில்-அவள் கொலுவீற்றிருக்கும் சாம்ராஜ்யம் மீட்டிடும் வீணைகள் மத்தளங்கள்-இளம் மெல்லியர் நடனத்தில் சிவலாஸ்யம் ஏட்டினில் எழுதும் வரியிலெல்லாம்-அவள் எழில்திரு வடிகளின் ரேகைகளே நீட்டிய சூலத்தின் நுனியினிலே-பகை நடுங்கச் செய்திடும் வாகைகளே பூரண கன்னிகை திருவருளே-இந்தப் பிரபஞ்சம் தோன்றிய கருவறையாம் காரண காரியம் யாவையுமே-எங்கள் காளி சமைத்த வரைமுறையாம் தோரண மாவிலை அசைவுகளில்-அந்தத் தோகையின் சுவாசம் தென்படுமாம் நாரணி நான்முகி நாயகியாள்-நம் நாபிக் கமலத்தில் அமர்ந்தனளாம் ஆயிரம் அசுரர்கள் எதிர்ப்படினும்-விழி அசைவினில் யாவரும் ...
நவராத்திரி கவிதைகள்………….9
தெளிவு தந்தாள் ஒருநாள் கூத்துக்கு நான்வைத்த மீசையை ஒவ்வொரு நாளும் ஒழுங்குசெய்தேன் வரும்நாள் ஏதென்ற விபரம் இல்லாமல் வாழ்வை நானாய் பழுது செய்தேன் அருகில் இருப்பதை அலட்சியம் செய்துநான் அங்கே பறப்பதற்கழுது வந்தேன் திருநாள் மலர்ந்தது தெளிவு பிறந்தது தாயே உன்னிடம் தொழுது வந்தேன் வழியில் குத்திய கற்களை உதைத்தேன் வைரம் அவையென்று தெரியலையே பழியாய் விழுந்த பேச்சினில் சலித்தேன் பழவினை அவையென்று புரியலையே சுழல்கிற நதியில் படகெனப் போனேன் துடுப்புகள் இரண்டும் இயங்கலையே அழுதவன் விழிகளில் ...
நவராத்திரி கவிதைகள்…………8
உன்பாதம் துணையாகுமே ஆறுகால் கூப்பியே அழகான வண்டினம் அன்றாடம்தொழும்தாமரை ! ஈறிலா இன்பங்கள் எவருக்கும் தருகின்ற இணையில்லா செந்தாமரை! பேறுகள் யாவையும் தேடியே அருளிடும் திருமகள் அமர்தாமரை! கூறுமென் கவிதையின் வரிகளில் பதியட்டும் திருவடிப் பொன்தாமரை! — பாற்கடல் துயில்பவன் பாதங்கள் வருடிடும் பொன்மலர்க் கைகள் நீட்டு தோற்றவர் வெல்லவும் மாற்றலர் அஞ்சவும் தாயேநல் வழிகள் காட்டு கீற்றெனத் தென்படும் வாய்ப்புகள் கனியவே வந்துநீ பாதை காட்டு —- நேற்றுகள் வலித்ததை நினைவிலே கொள்ளாத நிலையினை நெஞ்சில் ...
இன்னொரு பிளேட் இட்டிலி
சதுரங்கத்தில் சிப்பாய்களும் பிரதானிகளும் சூழ்ந்திருக்க ஆட்டம் தொடங்கி நான்கு நிமிஷங்கள் வரை நகர வழியில்லாமல் மலங்க மலங்க விழித்து நிற்கும் ராஜா ராணி வெள்ளைக் காய்கள் போல், தட்டின் நடுவில் “தின்னு தின்னு” என்று ஆவிபறக்க கெஞ்சிக் கொண்டிருந்தன இரண்டு இட்டிலிகள். நகரத் தொடங்கிய சிப்பாய்கள் போலவும் கலையத் தொடங்கியிருந்த பிரதானிகள் வரிசை போலவும், சற்றே தள்ளி நின்று “வா வாத்யாரே வூட்டாண்ட’ என்று கலர் கலராகப் பாடிக்கொண்டிருந்தன, மூன்று வகை சட்டினிகள். ஆரஞ்சு, வெள்ளை, பச்சை ...
நவராத்திரி கவிதைகள்…………7
ஏதேதோ செய்கின்றவள் காலத்தின் முதுகேறிக் கடிவாளம் தேடினால் கைக்கேதும் சிக்கவில்லை ஓலம்நான் இடும்வண்ணம் ஓடிய குதிரையின் உன்மத்தம் புரியவில்லை தூலத்தின் உள்ளிலே தேங்கிய கள்ளிலே தலைகால் புரியவில்லை நீலத்தின் நீலமாய் நீலிநின்றாள் அந்த நொடிதொட்டு நானுமில்லை வந்தவள் யாரென்ற விபரமும் உணருமுன் வாவென்று ஆட்கொண்டவள் நொந்ததை நிமிர்ந்ததை நிகழ்ந்ததை எல்லாமே நாடகம் தானென்றவள் அந்தத்தின் ஆதியாய் அத்தனின் பாதியாய் அழகுக்கும் அழகானவள் எந்தவிதம் என்னையும் ஏற்றனள் என்பதை இன்றுவரை சொல்லாதவள் ஆசையின் பிடியிலே ஆடிய வதையிலே ஆனந்தம் தரவந்தவள் தூசுடைக் கண்ணிலே மீசையின் மண்ணிலே துகிலாகப் படர்கின்றவள் ஏசுவார் வாழ்த்தவும் பேசுவார் போற்றவும் ஏதேதோ செய்கின்றவள் காசியை காஞ்சியை கூடல்மா நகரினை கடவூரை ...