Blog

/Blog

நவராத்திரி கவிதைகள் …………2

சுடர் வளர்ப்பாள் பக்கத்தில் நடப்பவள் பராசக்தி- நம் பார்வையில் படுவாள் சிலசமயம் தர்க்கக் குப்பைகள் எரித்துவிட்டால்-அவள் திருவடி தெரிந்திட இதுசமயம் செக்கச் சிவந்த தளிர்விரல்கள்- நம் சிகையைக் கோதவும் இதுதருணம் இக்கணம் எழுதும் இந்தவரி -அவள் இமைகள் அசைந்ததில் முகையவிழும் மூலப் பெருஞ்சுடர் பராசக்தி-விழி மூன்றும் முச்சுடர் கருவறையாம் கோலச் சிற்றிடை  கையூன்றி-அவள் கோவிலில் நிற்பதே பேரழகாம் வாலை வடிவினள் வரும்தருணம்-எங்கும் வீசிடும் குங்கும வாசனையாம் சோலை அரும்புகள் வாய்திறந்தே-அன்னை சோபனப் பெரும்புகழ் பேசினவாம் மோதிடும் கடல்போல் வரும்வினைகள்-எங்கள் மோகினி கருணையில் வற்றியதே பேதையென் கரமோ தூக்கத்திலும் -அவள் பாதத்தின் பெருவிரல் பற்றியதே வேதத்தின் நுட்பங்கள் அறிந்ததில்லை-என்னில் வித்தகி பைத்தியம் முற்றியதே நாதத்தின் வடிவென அவளெழுந்தாள்-என் நாபியும் ஸ்ருதியிங்கு கூட்டியதே ...

நவராத்திரி கவிதைகள்…….1

என்ன வேண்டுவதோ…..? நீலக் கருங்குயில் பாட்டினொலி- வந்து நேர்படக் கேட்டிடும் மாலையிலே வாலைச் சிறுமியின் வடிவெடுத்தே-அவள் வந்துநின்றாளென் எதிரினிலே தூல வடிவினில் ஓளிந்துகொண்டால்-இது தாயென்று சேய்மனம் அறியாதோ ஜாலங்கள் காட்டிடும் சக்தியவள்-முக ஜாடை நமக்கென்ன தெரியாதோ? எந்த வடிவையும் எடுத்திடுவாள்- அன்னை எதிர்ப்பட நினைத்தால் எதிர்ப்படுவாள் முந்திப் பறக்கிற முகில்வடிவாய்-அவள் முத்துக்கள் ஆயிரம் உதிர்த்திடுவாள் சிந்தை வலிமிகும் வேளையிலே-அவள் சின்னக் குழந்தையாய் விரல்தொடுவாள் வந்த சுவடே தெரியாமல்-வந்த வேலை முடித்துக் கிளம்பிடுவாள் காட்சி கொடுப்பது அவளெனவே-நம் கண்கள் ...

அற்புதர்-6

அற்புதரின் கைப்பையில் சில பாம்புக் குட்டிகள் இருக்கும். புற்றில் இருக்கும் பாதுகாப்புணர்வைக் காட்டிலும் அங்கேதான் பலமடங்கு பத்திரமாய் உணரும். அற்புதருக்கு பாம்புகளுடன் அறிமுகம் உண்டு.அவரை பாம்புகளுக்கு அற்புதராய்த் தெரியுமோ என்னவோ அவரின் அற்புதங்களை அவையறியும். பாம்புகளை இந்தப் பிரபஞ்சத்தின் அதிர்வுகளை உணர்த்தும் கருவிகள்என்பார் அற்புதர். சின்னஞ்சிறு  பாம்புக் குட்டிகள் சில,நேர்க்கோட்டில் நகர்ந்து கொண்டிருந்தபோது அவற்றுக்கு நெளியக்கற்றுக் கொடுத்தார் அற்புதர். சில அங்குலங்கள் மட்டுமே நகர்ந்த சில பாம்புகளை நெளிந்துநெளிந்து நெடுந்தூரம் நகரப் பழக்கினார். பாம்புகள் நெளிகையில் ஏற்படும் ...

அற்புதர்-5

அற்புதரின் பார்வை நிகழ்காலத்துடன் நின்று விடுவதல்ல. அது பின்னர் நிகழக்கூடியதையும் சேர்த்தே தரிசிக்கும் தன்மை வாய்ந்தது. அற்புதர்கள் எல்லோருமே இப்படித்தான் போலும்.ஐம்பது ஆண்டுகளுக்கு முன் ஒற்றை மனிதன் கூட இல்லாத பொட்டல் வெளியைப் பா ர்த்த ஒரு ஞானி”அடேங்கப்பா! எம்மாம் சனம்” என்று வியந்து கொண்டே நடந்தாராம். இன்று அங்கே ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சீருடை அணிந்து வந்து வழிபடும் புனிதத் தலமொன்று உருவாகிவிட்டது. அற்புதரின் பார்வையும் அத்தகையதுதான். அவர் கைகளில் விழுந்த ஒற்றை விதையைப் பார்க்கும்போது ...

அற்புதர்-4

அந்த மலையடிவாரத்தில் அற்புதர் உலவிக்கொண்டிருந்த போது சற்று முன்னதாய் இருவர் சென்று கொண்டிருப்பதைக் கண்டார். ஜனன தேவதையும் மரண தேவதையும்தான் அவர்கள் என்பதைக் கண்டுணர அவருக்கு அதிகநேரம் ஆகவில்லை.இருவர் கைகளிலும் சிறு சிறு மூட்டைகள்.அந்த மூட்டைகளை அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்று  அற்புதர் ஓரளவு யூகித்திருந்தார். தன் காலடி ஓசை கேட்காவண்ணம் மிக மெதுவாய் அவர்களைப் பின்தொடர்ந்தார் அற்புதர். அடர்ந்த வனப்பகுதிக்கு வந்ததும் இரண்டு தேவதைகளும் நின்றன. “நம்முடைய இடம் வந்துவிட்டது” என்றவண்ணம் இரண்டும் அங்கிருந்த பாறை ஒன்றில் அமர்ந்தன.முழு வடிவமில்லாத தேவதைகள் இரண்டும் அமர்ந்திருந்த கோலம், பாறைமீதில் இரண்டு வெண்முகில்கள் ...

அற்புதர்-3

அற்புதரின் நிரல்கள் அசாதாரணமானவை. கடிகாரத்தில் துள்ளிக்கொண்டிருக்கும் விநாடி முள்ளின் வீரியத்தைக் கணக்கிலிட்டு வடிவமைக்கப்பட்ட நிரல்கள் அவை.ஏனெனில் அற்புதரின் அகராதியைப் பொறுத்தவரை எப்போதோ நிகழ்வதல்ல அற்புதம். ஒவ்வொரு கணமும் நிகழ்வதே அற்புதம். நிகழும் ஒவ்வொரு கணமுமே அற்புதம்தான் என்பதை உணர்வதும் உணர்விப்பதும் அவருடைய சங்கல்பங்களில் ஒன்று. கடந்து கொண்டிருக்கும் கணத்தை வேடிக்கை பார்க்கும் நிர்ச்சலனமும் அந்தக் கணத்தை முழுமையாகப் பயன்படுத்தும் செயல்வேகமும் ஒருசேர அமைந்ததே அற்புதரின் இயல்பு.ஒரு சராசரி மனிதனின் வாழ்வில் கூட அன்றாடம்  நிகழும் அற்புதங்களை கவனிக்கச்சொல்லி அவர் ...
More...More...More...More...