முரணிலாக் கவிதை
முடிவிலாப் பாதையில் முகமிலா மனிதர்கள் இதழிலாப் புன்னகை சிந்திய பொழுது இரவிலா நிலவினை மழையிலா முகில்களும் நிறமிலா வெண்மையில் மூடிய பொழுது விடிவிலாச் சூரியன் வழியிலாப் பாதையில் தடையிலா சுவரினைத் தாண்டிய பொழுது கடலிலாச் சமுத்திரம் கரையிலா மணலினில் பதிலிலாக் கேள்வியாய் மோதிடும் அழுது யுகமிலாத் தேதியை நகமிலா விரல்களால் கரமிலாக் காலமும் கிழிக்கிற நொடியில் ஜெகமிலா பூமியின் நகர்விலா சுழற்சியை வடிவிலாக் கோள்களும் மறிக்கிற பொழுதில் சுகமிலாச் சுகங்களை நிலையிலா நிரந்தரம் வலியிலா வலியென உணர்த்திடும் நிலையில் அகமிலா அகந்தனில் விரிவுறா வெளியினில் குணமிலா இறைநிலை ...
நாதரூபம்
(02.01.2012 கோவை மாஸ்திக்கவுண்டன்பதி பாலா பீடம் ஸ்ரீ விஸ்வசிராசினி தரிசன அனுபவம்) ருத்ர வீணையின் ஒற்றை நரம்பினில் ருசிதரும் ராகங்கள் முத்திரை பிடிக்கும் மோன விரல்களில் தாண்டவக் கோலங்கள் ரத்தினத் தெறிப்பாய் விழுகிற வார்த்தையில் ரூபக தாளங்கள் எத்தனை பெரிய அற்புதம் இங்கே எதிர்வரும் நேரங்கள்!! பாவை விளக்கின் புன்னகைச் சுடரொளி பொலியும் பார்வையிலே கூவிய தெய்வக் குயிலின் சாயல் மந்திரக் கோர்வையிலே தேவியின் வாயிலில் தென்றலின் சாமரம் வெய்யில் வேளையிலே ஏவல்கள் தாங்கவும் காவல்கள் செய்யவும் ...
கடவுளின் சுவடுகள்
புன்னை வனத்தொரு பூ மலர்ந்தால் -அதை பிரபஞ்சம் எங்கோ பதிவுசெய்யும் தன்னை உணர்ந்தோர் உயிர்மலர்ந்தால்-அதை தெய்வங்கள் தேடி வணக்கம்செய்யும் முன்னை வினைகளைக் கரைப்பதற்கும்-இனி மேலும் மூளாதிருப்பதற்கும் உன்னும் உயிரினில் அருள்சுடரும்-அதன் உந்துதலால் தினம் நலம் நிகழும் காலத்தின் கறைகள் கழுவவந்தோம்-செய்யும் காரியம் துணைகொண்டு மலரவந்தோம் மூலத்தின் மூலம் உணரவந்தோம்-நமை மூடும் இருளினைத் தாண்டவந்தோம் தூலத்தின் கூட்டினில் ஒளிப்பறவை-அதன் தூக்கத்தைக் கலைத்திடும் கனவுகொண்டோம் நீலத்தின் சுடரினில் நின்றுகொண்டு-வரும் நேரக் கணக்குகள் கடக்கவந்தோம் தோணிகள் உலவிடும் நதியின்மிசை-சில துடுப்புகள் கிடைக்கும் தொலைந்துவிடும் பூணும் விருதுகள் பெருமைகளும்-சில பொம்மைகள் போல்கையில் வந்துவிழும் காணும் உயிர்கள் அனைத்திலுமே-அந்தக் ...
கண்ணகி குறித்தொரு கலகல சர்ச்சை
டிசம்பர் 2011 ஓம் சக்தி இதழில் கண்ணகி மானுடப்பெண் அல்ல என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியானது. அதனை எழுதியவர் பேராசிரியர் இராம.இராமநாதன் அவர்கள். அந்தக் கட்டுரையில் பேராசிரியர், கண்ணகி மானுடப்பெண் அல்லள் என்பதால் திருமணம் நடந்தாலும் கண்ணகியும் கோவலனும் இல்லற இன்பம் துய்க்கவில்லை என்பதாக ஒரு கருத்தைப் பதிவு செய்திருந்தார். அவருடைய வாதங்களை ஓரோவழி தொகுத்து நோக்கலாம். 1) மாநகர்க்கீந்தார் மணம் என்று கோவலன் கண்ணகி திருமணத்தை இளங்கோவடிகள் சொல்கிறார். எனவே அது ஊர்மெச்ச நடந்த ...
சாம்பல் வாசனை
பாம்பின் கண்களில் பதட்டம் பார்க்கையில் பச்சைத் தவளையின் ஆறுதல் மொழியாய் தீப்பற்றும் உன் தீவிரத்தின் முன் முழக்கங்கள் முயன்று முனகவே செய்கிறேன்: காட்டு நெருப்பு கலைத்த கலவியில் உக்கிரம் பரப்பி ஓடும் விலங்காய் எல்லாத் திசையிலும் எரிதழல் பரப்பும் உன் பார்வையில் எனக்கென பனியும் சுரக்கும் அடுத்த விநாடியே அரும்பு கட்டும் – புன்னகைக்குள்ளே புதையும் எரிமலை சமதளமாகி சந்தனமாகி எரிந்த சுவடுகள் எல்லாம் தணிந்திட எழுந்து நதியாய் என்னை நனைக்கும்.. தேம்பும் எனனைத் தழுவுமுன் கைகளின் சாம்பல் வாசனை சர்ப்பத்தை எழுப்பும் நீங்கா நிழலின் நீட்டக் குறுக்கம் தீரா வியப்பைத் தருவது ...
பாவை பாடிய மூவர்
மார்கழி மாதத்தின் மகத்துவங்களில் முக்கியமானவை அறிவால் சிவமேயாகிய மாணிக்கவாசகரின் திருவெம்பாவையும், சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாம் ஆண்டாள் பாடிக் கொடுத்த திருப்பாவையும். அவற்றின் ஆன்மத் தோய்வும் பக்தி பாவமும் அளவிட முடியா அற்புதங்கள். இந்து சமயத்திற்கு சைவமும் வைணவமும் இரண்டு கண்கள் எனில் அந்தக் கண்களின் இரண்டு பாவைகளே திருப்பாவையும் திருவெம்பாவையும் எனலாம். “குத்து விளக்கெரிய, கோட்டுக்கால கட்டில்மேல் மெத்தென்ற பஞ்ச சயனத்தின்மீது கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல் வைத்துக் கிடந்த மலர்மார்பா” என்னும் ஆண்டாளின் சொல்லோவியமும், “மாதேவன் ...