Blog

/Blog

ஆதியோகி வந்தமர்ந்த ஆலயம்

ஆதியோகி வந்தமர்ந்த ஆலயம்- நம் ஞானயோகி ஆக்கிவைத்த ஆலயம் ஜோதியாக நின்றொளிரும் ஆலயம்- இதைத் தேடிவந்து சேர்பவர்க்கு ஆனந்தம் யோகமென்னும் கொடைநமக்குத் தந்தவன்-இந்த தேகமென்றால் என்னவென்று சொன்னவன் ஆகமங்கள் தாண்டியாடும் தாண்டவன் -இந்த ஆதியோகி அனைவருக்கும் ஆண்டவன் சத்குருவின் சக்திமிக்க தந்திரம்- அட சொல்லிச் சொல்லித் தீரவில்லை மந்திரம்  பக்திகொண்டு பொங்கியதே நம்மனம்- அந்தப் பரமனுக்கும் இங்குவரச் சம்மதம் சாம்பசிவம் நீலகண்டன் என்றவன் -கரும் பாம்பின்நஞ்சில் பால்கலந்து உண்டவன் வீம்புகொண்டு மீண்டும்மண்ணில் வந்தவன் – நாம் வாழ்வதற்குக் காரணங்கள் தந்தவன் கண்ணெதிரே கடவுள்வந்த ...

கமலத்தாள் கருணை

தேனமுதம் அலைவீசும் தெய்வீகப் பாற்கடலில் வானமுதின் உடன்பிறப்பாய் வந்தாய்- வானவரின் குலம்முழுதும் வாழவைக்கும் மாலவனின் வண்ணமணி மார்பினிலே நின்றாய் சீதமதி விழிபதித்து செல்வவளம் நீகொடுத்து சோதியெனப் புதுவெளிச்சம் தருவாய் வேதமுந்தன் வழியாக வெண்ணிலவு குடையாக வளர்திருவே என்னகத்தே வருவாய் மூன்றுபெரும் அன்னையரின் மூளுமெழில் கருணையிலே மண்ணுலகம் இயங்குதம்மா இங்கே தோன்றுமுங்கள் துணையிருந்தால் தோல்வியென்றும் வாராது தொட்டதெல்லாம் துலங்கிடுமே நன்றே கலைமகளும் வார்த்தைதர அலைமகள்நீ வாழ்க்கைதர கவலையெலாம் நீங்கிடுமே நொடியில் மலைமகளும் சக்திதர முயற்சியெலாம் வெற்றிதர மணிவிளக்கை ஏற்றிவைப்பாய் ...

அன்னபூரணி-( நவராத்திரி – 8)

தள்ளிநிற்கும் படித்துறையைத் தாவித்தொடும் கங்கைநதி தாளமிடப் பாடுபவளாம் அள்ளிவைத்த பூக்களிடை உள்ளுறையும் விஸ்வேசன் உள்ளமெங்கும் ஆடுபவளாம் கள்ளமுற்ற நெஞ்சினையும் வெண்பளிங்காய் மாற்றியதில் கோயில்கொண்டு வாழுபவளாம் விள்ளலன்னம் கையில்விழ விம்மிவிம்மி நெஞ்சமழ வினைதீர்க்கும் அன்னையவளாம் பேசுமொழி உள்ளிருந்து பாட்டின்பொருளாயிருந்து பூரணத்தை சுட்டுபவளாம் வீசுதென்றல் ஊடிருந்து சுவாசத்திலே உட்புகுந்து சக்கரங்கள் தட்டுபவளாம்? ஆசையின்மேல் கனலுமிட்டு ஆட்டமெலாம் ஓயவிட்டு ஆனந்தமே நல்குபவளாம் காசிஅன்னபூரணியாம் தேசுடைய பேரழகி காவலென்று காக்கவருவாள் அத்தனை உயிர்களுக்கும் அன்னமிடும் தாயவளை அண்டியபின் என்ன கவலை? பித்தனை உருகவைக்கும் ...

காலைவரை காத்திருக்க….(நவராத்திரி 7)

காலைவரை காத்திருக்கத் தேவையில்லையே-அவள் கண்ணசைத்தால் காலைமாலை ஏதுமில்லையே நீலச்சுடர் தோன்றியபின் வானமில்லையே-அவள் நினைத்தபின்னே தடுப்பவர்கள் யாருமில்லையே சொந்தமென்னும் பகடைகளை உருட்டச் சொல்லுவாள்-அதில் சோரம்போன காய்களையும் ஒதுக்கச் சொல்லுவாள் பந்தமென்னும் கம்பளத்தைப் புரட்டச் சொல்லுவாள்-இனி படுக்க உதவாதெனவே மடிக்கச் சொல்லுவாள் உள்ளபசி என்னவென்றும் உணர்ந்துகொள்ளுவாள்-அவள் உரியநேரம் வரும்பொழுதே உணவு நல்குவாள் அள்ளியள்ளி உண்ணக்கண்டு சிரித்துக்கொள்ளுவாள்-நாம் அழ அழவும் பந்தியினை முடித்துக் கொள்ளுவாள் சூத்திரங்கள் வகுத்தபின்தான் ஆடவிடுகிறாள்-அவள் சுருதியெல்லாம் சேர்த்துத் தந்து பாடவிடுகிறாள் சாத்திரங்கள் நடுவில்தன்னைத் தேட விடுகிறாள்-மனம் சாயும்போது ...

சந்ததம் தொடர்பவள் அபிராமி (நவராத்திரி – 6)

திக்குகள் எட்டிலும் தெரிந்திருப்பாள்-என் திகைப்பையும் தெளிவையும் கணக்கெடுப்பாள் பக்கத்தில் நின்று பரிகசிப்பாள்-என் பார்வையில் படாமலும் ஒளிந்திருப்பாள் நிர்க்கதியோ என்று கலங்குகையில்-அந்த நாயகி நேர்பட நின்றிருப்பாள் எக்கணம் எவ்விதம் நகருமென்றே -அவள் என்றோ எழுதி முடித்திருப்பாள் அழுதால் அவளுக்குப் பிடிக்காது-நான் அழாவிடில் தரிசனம் கிடைக்காது விழுதாய்க் கண்ணீர் இறங்குகையில்-எந்த வீழ்ச்சியும் துரோகமும் வலிக்காது தொழுதால் அவளைத் தொழவேண்டும்-அட விழுந்தால் அவள்முன் விழவேண்டும் எழுதாக் கவிதைகள் எழுதவைத்தாள்-அவள் என்னுயிர் புதிதாய் ஒளிரவைத்தாள் வாழ்க்கை நாடகம் தொடர்ந்துவரும்-அதில் வரவுகள் செலவுகள் நிகழ்ந்து ...

அடிக்கடி வருகிற காட்சி – (நவராத்திரி-5)

நாவல் பழநிறப் பட்டுடுத்தி-மின்னும் நகைகள் அளவாய் அணிந்தபடி காவல் புரிந்திட வருபவள்போல்-அன்னை காட்சி அடிக்கடி கொடுக்கின்றாள் ஆவல் வளர்க்கும் காட்சியிதும்-என் அரும்புப் பருவத்தில் தொடங்கியது வேவு பார்க்க வந்தவள்போல் -எங்கள் வீட்டு முற்றத்தை வலம்வருவாள் பின்னங்கைகளில் தவழ்கிறதே-அது பிரம்பா கரும்பா தெரியவில்லை பின்னல் இடாத மழைக்கூந்தல் -அது புரள்கிற அழகுக்கு நிகருமில்லை கன்னங் கரியவள்- ஆறடிக்குக் கொஞ்சம் குறைவாய் அவளுயரம் மின்னல், மேகத்தின் நிறங்கொண்டு-வரும் மாயத் தோற்றமாய்த் தெரிகின்றாள் கட்டிய பின்னங் கைகளுடன் -அவள் காலடி அளந்து ...
More...More...More...More...