செப்டம்பர் 3 சத்குரு பிறந்தநாள்
Sadguru பல்லவி உள்ளம் ஒன்று கொண்டு வந்தேன் உன்னை வைக்கத்தான் வெள்ளம் போலே நீநுழைந்தாய் நானும் மூழ்கத்தான் கள்ளங்கள் விழுங்கிய கனலே கனலே கண்ணெதிர் வருகிற கனவே கனவே எல்லை இல்லா இன்பம் இங்கே உன்பேர் சொல்லித்தான் சத்குரு பாதங்கள் சரணடைந்தேன் சருகெனப் போனவன் உயிர்மலர்ந்தேன் சரணம் 1 எத்தனை பிறவிகள் என்னைச் சுமந்தே எல்லாத் திசையிலும் நடந்தேனோ எத்தனை தவங்கள் எப்படிச் செய்தேன் எவ்விதம் உன்னை அடைந்தேனோ மூச்சினில் கலந்தது உன்கருணை பேச்சினில் வருவது உன்கவிதை காட்சியில் தெரிவதும் கணத்தினில் மறைவதும் கேட்டதைத் தருவதும் ...
நன்மை பயக்கும் எனின்…..
“பிள்ளையார் பெப்ஸி குடிக்கிறார் தெரியுமா? அங்கே நிக்கறேன்” செல்ஃபோன் இல்லாத காலத்தில் தங்கள் அலுவலர்கள் இடையில் உரையாடலுக்காகத் தரப்பட்டிருந்த வாக்கி டாக்கியைக் கையில் வைத்துக் கொண்டுபேசிக்கொண்டிருந்தார் தினமலர் மார்க்கெட்டிங் பிரிவில் பணிபுரிந்து கொண்டிருந்த ஐயப்பன். கோவையில் கல்கி நூற்றாண்டு விழாவிற்கு வந்த அனைவருமே அந்த சிலையை ஆச்சரியமாகவும் ஆர்வமாகவும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். மணிமேல்நிலைப்பள்ளியின் முதல் தளத்தில் கலையரங்கம். தரைதளத்தில்,அலங்காரப் பந்தலின் கீழ் சாய்விருக்கையில் சாய்ந்தபடி, படு தீவிரமாக “கல்கி” வாசித்துக் கொண்டிருந்தார் பிள்ளையார். அவர் எதிரே இருந்த ...
எது குற்றம்? எது சட்டம்?
“தலைவர் மாறுவர் ! தர்பார் மாறும்! தத்துவம் மட்டும் அட்சய பாத்திரம்” என்றார் கவியரசு கண்ணதாசன். ஒரு கட்சியின் ஆட்சியில் தலைவர்களும் தர்பார்களும் மாறலாம். தத்துவம்மாறலாமா? மாறலாம் என்கிறது காங்கிரஸ். இலங்கை மீதான போர்க்குற்றத்தை இலங்கையே பார்த்துக் கொள்ளும், விசாரித்துக் கொள்ளும் என்கிறார் எஸ்.எம்.கிருஷ்ணா. அப்படியானால் அவர் அங்கம் வகிக்கும் காங்கிரஸின் ஆட்சியில்சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய அமைதிப்படை இலங்கைக்குப் போனது ஏன்? தன்னுடைய பிரச்சினையை இலங்கையே பார்த்துக்கொள்ளும் என்ற நிலைப்பாட்டை ஏன் அப்போது எடுக்கவில்லை? இலங்கையின் ...
உளிகள் நிறைந்த உலகமிது – 15
எந்தத் துறையில் இருந்தாலும் அந்தத் துறை சார்ந்த நல்ல புத்தகங்கள் கையில் கிடைப்பதும் ஒருவகை கொடுப்பினைதான். அப்படியொரு கொடுப்பினையின் பேரில் எனக்குக் கிடைத்த புத்தகங்கள் ஓ&எம் என்று அழைக்கப்படும் விளம்பர நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான டேவிட் ஒகில்வியின் இரு புத்தகங்கள். ஓகில்வி ஆன் அட்வர்டைசிங் மற்றும் தி அன்பப்ளிஷ்ட் டேவிட் ஒகில்வி. இவை கல்லூரிப் பருவத்தில் எனக்குக் கிடைத்த புத்தகங்கள். நல்ல வேளையாக பாடமாக இல்லை. டேவிட் ஒகில்வி (David Ogilvy) இவை சமைத்துப் பாருங்கள் வகையறா ...
கமலாம்பா
(17.08.2011.திருவாரூர் கமலாம்பிகை சந்நிதி .இரவு 9 மணி.தரிசனத்துக்கு வந்திருந்ததொரு தளிர்.இரண்டு கமலாம்பிகைகளின் இணைந்த தரிசனம்) சந்நிதி முன்வந்த சின்னஞ் சிறுமியின் கண்களில் கமலாம்பா பொன்னிதழ் மின்னும் புன்னகைச் சுடரில் பொலிந்தவள் கமலாம்பா மின்னல்கள் விசிறும் தாடங்க அசைவில் மிளிர்ந்தவள் கமலாம்பா என்னெதிர் நின்றவள் என்னுள் புகுந்தவள் இவள்தான் கமலாம்பா சிற்றாடைக்குள் சித்த சொரூபமாய் சிரித்தவள் கமலாம்பா உற்றார் நடுவினில் உறவின் கனிவாய் உதித்தவள் கமலாம்பா கற்றார் கல்வி கனிந்தே உருகக் கனிந்தவள் கமலாம்பா பெற்றார் உடனே பிள்ளை ...