உளிகள் நிறைந்த உலகமிது – 14
வாடிக்கையாளர்களின் உணர்வுகளும் அபிமானங்களும் விளம்பரங்களின் அடித்தளங்கள்.ஒரு மனிதனை அறிவு ரீதியாய் அணுகுவதை விட உணர்வு ரீதியாய் நெருங்குவது மிகவும் எளிது. பார்த்த மாத்திரத்தில் புன்னகையை உருவாக்குவது வெற்றிகரமான விளம்பரத்தின் இலக்கணம். மனிதனின் மென்னுணர்வுகள் நோக்கி வீசப்படும் எந்த மலரையும் யாரும் புறக்கணிப்பதில்லை. திருமணம், குழந்தை வளர்ப்பு கிரஹப்பிரவேசம் போன்ற சந்தோஷமான சூழல்களை மையப்படுத்தும் விளம்பரங்கள் வெற்றிபெற இதுதான் காரணம். தனியார் தொலைக்காட்சிகள் அதிகமுள்ள இந்தக் கால கட்டத்தில் இத்தகைய விளம்பரங்களை உருவாக்குவது எளிது மட்டுமல்ல. அவை வெகு ...
உளிகள் நிறைந்த உலகமிது – 13
புதியமுத்தூரிலிருந்து ஒருவர் என்னைச் சந்தித்தார். தன்னை அவர் அறிமுகப்படுத்திக் கொண்ட விதமே அலாதியானது.”வணக்கம் சார்! என் பேரு கணேசன். தமிழாசிரியர். எங்க ஊர்லே பெரிய ஆளுங்ககிட்டே நன்கொடைகள் வாங்கி, எலக்கிய விழாக்கள் விடாம நடத்தறேன். எங்கூர்லே கூட கேப்பாங்க..உம்ம பேரு கணேசனா? டொனேசனான்னு”. நன்கொடை வாங்கப் போகிறவர்கள் கையில் எலுமிச்சம்பழம் கொண்டு போவது வழக்கம். அதற்குக் காரணம் மரியாதை மட்டுமல்ல. அங்க இலக்கண சாஸ்திரமும் அதிலே இருக்கிறது. சந்திக்கப்படும் பெரிய மனிதர் எலுமிச்சம்பழத்தை கைநீட்டி வாங்கும்போது மணிக்கட்டின் ...
சங்கல்பம்
பயணம் என்பதுன் சங்கல்பம் பாதையின் திருப்பம் அவள்விருப்பம் முயற்சிகள் யாவுமுன் மனபிம்பம் முடித்துக் கொடுப்பது அவள்விருப்பம் துயரங்கள் உனது வினைபந்தம் துடைப்பதும் எரிப்பதும் அவள்வழக்கம் உயரங்கள் பள்ளங்கள் உன்கலக்கம் உடனிரு என்பதே அவள்விளக்கம் நாளும் நிமிஷமும் உன்கணக்கு நொடிகளில் மாறிடும் அவள்கணக்கு கோள்களின் அசைவினில் வாழ்வுனக்கு கோயிலில் நுழைந்தால் விதிவிலக்கு நீள்வதும் தொடர்வதும் உன்னிருட்டு நீக்கிட வருமவள் திருவிளக்கு தாள்களைத் தொடும்வரை உன்னிருப்பு தொட்டதும் தொலைந்திடும் ஏழ்பிறப்பு எவரெவர் வடிவினில் எதிர்ப்படுவாள் என்னென்ன வார்த்தைகள் உரைத்திடுவாள் எவருக்கும் இதுவரை தெரியாது எதிர்வந்து நிற்பதும் புரியாது தவறென்றும் சரியென்றும் தடமிருக்கும் தர்மத்தின் சக்கரம் சுழன்றிருக்கும் அவளிடம் சூட்சுமம் ஒளிந்திருக்கும் அவளால் நம்திசை ஒளிர்ந்திருக்கும் காற்று கலைக்கிற நந்தவனம் கொட்டும் ...
உளிகள் நிறைந்த உலகமிது – 12
காட்சி பூர்வமாக சிந்தித்தல் என்பது விளம்பர உலகத்துக்கான வேத வாக்கியங்களில் ஒன்று. காட்சி ஊடகங்களுக்கு மட்டுமின்றி அச்சு ஊடகங்களுக்கும் இது பொருந்தும். திரையிசையில் மெட்டுக்குப் பாட்டா, பாட்டுக்கு மெட்டா என்பது போலத்தான் இதுவும். சிலசமயம் நீங்கள் எழுதுகிற விளம்பரத்திலேயே காட்சி அமைப்புக்கான தூண்டுதல் இருக்கும். சில சமயம் வரைகலையாகவோ புகைப்படமாகவோ தரும் விஷுவல் உங்களை எழுதத் தூண்டும். எய்ட்ஸ் தடுப்பு நிறுவனத்துக்கு சசியில் இருந்த போது எழுதிய விளம்பர வாசகம் ஒன்று நினைவுக்கு வருகிறது. தரப்பட்டிருந்த புகைப்படம் ...
தத்துவம் கூட சிறிசு
உனக்கும் எனக்கும் தெரியலைன்னாலும் ஒலகம் ரொம்பப் பெரிசு-அட உண்மை தெரிஞ்ச ஞானிகளுக்கோ உள்ளங்கை போல் சிறிசு தனக்குன்னு எதையும் நினைக்கற வரைக்கும் தலையில பாரம் பெரிசு-ஒரு கணக்குல எல்லாம் நடப்பது தெரிஞ்சா கவலைங்க ரொம்ப சிறிசு தோணுற போது எழுதற வரிதான் தலைமுறை தாண்டியும் பெரிசு-அட தள்ளிப்போட்டு சொல்லிப் பாத்தா தத்துவம் கூட சிறிசு ஆணும் பொண்ணும் ஆடுற வாழ்க்கை அவரவர் போக்கில பெரிசு-அட ஆடி முடிஞ்சு கணக்குப் பார்த்தா அத்தனை ...
உளிகள் நிறைந்த உலகமிது – 11
கோவைக்கும் சென்னைக்கும் மாறி மாறிப் பயணம் செய்து கொண்டேயிருந்தேன். சில சமயங்களில் முதல்நாள் சென்னையிலிருந்து வந்து இறங்கி சில மணி நேரங்களிலேயே மீண்டும் அழைப்பு வரும். கையில் இரண்டு மூன்று பாட்டில்கள் சிறுவாணித் தண்ணீருடன் மீண்டும் புறப்படுவேன். பிஃப்த் எஸ்டேட்டில் புதிதாகச் சேர்ந்திருந்த ஆங்கில விளம்பர எழுத்தாளர் ராதிகாவிடம் நீலம் என்னை இப்படித்தான் அறிமுகம் செய்தார். “இவருக்கு சென்னை தண்ணீர் பிடிக்காது. வேலை என்று அழைத்தால் ஏதேனும் ஒரு ரயிலில் தொற்றிக் கொண்டு தண்ணீரும் கையுமாய் வந்து ...