உளிகள் நிறைந்த உலகமிது – 11
கோவைக்கும் சென்னைக்கும் மாறி மாறிப் பயணம் செய்து கொண்டேயிருந்தேன். சில சமயங்களில் முதல்நாள் சென்னையிலிருந்து வந்து இறங்கி சில மணி நேரங்களிலேயே மீண்டும் அழைப்பு வரும். கையில் இரண்டு மூன்று பாட்டில்கள் சிறுவாணித் தண்ணீருடன் மீண்டும் புறப்படுவேன். பிஃப்த் எஸ்டேட்டில் புதிதாகச் சேர்ந்திருந்த ஆங்கில விளம்பர எழுத்தாளர் ராதிகாவிடம் நீலம் என்னை இப்படித்தான் அறிமுகம் செய்தார். “இவருக்கு சென்னை தண்ணீர் பிடிக்காது. வேலை என்று அழைத்தால் ஏதேனும் ஒரு ரயிலில் தொற்றிக் கொண்டு தண்ணீரும் கையுமாய் வந்து ...
உளிகள் நிறைந்த உலகமிது – 10
ஷோபிகா பட்டுத் திருவிழாவுக்கு ஆடித்தள்ளுபடி போன்ற சொற்களை நேரடியாகப் பயன்படுத்தாமல், வித்தியாசமாக விளம்பரம் வேண்டுமென்று மா போஸல் ராமகிருஷ்ணன் சொன்னார். அந்த விளம்பர வரிசைக்கான கரு, என் மனதில் உருவாகியிருந்தது. புதிதாகத் திருமணமாகியிருந்த என் நண்பர் ஒருவர், பிரசவத்துக்காக பிறந்தகம் சென்றிருந்த தன் மனைவிக்கு அனுப்ப ஒரு கவிதை கேட்டிருந்தார். “வீட்டுக்குள் பகலினிலும் வெளிச்சமில்லை வாசலிலே பளிச்சென்று கோலமில்லை போட்டுவைத்த படுக்கையின்னும் சுருட்டவில்லை படுத்திருந்தேன் இரவெல்லாம்…உறக்கமில்லை” என்று தொடங்கும் கவிதை ஒன்றினை எழுதிக் கொடுத்திருந்தேன்.அதற்குத் தலைப்பு, “அப்பா ...
உளிகள் நிறைந்த உலகமிது – 9
ஒருநாள் காலை அனுமதி பெற்று கணேஷ் பாலிகாவின் அறைக்குள் நுழைந்த நான், மெல்லச் சொன்னேன், “Sir, i am resigning”. அவர் அதிர்ச்சியடையவில்லை. இந்த மனநிலைக்கு நான் வந்து கொண்டிருந்ததை அவர் ஏற்கெனவே உணர்ந்திருந்தார். ஒரேயொரு காரணம்தான். சென்னை வாழ்க்கை எனக்கு ஒத்துக் கொள்ளவில்லை. பருவநிலை, தண்ணீர் என்று பல விஷயங்கள் சரிப்படவில்லை. சசி விளம்பர நிறுவனம், பிஃப்த் எஸ்டேட் இரண்டு நிறுவனங்களுமே எனக்கொரு பாடத்தைக் கற்றுத் தந்தன. எந்த விளம்பர நிறுவனத்திலும் தமிழ் விளம்பர எழுத்தாளருக்கு ...
உளிகள் நிறைந்த உலகமிது – 8
உருவாக்கத்திலும் உள்ளடக்கத்திலும் புதுமை இருந்தால் போதாது என்பார் கணேஷ் பாலிகா. உருவானதை முன்வைப்பதிலும் அதே புதுமை அவசியம் என்று நினைப்பார். படைப்பாக்க முன்வைப்பு Presentation என்பது, விளம்பர நிறுவனங்களைப் பொறுத்தவரை ஒரு பெரிய வைபவம். எனக்குத் தெரிந்து க்ளையண்ட்டின் இடத்திற்குப் போவதை விட தங்கள் இடத்திற்கு அவர்களை அழைத்து புதுமையான ஏற்பாடுகள் செய்வதில் கணேஷ் பாலிகா கைதேர்ந்தவர். ஒருமுறை உணவகம் ஒன்றின் விளம்பரங்களுக்கான முன்வைப்பு சந்திப்பை அவர் மிகப் புதுமையாகத் திட்டமிட்டார். அலுவலக மொட்டை மாடியிலேயே உணவகச் ...
உளிகள் நிறைந்த உலகமிது-7
தொழில்நுட்பத் தகவல்கள் சார்ந்த செய்திப்படம் ஒன்றை சுவாரசியம் மிக்கதாக்க வேண்டுமென்றால் அதில் பிரபலங்களை சேர்க்கலாம் என்பது முதல் விதி. பிரபலங்களை சேர்க்கும் அளவு பட்ஜெட் இல்லையென்றால் பிரபலங்களின் சாயலில் உருவாக்கலாம் என்பது இரண்டாவது விதி. இதற்கு காபிரைட் விதிகளும் இடம் கொடுப்பதுதான் முக்கியமான விஷயம். கட்டிடத்திற்கு எந்த சிமெண்ட்டை உருவாக்கலாம் என்று தீர்மானிக்கும் சக்திகள் யார் யார் என்ற ஆய்வில் நான்குபேர் அந்த முடிவை எடுக்கிறார்கள் என்பதைச் சுற்றித்தான் செய்திப்படத்தின் கரு இயங்க வேண்டும். அதற்கு ராம்கி ...
உளிகள் நிறைந்த உலகமிது – 6
தொண்ணூறுகளின் தொடக்கம், காட்சி ஊடகங்களின் ஆட்சி தொடங்கிய காலம். தனியார் தொலைக்காட்சிகள் தலையெடுக்கத் தொடங்கிய நேரம். தொலைக்காட்சி விளம்பரங்களை உருவாக்கும் பணிகளிலும் பிஃப்த் எஸ்டேட் நிறுவனம் ஈடுபட்டது. சசியில் இருந்தபோது, காட்சி ஊடகங்கள் மூலம் கவனம் ஈர்க்கும் விளம்பரங்களை உருவாக்குவதில் கைதேர்ந்தவரான சந்திரசேகர் துடிப்பும் துள்ளலுமாக பல வெற்றிகளைக் குவித்துக் கொண்டிருந்தார். நடிகை ஹீராவைக் கொன்டு தயாரிக்கப்பட்ட ஏவிடி பிரீமியம் டீக்கான “பார்த்தீங்களா! பார்த்தீங்களா!, கேட்டீங்களா! கேட்டீங்களா! சாப்டீங்களா? சாப்டீங்களா?”என்ற விளம்பரம் பெரும்புகழ் பெற்றது. அப்போது சசியில் ...