Blog

/Blog

காட்டுச் சுனை

சித்திரம் தீட்டிட விரும்பிவந்தேன் -திரைச் சீலையில் உன்முகம் தெரிகிறது எத்தனம் இன்றியென் தூரிகையும்-உன் எழில்முகம் தன்னை வரைகிறது எத்தனை தேடல்கள் என்மனதில்-அவை எல்லாம் குழைத்தேன் வண்ணங்களாய் நித்திலப் புன்னகை தீட்டுகையில்-அந்த நிலவொடு விண்மீன் கிண்ணங்களாய்!! கண்களின் பாஷைகள் வரைவதற்கு-அந்தக் கம்பனின் எழுதுகோல் வாங்கிவந்தேன் பண்ணெனும் இன்சொல் வரைவதற்கோ-நல்ல புல்லாங்குழலொன்று கொண்டுவந்தேன் மண்தொடும் புடவை நுனிவரைய-அந்த மன்மதன் அம்புகள் தேடிவந்தேன் பெண்ணுன்னை முழுதாய் வரையவென்றே-இந்தப் பிறவியைக் கேட்டு வாங்கிவந்தேன் பொன்னில் நனைந்தநல் வளைவுகளும்-எனைப் பித்தெனச் செய்யும் அசைவுகளும் மின்னில் எழுந்தவுன் ...

தோடுடைய செவியள்

 நிசப்தம் நிறைந்த அரங்கத்தில் தம்பூரின் மீட்டலாய்த் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தது அந்தக் குழந்தையின் அழுகை.தாங்கொணா அமைதிக்கொரு மாற்றாய்,மெல்லிய இசையின் கீற்றாய் ஒலித்த அந்தக் குரலுக்குரிய குழந்தைக்கு மூன்று வயதிருக்கும்.எத்தகைய சதஸில் தாம் இடம்பெற்றிருக்கிறோம் என்பதை அறியாப் பருவமென்று தமக்குள் சிரித்துக் கொண்டனர் அவையோர்.மன்னிக்க.சபையோர். இராம சரித்திரம் எத்தனை மொழிகளில் எழுதப்பட்டாலும் அத்தனை மொழிகளிலும் படித்து,கரைத்துக் குடித்து,ஒரு படலம் கூட பாக்கி வைக்காமல் செரித்து,விருந்துக்குப் பின்னர் புசிக்கும் பலமூல வகைகள் போல் உபநிஷதங்களையும்,அதன்பின் பருகும் பால் போல் தோத்திர நாமாவளிகளையும்,தரிக்கும் தாம்பூலம் போல் சில தமிழ்ப்பாடல்களையும் உட்கொண்டு,அவற்றின் சங்கமத்தை ஏப்பமாய் வெளிப்படுத்தும் ஏழிசையாசி,சண்டப் பிரசண்ட பிரசங்க சக்ரவர்த்தினி, அருளானந்த மேதா சரஸ்வதியின் உபந்யாசக் கூடம் அது. எந்த விநாடியும் ...

மண்ணாந்தை

 நுண்மான் நுழைபுலம் என்ற  சொற்றொடருக்கு  சத்திய  சாட்சியாக  விளங்குபவர் பெரும்புலவர் பா.நமசிவாயம் அவர்கள். மதுரை அருகிலுள்ள திருப்புத்தூரில் வாழ்ந்து வருகிறார்.மற்றவர்களை வேண்டுமானால் வசித்து வருகிறார் என்று சொல்லலாம்.இவரை வாழ்ந்து வருகிறார் என்றுதான் சொல்ல வேண்டும். விநாடிக்கு விநாடி,வாழ்வை ரசித்து வாழ்பவர் அவர்.பெரும்புலவர்.பா.நமசிவாயம் அவர்களை நடுவராகக் கொண்டு,பேராசிரியர் சாலமன் பாப்பையா,பேராசிரியர் சோ.சத்தியசீலன் போன்றோர் அணித்தலைவர்களாகப் பேசி வளர்ந்தார்கள். பெரும்புலவரின் மிகப்பெரிய பலங்களில் ஒன்று,நுட்பமான நகைச்சுவை.எப்போதும் சிரித்த முகமும் கூப்பிய கைகளுமாய் வரவேற்பார்.பேராசிரியர் அன்பழகனின் ஜாடை இருக்கும். அவருடைய நேரடி மாணவரும் கூட.இவர் வாழ்ந்து ...

யார் சொல்வது?

யாருக்கும் தெரியாத திசையொன்றிலே-எந்த யாழோடும் பிறவாத இசைகேட்கிறேன் வேருக்கும் தெரியாமல் பூப்பூத்ததே-அதன் வாசத்தை மறைக்கத்தான் வழிபார்க்கிறேன் நான்மட்டும் என்னோடு உறவாடியே-பல நாளல்ல,வருடங்கள் கழிந்தோடின வான்முட்டும் மகுடங்கள் வரும்போதிலும்-அந்த வலிநாட்கள் மனதோடு நிழலாடின தழும்பில்லாக் காயங்கள் நான்கொண்டது- அவை தருகின்ற பாடங்கள் யார்கண்டது எழும்போதும் எங்கேயோ வலிக்கின்றது-அது எதனாலோ இதமாக இருக்கின்றது இவன்மூடன் எனச்சொன்ன காலமுண்டு-பின் இளம்மேதை எனச்சொன்ன காலமுண்டு சிவனென்ன சொல்வானோ அறியேனம்மா-என் சிறுமைகள் பெருமைகள் உணரேனம்மா  பொல்லாத அச்சத்தில் இரவெத்தனை-அட பொய்யான கனவான உறவெத்தனை நில்லாத ஏக்கத்தில் நினைவெத்தனை-இதில் நிஜமாக நான்வாழ்ந்த ...

மீட்டர் இல்லாத வாழ்க்கை

கஸ்தூரிமான் படத்தில் பாதிரியார் வேடத்தில் நடித்த போது இருசக்கர வாகனம் ஓட்டுவதுபோல் ஒரு காட்சி. மலையாளப்படத்தில் பாதிரியார் ஓட்டியது ஸ்கூட்டரா மோட்டார்பைக்கா என்று தெரியவில்லை.இந்த சந்தேகத்தை ஜெயமோகனிடம் கேட்டபோது எப்போதும் போலவே “அப்படியா?”என்றார். பிறகு இணை துணை இயக்குநர்களிடம் கேட்டபோது “அது டி வி எஸ் 50 சாரே” என்றார்கள். கொஞ்சம் ஆசுவாசமாக இருந்தது. சைக்கிளுக்குப் பிறகு ஓரளவு ஓட்டிப் பழகியிருந்த வாகனம் அதுதான். ஒருவேளை ஸ்கூட்டர்,மோட்டார்பைக் என்றிருந்தால் டூப்  போட வேண்டி வந்திருக்கும். என் பங்குதாரர் வேணுகோபாலிடம் ஒரு டி வி எஸ் 50 இருந்தது. படப்பிடிப்புக்கு முதல்நாள் அதில் ஒத்திகை பார்க்க கோவையின் ரேஸ்கோர்ஸ்  பகுதிக்குக் கிளம்பினேன்.என் காருக்கு அப்போதிருந்த ...

பூமியில் உலவிய புல்லாங்குழல்

(2011 பிப்ரவரி 16&25 தேதிகளில் கும்பகோணத்திலும் தஞ்சையிலும் நடைபெற்ற மீலாது நபி விழாவில் ஆற்றிய உரைகளின் சில பகுதிகள்) நபிகள் நாயகம் எழுதப்படிக்கத் தெரியாதவர் என்றும், அவர் வழியே இறைவாசகங்கள் அருளப்பட்டன என்றும் இசுலாம் சொல்கிறது. கோடிக்கணக்கானவர்கள்  பின்பற்றும் ஒரு மார்க்கத்தின் மறைநூலை வெளிப்படுத்தியவர் எழுதப்படிக்க அறியாதவர் என்பதில் முக்கியமான ஓர் அம்சம் இருக்கிறது. புல்லாங்குழல் இசையின் பிறப்பிடமாக இருப்பதற்குக் காரணமே அதிலுள்ள வெற்றிடம்தான். தன்னுள் இருக்கும் அந்த வெளியினால்தான் உள்நுழையும் வளியை புல்லாங்குழல் இசையாக்குகிறது. “வண்டு ...
More...More...More...More...