Blog

/Blog

பூமியில் உலவிய புல்லாங்குழல்

(2011 பிப்ரவரி 16&25 தேதிகளில் கும்பகோணத்திலும் தஞ்சையிலும் நடைபெற்ற மீலாது நபி விழாவில் ஆற்றிய உரைகளின் சில பகுதிகள்) நபிகள் நாயகம் எழுதப்படிக்கத் தெரியாதவர் என்றும், அவர் வழியே இறைவாசகங்கள் அருளப்பட்டன என்றும் இசுலாம் சொல்கிறது. கோடிக்கணக்கானவர்கள்  பின்பற்றும் ஒரு மார்க்கத்தின் மறைநூலை வெளிப்படுத்தியவர் எழுதப்படிக்க அறியாதவர் என்பதில் முக்கியமான ஓர் அம்சம் இருக்கிறது. புல்லாங்குழல் இசையின் பிறப்பிடமாக இருப்பதற்குக் காரணமே அதிலுள்ள வெற்றிடம்தான். தன்னுள் இருக்கும் அந்த வெளியினால்தான் உள்நுழையும் வளியை புல்லாங்குழல் இசையாக்குகிறது. “வண்டு ...

ஒண்ணேகால் இருக்கை

ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ்ஸின் ஏசி கோச்சில் பெரும்பாலும் எனக்கு ஜன்னலோர இருக்கை அமைந்துவிடும்.அதுமட்டுமா.பெரும்பாலும் எனக்குப் பக்கத்து இருக்கை காலியாகத்தான் இருக்கும்.மாதம் இருமுறையாவதுஅதில் பயணம் செய்து வருபவன் என்பதால் அதிலுள்ள பணியாளர்கள் பலரும் எனக்குப் பழக்கமானவர்கள் கோவையிலிருந்து  மயிலாடுதுறை போகும் அந்த ரயிலில் கரூர்,திருச்சி,தஞ்சாவூர்,கும்பகோணம்,மயிலாடுதுறை என்று அதன் சகல நிறுத்தங்களிலும் எனக்கு வேலையிருக்கும். காலையில் அந்தரயிலில் ஏறி கரூரிலோ திருச்சியிலோ கல்லூரிக்கூட்டங்களில் பேசிவிட்டு,மாலை அதே ரயிலில் திரும்புவதும் உண்டு.காதில் வயர்ஃப்ரீ எம்பீத்ரீயை மாட்டிக் கொண்டு கண்மூடி சாய்ந்தால் மகராஜபுரம் சந்தானம் ...

கர்ணன்-6

 பாஞ்ச சன்னியம் முழங்க முழங்க பாரத யுத்தம் தொடங்கியது பாண்டவர் கௌரவர் சேனைகள் மோதிட குருஷேத்திரமே கலங்கியது அர்ச்சுனன் தேரை கண்ணன் இயக்கிட சல்லியன் கர்ணனின் சாரதியாம் கர்ணனை இகழும் சல்லியனாலே இருவருக்கிடையே மோதல்களாம் யுத்த களத்தினில் கர்ணனை விட்டு இறங்கி நடந்தான் சல்லியனே வித்தகன் கண்ணன் சொன்ன படியே கணைகள் தொடுத்தான் அர்ச்சுனனே கொடுத்துச் சிவந்த கர்ணனின் கைகள் குருதி துடைத்துச் சிவக்கிறதே அடித்த அம்பினில் உயிர்பிரியாமல் தர்ம தேவதை தடுக்கிறதே எய்த அம்புடன் கிடந்த ...

கர்ணன்-5

    பாரத யுத்தம் நெருங்கிடும் நேரம் பாண்டவர் தூதன் பரந்தாமன் மாபெரும் கலகம் செய்திட வந்தான் மாதவன் கேசவன் யதுபாலன்   குந்தியின் அரண்மனை சென்றவன் அவளது கடந்த காலத்தைத் தோண்டிவிட்டான் அன்றவள் நதியில் வீசிய மகன்தான் கர்ணன் என்பதைக் கூறிவிட்டான் கதறிய குந்தியை அமைதிப் படுத்தி காரியக் காரன் தூண்டிவிட்டான் எதிர்வரும் போரில் இரண்டு வரங்களை கேட்டிடச் சொல்லிப் போகவிட்டான்   மைந்தனின் அரண்மனை வாசலில் வந்து மாதவள் நின்றாள் அழுதபடி வந்தவள் தாயென ...

கர்ணன்-4

கிழக்கில் கதிரவன் உதிக்கையில் மகனாம் கர்ணன் துதிப்பான் உவகையிலே நமக்கும் அந்த அனுபவம் கிடைக்கும் கண்ணதாசன் கவிதையிலே (ஆயிரம் கைகள் நீட்டி-பாடல்) சூரிய வணக்கம் செய்கிற வேளையில் குரலொன்று கேட்டது வாசலிலே காரியம் ஒன்று நடத்திட இந்திரன் வந்தான் யாசகன் வடிவினிலே வந்தவன் பகைவன் என்பதைத் தந்தை வகையாய்ச் சொன்னான் மகனுக்கு எந்தப் பொருளையும் இல்லை என்கிற எண்ணம் இல்லையே இவனுக்கு ஒட்டிப் பிறந்த கவச குண்டலம் தானம் கேட்டான் இந்திரனே வெட்டி எடுத்து அடுத்த நொடியே ...

கர்ணன்-3

பக்தியும் பணிவும் பொங்கிடும் மனதுடன் பணிந்தே கர்ணன் நிற்கின்றான் சக்தியின் களஞ்சியம் பரசுராமனின் குருகுலம் தனிலே கற்கின்றான் தந்தையை கொன்றவன் ஷத்ரியன் என்பதில் தாங்க முடியாக் கோபத்திலே அந்தணருக்கே வில்வித்தை போதனை பரசுராமனின் கூடத்திலே   தானெந்த குலமென்று தெரியாத தனால் மாணவன் ஆனான் கர்ணனுமே ஆனந்த மாக போதனை வழங்கி ஆதரித்தான் பரசு ராமனுமே மாணவன் மடியில் தலைவைத்துக் கிடந்தான் முனிவன் ஒருநாள் மதியத்திலே ஆணவ இந்திரன் சதிசெய்ய வந்தான் அங்கொரு வண்டின் வடிவத்திலே   ...
More...More...More...More...