22. குரோட்டன்ஸ் செடிகளா குழந்தைகள்?
பள்ளிக்கூடம் போய்வரும் குழந்தைகளின் முகங்களை கவனியுங்கள். பள்ளிக்கூடம் போகும்போது முகத்தில் இருக்கிற அதே கலவரம், பல குழந்தைகளுக்கு, வீட்டுக்கு வரும்போதும் இருக்கிறது. டியூசன், புதிய கணக்குத் திட்டம் என்று ஏகக் கெடுபிடிகள் வீட்டிலும்!! குழந்தைகள் என்னவாக வர வேண்டும் என்று தீர்மானித்துவிட்ட பெற்றோர்கள் பலர், குரோட்டன்ஸ் செடிகளை நறுக்கி நறுக்கி வளர்ப்பது மாதிரி குழந்தைகளின் குழந்தைத்தனத்தையும் மற்ற ஆர்வங்களையும் நறுக்கி நறுக்கி வளர்க்கிறார்கள். இன்றைய பெற்றோர்கள் பலருக்கு ஒரு விசித்திரமான குணம் வந்திருக்கிறது. குழந்தை எதைச் செய்தாலும், ...
21. பென்சில் போல் வாழ்ந்தால் வெற்றிதான்!
ஒரு மனிதர் தன் வாழ்வில் தொட்ட துறைகளில் எல்லாம் வெற்றி பெற்று வந்தார். அவரது வெற்றிக்கெல்லாம் யார் வழிகாட்டி என்று நிருபர்கள் கேட்டார்கள். “இவர்தான்” என்று சுட்டிக்காட்டினார். அவர் காட்டிய திசையில், தங்க ஃபிரேம் போட்டு ஒரு பென்சில் புகைப்படம்! நிருபர்கள் திகைத்தார்கள். அவர் சொன்னார், “இந்தப் பென்சில் எனக்கு 5 விஷயங்களைக் கற்றுத் தந்தது.” – பல விஷயங்களை எழுதுவதற்கும், வரைவதற்கும் தன்னை முழுமையாக நாம் கைகளில் ஒப்படைக்கிறது. – அவ்வவ்போது நாம் அதை சீவுகிறோம். ...
20. எதிர்ப்புகளை என்ன செய்யலாம்?
எல்லாப் புராணங்களிலும், நல்ல காரியங்களுக்கு எதிர்ப்புகள் வருவதாகச் சொல்லப்படுகிறது. குழந்தைகளுக்குச் சொல்லப்படுகிற எல்லாக் கதைகளிலுமே சாமானிய மனிதர்கள், பெரிய அரக்கர்களை வீழ்த்துகிறார்கள். இவற்றை ஆழ யோசித்தால், ஒன்று புரியும். அரக்கர்களை, ராட்சச பலம் கொண்டவர்களை, ஒரு நல்ல காரியம் நிகழ வேண்டும் என்கிற நோக்கில், சராசரி மனிதர்கள் எதிர்க்கிறார்கள். வெற்றியும் பெறுகிறார்கள். அதனால்தான், உலக நன்மைக்கான யாகங்கள் செய்யப்படும்போது அரக்கர்கள் இடைஞ்சல் செய்ததாய்க் கதைதகள் சொல்கின்றன. யாகம் என்று கதையில் சொல்லப்படுவதை நாம் நல்ல காரியம் என்ற ...
19. சுட்டிக்காட்டினால் சுடுகிறதா?
நம்மில் பலருக்குத் இந்த குணமிருக்கும். அல்லது, நம் நண்பர்களுக்காவது இருக்கும். மற்றவர்கள் நம்மை விமர்சிக்க வேண்டுமென்று கேட்போம். அவர்கள் தயங்குவார்கள். “சும்மா சொல்லுங்க! நல்லதுக்குத்தானே சொல்லப்போறீங்க” என்று உற்சாகப்படுத்துவோம். அவர்கள் தயக்கத்துடன் சொல்லத் தொடங்குவார்கள். சில நிமிடங்கள்தான். நமக்குப் பொறுக்காது, “அப்படியா நினைக்கிறீங்க! அது ஏன் தெரியுமா?” என்று விளக்கம் கொடுக்கத் தொடங்குவோம். நன்கு யோசித்தால் அந்த விளக்கத்தில் நியாயமில்லாதது நமக்கே நன்றாக விளங்கும். ஆனாலும் பிடிவாதமாக விளக்கங்கள் தந்துகொண்டேயிருப்போம். இன்னொரு வகையும் உண்டு. பிறரிடம் அவர்களுடைய ...
18. எது உள்ளுணர்வு? எது சந்தேகம்?
எந்த ஒரு சிந்தனையாளரையும் கேளுங்கள் – “உங்கள் உள்ளுணர்வின் குரலுக்கு மதிப்புக் கொடுங்கள்” என்று திரும்பத் திரும்பச் சொல்வார்கள். ஒரு காரியத்தைத் தொடங்கலாமா வேண்டாமா என்று உள்ளுணர்வு உணர்த்துவது சரியாக இருக்கும் என்பார்கள். ஒரு காரியத்தைத் தொடங்கும்போது, அதைச் செய்யலாமா வேண்டாமா என்று சந்தேகம் ஏற்படுகிறது. அது சந்தேகமா? உள்ளுணர்வின் குரலா என்று எப்படித் தீர்மானிப்பது? ஒரு குரல், சந்தேகத்தின் குரலா என்று நீங்கள் சந்தேகம் கொள்கிறீர்களா? அப்படியானால் சந்தேகமேயில்லை! அது சந்தேகம்தான்! ஏன் தெரியுமா? உள்ளுணர்வின் ...
17. உனக்கும் கீழே உள்ளவர் கோடி!
“சோர்வு” என்பது பெரிய விஷயம் என்றுதான் பலரும் நினைக்கிறோம். அதில் ஒரே எழுத்து மாறினால்போதும். “தீர்வு” பிறந்துவிடும். “மனம் சோர்வடையத் தொடங்குகிறதா? எழுந்திருங்கள்! ஒரே இடத்தில் உட்காராதீர்கள்! நகருங்கள்! நகருங்கள்!” என்று உந்தித் தள்ளுகிறார்கள் உளவியல் நிபுணர்கள். எங்கும் செல்லாமல் ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பவர்களை மலைப்பாம்பு மாதிரி சுற்றிக்கொள்கிறதாம் மனச்சோர்வு! ஒரே அறைக்குள் அடைந்துகிடக்கும்போது இருதயத் துடிப்பு குறைகிறது. மூளைக்கும் பிராண வாயுவின் ஓட்டம் குறைகிறது. நுரையீரலுக்கு நல்ல காற்று வந்து சேர்வதும் தடைப்படுகிறது. கொஞ்சம் சோர்வு ...