Blog

/Blog

இருபத்தோராம் நூற்றாண்டில் சேக்கிழார்-13

நாயனாரின் பெயரை வைத்தே அவருடைய இயல்பை நாம் புரிந்து கொள்ளும்விதமாக சேக்கிழார் நம்மைத் தயார் செய்கிறார். ஆங்கிலத்தில் Reformist என்றொரு சொல் உண்டு. அதற்கு நேரான தமிழ்ச்சொல் சீர்திருத்தவாதி என்பதாகும். அதே போல Revolutionist என்ற சொல்லும் உண்டு. அதற்கான தமிழ்ச் சொற்கள் புரட்சியாளன், கலகவாதி என்பன. ஆங்கிலத்தில் இன்னும் தீவிரமான சொல் ஒன்று உண்டு Refel என்று. –Refel என்றால் அவன் கலகம் செய்வதுகூட இல்லை. அவனுடைய இயல்பே சமூகம் தனக்கென்று வகுத்திருக்கின்ற நியதிகளுக்கு முரணாக ...

இருபத்தோராம் நூற்றாண்டில் சேக்கிழார்-12

சட்டப்படி தவறில்லை என்றாலும் தார்மீகப்படி ஒன்றைத் தவறு என்று அரசன் முடிவு கட்டுகிறபோது அவனை சமாதானப்படுத்துவதற்கு அமைச்சர்கள், “இதற்காக நீங்கள் கவலைப்படவேண்டாம். ‘இதற்கு சில பரிகாரங்களைச் செய்யலாம்’ என்று நம்முடைய அந்தணர்கள் சில முறைகளை வகுத்துள்ளார்கள்” என்று அடித்துப் பேசுகிறார்கள். “சிந்தை தளர்ந்த அருளுவது மற்றிதற்குத் தீர்வு என்றால் கொந்தவர்தார் மைந்தனை முன் கோவதை செய்தார்க்கு மறை அந்தணர்கள் விதித்த முறை வழிநடத்தல் அறம்” என்றார். பசுவதை என்பது ஒன்றும் புதிதில்லை. பசுவை வதை செய்தவர்களுக்கு என்று ...

இருபத்தோராம் நூற்றாண்டில் சேக்கிழார்-11

திருத்தொண்டர் புராணத்தின் தொடக்கத்திலேயே மனுநீதிச் சோழனின் வரலாற்றை சேக்கிழார் எழுதுகிறார். அரசர்கள் உலவக்கூடிய வீதியில் பசுவோ அதன் கன்றோ புகுவதற்கு வாய்ப்பில்லை. சுற்றி நிறைய தேர்கள் சூழ்ந்து வர மனுநீதிச் சோழனின் மகன் தேரிலே வருகிறார். இந்த காலத்தில் அமைச்சர்கள் வருகின்ற வாகனங்கள் ஒலி எழுப்பிக் கொண்டு வருவதுபோல் அன்று இளவரசனின் தேரிலும் இவனைச் சுற்றி வருகின்ற தேர்களிலும் பெரும் ஓசையை எழுப்பக்கூடிய மணிகள் அசைந்து கொண்டே வருகின்றன. அந்த வீதிக்குள் கன்று வந்ததும் எழுப்பப்பட்ட ஒலிகளை ...

இருபத்தோராம் நூற்றாண்டில் சேக்கிழார்-10

இன்றளவும் உலக சமுதாயம் முழுமையிலும் நிகழும் நிகழ்ச்சிகளைப் பார்ப்போமேயானால் சட்டப்படி தவறு என்று சிலவும், தார்மீகப்படி தவறு என்று சிலவும் பேசப்படுகின்றன. வரையறுக்கப்பட்ட சட்டங்களின்படி ஒரு மனிதரின் செய்கை குற்றமில்லை என்று தீர்ப்பாகிவிடலாம். ஆனால் அந்த மனிதரை அந்த குற்றத்திற்காக சமூகம் மன்னிக்காமல் தள்ளி வைப்பதும் உண்டு. வரையறுக்கப்பட்ட சட்டங்களைவிட வாழ்வியல் சட்டங்கள் வலிமை யானவை என்பதை இந்த நோக்கு உணர்த்துகிறது. இந்த இரண்டு வகைச் சட்டங்களில் எது சரி என்பதை வெவ்வேறு நிலைகளில் சேக்கிழார் விரிவாகப் ...

இருபத்தோராம் நூற்றாண்டில் சேக்கிழார்-9

இறையடியார்களாக இருப்பாரேயானால் மாட்டுக் கறியைத் தின்கிற புலைசாதியில் பிறந்திருந்தாலும் அவர்களும் நம்மால் வணங்கத்தக்கவர்கள் என்கிற கருத்தை திருநாவுக்கரசர் பாடுகிறார். “அங்கமெலாம் குறைந்தழுகு தொழுநோயராய் ஆவூரித்துத் தின்றுழலும் புழையேரேனும் கங்கைவார் சடைக்கரந்தார்க்கு அன்பராகில் அவர்கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே” என்பது திருநாவுக்கரசர் தேவாரம். அதே போல பரத்தையர் குலத்தில் பிறந்த பரவையாரையும், வேளாளர் குலத்தில் பிறந்த சங்கிலியாரையும் சுந்தரமூர்த்தி நாயனார் திருமணம் செய்து கொள்கிறார். இதற்கு முன்பாக வணிகர் குலத்தில் பிறந்த சிவநேசர் என்பவர் தன்னுடைய மகளை திருஞானசம்பந்தருக்கு ...

நதிப்பாட்டு

கண்ணாடி வளைக்கரம்போல் கலகலக்கும் அலைகளெல்லாம் மண்ணோடு மோதுகிற மோகனத்து விளையாட்டை கண்ணார நாம்காண காலம்வரப் போகுதடி-குதம்பாய் விண்ணவரும் வியக்கின்ற விந்தைவரப் போகுதடி வேர்தடவி மரம்தடவி விதம்விதமாய் மலருதிர பூரதம்போல் நடைநடைக்கும் புனிதமான நதிகளெல்லாம் பாரதத்தில் மறுபடியும் பெருக்கெடுக்கும் காலமடி-குதம்பாய் ஆரத்தி எடுப்பதற்கு அனைவரையும் கூப்பிடடி சமயமெனும் பேதமின்றி,சாதிமொழி மோதலின்றி, குமரிமுதல் இமயம்வரை கும்மிகொட்டும் யாத்திரையாம்; அமைதியான விழிப்புணர்வு அலைவீசப் போகுதடி -குதம்பாய் தமையறிந்த சத்குருவின் தலைமையிலே நிகழுதடி பல்லாயிரம் மைல்கள் பவனிவரும் யாத்திரையை சொல்லாயிரம் கொண்டு சொன்னாலும் ...
More...More...More...More...