Blog

/Blog

எட்டயபுரமும் ஓஷோபுரமும்

ஊடகமே செய்தி என்ற மேக்லூஹனின் சிந்தனையை ஓஷோ கண்ணனுடன் பொருத்திக் காட்டியதை நினைவுபடுத்திக் கொண்டே பாரதியிடம் வருகிறோம். ஒருவனுக்கு நல்ல சேவகன் அமைய அமையாமல் தவிக்கும் போது கண்ணன் சேவகனாகவும் வருகிறான். வந்தவன் வெறுமனே கூலிக்குப் பணி செய்து விட்டுப் போகிறவனாய் இல்லை. என்ன பெயர்? என்று கேட்டால் “ஒன்றுமில்லை” என்று பதில் வருகிறது. பெயர்களுக்குள் அடங்காத பிரம்மாண்டம், சேவகனாக எளிவந்த தன்மையில் நிற்கிறது. சேவகனாக வருகிற கண்ணனின் பெருமைகளைப் பறைசாற்றுவதாக இந்தப்பாடல் இருக்கிறது. குறிப்பாக மூன்று ...

எட்டயபுரமும் ஓஷோபுரமும்

இனி, இப்படியரு குருவாகவே தன்னை உருவகப்படுத்திக் கொள்கிறான் பாரதி. அவனிடம் சீடனாக வந்து சேர்கிறான் கண்ணன். கண்ணன், இந்த குருவைக் காண வரும்போது, அவனைவிட அறிவில் குறைந்தது போலவும், குருவின் தொடர்பால் தன்னை உயர்த்திக் கொள்ள விரும்புகிறவன் போலத்தான் வந்து சேர்கிறான். “என்னிலும் அறிவினிற் குறைந்தவன் போலவும் என் நடை பழகலால், என் மொழி கேட்டலால் மேம்பாடு எய்த வேண்டினோன் போலவும், யான் சொலும் கவிதை, என் மதி அளவை இவற்றினைப் பெருமை இலங்கின என்று கருதுவான் ...

எட்டயபுரமும் ஓஷோபுரமும்

சீடனாய்… சேவகனாய் ஜெயகாந்தன் எழுதிய மிகச் சிறந்த சிறுகதைகளில் ஒன்று குருபீடம். சோம்பலும் அலட்சியமும் திமிர்த்தனமுமாய் வாழ்கிற பிச்சைக்காரன் ஒருவன் அந்த ஊரின் வீதிகளில் திரிவான். ஒருநாள், கண்களில் வெளிச்சமும், நெற்றியில் திருநீருறுமாய் ஓர் இளைஞன் அவனை வந்து வணங்குவான். தன் குரு அந்தப் பிச்சைகாரன்தான் என்று கனவில் கண்டு கொண்டதாகவும் அவனுக்குத் தொண்டு செய்வதே தன் கடமை என்றும் அந்த இளைஞன் சொல்வான். நாளடைவில் பிச்சைக்காரனுக்கு ஊரெங்கும் புகழ் கூடும். அவனுடைய வாழ்க்கை மாறும். ஒரு ...

எட்டயபுரமும் ஓஷோபுரமும்

‘கண்ணன் என் அரசன்’ என்று கண்ணனின் போர்த்திறம் பற்றிப் பாட வருகிறான் பாரதி. “பகைமை முற்றி முதிர்ந்திடும் மட்டிலும் பார்த்திருப்பது அல்லாமல் ஒன்றும் செய்திடான்! நகை புரிந்து-பொறுத்துப்பொறுத்து-ஐயோ நாட்கள், மாதங்கள், ஆண்டுகள் போக்குவான்!” இந்த வரிகள், ஓஷோ சொல்கிற ஜூடோ கலையினை நமக்கு நினைவூட்டுகிறது. இன்னொன்றையும் ஓஷோ சொல்கிறார். “கண்ணன் பகைவர்களை வெல்வதெல்லாம் விளையாட்டாகவும் வேடிக்கையாகவும் நிகழ்ந்திருக்கிறது-? If Krishna won against his powerful enemies, the reason was that for him, fighting ...

எட்டயபுரமும் ஓஷோபுரமும்

வெற்றியா? விளையாட்டா? எல்லோரையும் எல்லா விதங்களிலும் வெற்றி கண்டதாகத்தான் கண்ணனின் வாழ்க்கை இருந்திருக்கிறது. உரலோடு கட்டப்பட்ட குழந்தை உரலை இழுத்துக் கொண்டே அரக்கர்களைக் கொல்கிறது. பால் கொடுத்துக் கொல்ல வந்த பூதகியைக் கொல்கிறது. வளர்ந்த பிறகும் இந்த வெற்றி வரலாறு தொடர்கிறது. காளிங்க நர்த்தனம், கோவர்த்தன கிரியைக் குடையாக்கிய சம்பவம் என்று பட்டியல் நீள்கிறது. பாரதப் போர்வரையில் வந்து நிற்கிற கண்ணனின் வெற்றிகள் பற்றி ஓஷோவிடம் கேட்கிறார்கள். சிசுபாலனைக் கொல்வதற்கு முன் தன் மேல் ஏவப்பட்ட 999 ...

எட்டயபுரமும் ஓஷோபுரமும்

கண்ணனைத் தன் தந்தையென்று பாடுகிற பாரதி, கண்ணனின் மேன்மைகளைப் பாடிக் கொண்டு வருகிறபோதே, “பல்வகை மாண்பினிடையே – கொஞ்சம் பயித்தியம் அடிக்கடி தோன்றுவதுண்டு நல்வழி செல்லுபவரை- மனம் நையும் வரை சோதனை செய் நடத்தையுண்டு” என்று பாடுவது கூர்ந்து நோக்கத்தக்கது. “மனம் நைகல்” என்பது மனம் நொந்து இறைவனை ஏசுவதல்ல. ‘தான்-தனது’ என்பன போன்ற எண்ணங்களுடன் மனதுக்கிருக்கும் கடைசி இழையும் நைந்து போகும் வரை என்பதை இதன் பொருள். இது தொடர்பாக ஓஷோ ஒன்றைச் சொல்கிறார். ‘தான்-தனது’ எனபதைக் ...
More...More...More...More...