எட்டயபுரமும் ஓஷோபுரமும்
கண்ணனைத் தன் தந்தையென்று பாடுகிற பாரதி, கண்ணனின் மேன்மைகளைப் பாடிக் கொண்டு வருகிறபோதே, “பல்வகை மாண்பினிடையே – கொஞ்சம் பயித்தியம் அடிக்கடி தோன்றுவதுண்டு நல்வழி செல்லுபவரை- மனம் நையும் வரை சோதனை செய் நடத்தையுண்டு” என்று பாடுவது கூர்ந்து நோக்கத்தக்கது. “மனம் நைகல்” என்பது மனம் நொந்து இறைவனை ஏசுவதல்ல. ‘தான்-தனது’ என்பன போன்ற எண்ணங்களுடன் மனதுக்கிருக்கும் கடைசி இழையும் நைந்து போகும் வரை என்பதை இதன் பொருள். இது தொடர்பாக ஓஷோ ஒன்றைச் சொல்கிறார். ‘தான்-தனது’ எனபதைக் ...
எட்டயபுரமும் ஓஷோபுரமும்
பாகவதக் கண்ணனும் பாரதக் கண்ணனும் வேறு வேறு என்றிருக்கும் கதைகள் தொடங்கி, குருஷேத்திர யுத்தம் ஓர் உருவகம் என்ற காந்தியின் கருத்து வரை அனைத்தையும் ஓஷோ நிராகரிக்கிறார். சூர்தாஸ், கண்ணனின் பாலபருவத்தை மட்டுமே பாட, கேசவதாஸ் கண்ணனின் இளமைப் பருவத்தை மட்டுமே பாடுகிறார். இதற்கெல்லாம் அவரவரின் மன எல்லைகளே காரணம் என்கிற ஓஷோ. “கண்ணன் ஒரு விரிந்த சமுத்திரம். அந்தக் கடல் நீரில் கொஞ்சம் எடுத்து குளமாக்கி, இதுதான் கண்ணன் என்று சொல்பவர்கள் கண்ணனின் ஒரு துளியைக் ...
எட்டயபுரமும் ஓஷோபுரமும்
நிறந்தனில் கருமை கொண்டான் 1970 அக்டோபர் நான்கு. கண்ணனைப் பற்றி குலுமணாலியில் ஓஷோவின் பதினெட்டாவது சொற்பொழிவு நடைபெறுகிறது. அப்போது ஒருவர் கேட்கிறார். “பற்றற்று வாழ்ந்தவன் கண்ணன் என்று சொல்கிறீர்கள். அப்படியரு வாழ்க்கை சாத்தியமா” என்று. இது குறித்த நீண்டதொரு விளக்கமளிக்கிறார் ஓஷோ. “கண்ணனைப் பொறுத்தவரை பற்றற்ற தன்மைதான் மனித இயல்பு. மனிதன், தன் இயல்பிலிருந்து மாறிப்போய் தான் பற்றுகளுக்குள் சிக்குகிறான். பற்று உஷ்ணம் என்றும் வெறுப்பு குளுமை என்றும் வைத்துக் கொள்ளுங்கள். தண்ணீரை சுட வைத்தால் சூடாகிறது. ...
எட்டயபுரமும் ஓஷோபுரமும்
“வாழ்க்கைப் பாதையில் நொடிப் பொழுதுக்குள் நண்பன் பகைவனாக முடியும். பகைவன் நண்பனாக முடியும். நதி போல் நகரத் தெரிந்தவனுக்குப் பகைவனுமில்லை, நண்பனுமில்லை”- என்கிறார் ஓஷோ. ‘A person who lives his life like a river makes neither friends, nor foes. he accepts whatever life brings’. (373) பாரதிக்கும் இதே பார்வைதான். “இப்படியன், இந்நிறத்தன் இவ்வண்ணத்தன்” என்று வகைப்படுத்த முடியாததல்லவா கடவுட்தன்மை. இதற்கும் ஓஷோ அழகானதோர் உவமை சொல்கிறார். “ஒரு ரோஜா ...
எட்டயபுரமும் ஓஷோபுரமும்
கண்ணன் குறித்து ஓஷோவிடம் கேட்கப்படுகிற இன்னொரு கேள்வி, “கண்ணன் அர்ச்சுனனுக்குத் தோழன் என்கிறீர்கள். ஆனால், ஒரு சூழலில் அர்ச்சுனனை எதிர்த்தும் கண்ணன் போரிடத் தயாரானது ஏன்-? என்பது. (இக்கதை வியாசபாரதத்திலோ வில்லி பாரதத்திலோ இல்லை. தமிழைப் பொறுத்தவரை புகழேந்தி எழுதிய பாரதத்தில் இப்படியரு செய்தி உள்ளது. சந்தியா வந்தனம் செய்ய கண்ணன் நீரை அள்ளும் போது ஆகாயத்தில் பறந்த கந்தர்வன் ஒருவன் அதில் உமிழ்கிறான். அவனைக் கண்ணன் கொல்ல முயல்கையில் அர்ச்சுனனிடம் சரணடைகிறான். அப்போது நடந்த வாக்கு ...
எட்டயபுரமும் ஓஷோபுரமும்
கண்ணன் என் தோழன் கண்ணனைப் பற்றியும் கீதை பற்றியும் பேசும் இடங்களில், அர்ச்சுனனின் உளவியல் பாங்கை உணர்த்துவதில் ஓஷோ மிகுந்த அக்கறை காட்டுகிறார். அர்ச்சுனனுடைய குழப்பத்தின் ஆழம் புரிந்தால்தான், கண்ணனுடைய தெளிவின் துல்லியம் புரியும். கண்ணனே சாரதியாய் வந்த பிறகும், நெடுநாளைய சபதம் நிறைவேறுகிற வாய்ப்பாக குருஷேத்திரத்தைக் காணாமல் தனக்குள் தவிக்கிறான் அர்ச்சுனன். தோழன் என்ற நிலையில் கண்ணனை வைத்துப் பார்க்கிற போது, அர்ச்சுனனின் மனக்குழப்பங்களுக்கு கீதை எந்த விதத்தில் மருந்தானது என்பது பற்றி சிந்திக்க வேண்டியுள்ளது. ...




