மூங்கில்
மான்களுக்கும் கோபம் வரும்… புத்தகத்திலிருந்து… வண்டு துளைத்த மூங்கிலாக வாழ்க்கை வேண்டிப் பிரார்த்தனை வந்து புகுந்து போகும் காற்று வானில் கலக்கும் கீர்த்தனை காற்றின் உதடு தீண்டும் போது கீதம் பிறக்கும் தத்துவம் ஊற்றெடுக்கும் இசையின் மடியில் உலகம் உறங்கும் அற்புதம் மனித வாழ்க்கை தந்ததென்ன? மனது முழுக்க ரணங்களே! புனிதமான மூங்கிலாகப் பிறந்து வந்தால் சுகங்களே! மூங்கில் இரண்டு உரசும் போது மூளும் கனலும் ராகமே! ஏங்கிப் புலம்பும் ஏழை நெஞ்சே மூங்கில் வாழ்க்கை போதுமே! ...
எத்தனை முத்தங்கள்
மான்களுக்கும் கோபம் வரும்… புத்தகத்திலிருந்து… நிலவினை வருடி ஒளிமுத்தம் பெறுவேன் முகிலினை வருடி மழைமுத்தம் பெறுவேன் தளிர்களை வருடிப் பனிமுத்தம் பெறுவேன் மலர்களை வருடி மதுமுத்தம் பெறுவேன் சலங்கைகள் வருடி ஜதிமுத்தம் பெறுவேன் ஸ்வரங்களை வருடி இசைமுத்தம் பெறுவேன் கனவுகள் வருடிக் கவிமுத்தம் பெறுவேன் உளிகளை வருடிச் சிலைமுத்தம் பெறுவேன் அருவிகள் வருடிக் குளிர் முத்தம் பெறுவேன் நதிகளை வருடி அலை முத்தம் பெறுவேன் பறவைகள் வருடிப் புது முத்தம் பெறுவேன் மழலைகள் வருடி மலர் முத்தம் ...
கவிதை மனம்
மான்களுக்கும் கோபம் வரும்… புத்தகத்திலிருந்து… நிலவில் தெறிக்கும் கிரணங்களை – அது நதியில் எழுப்பும் சலனங்களை மலரில் துளிர்க்கும் அமுதங்களை – அதன் மகரந்தத்துக் கடிதங்களை சிறகு சிலிர்க்கிற பறவைகளை – அதன் சின்னக் கண்களின் கனவுகளை கதவு வைக்காத மனதுக்குள்ளே – தினம் கொட்டிக் குவிப்பது கவிதைமனம் வெள்ளிப் பனித்துளி மகுடமுடன் – புல் வெய்யில் வரும் வரை அரசமைக்கும் மெல்லிய தென்றல் இதைப் பார்த்து மலர்களின் செவிகளில் முணுமுணுக்கும் துல்லிய குரலில் குயில்களெல்லாம் – ஒரு ...
நிலாப் பெண்ணே
மான்களுக்கும் கோபம் வரும்… புத்தகத்திலிருந்து… (உள்ளுர் தொலைக்காட்சி ஒன்றில், நேயர்கள் முதலடி எடுத்துக் கொடுக்க கவிஞர்கள் கவிதை பாடும் நிகழ்ச்சி நடந்தது. அப்படி எழுதிய கவிதை இது. அடியெடுத்துக் கொடுத்த அன்பர் திரு.சரவணக்குமார். காந்தி வீதி, அம்பேத்கார் நகர், வேலாண்டிபாளையம், கோவை). நிலாப் பெண்ணே உன் பயணத்தில் நிறுத்தமென்பதில்லையா? நீலவானம் முழுவதும், நீ நடை பழகும் எல்லையா? உலாப் போகும் பேரழகி ஓய்வு தேவையில்லையா? ஓடி ஓடித் தேய்பிறையாய் இளைப்பவள் நீ இல்லையா? இரவு நேரம் தனிமையிலே ...
மரம்
மான்களுக்கும் கோபம் வரும்… புத்தகத்திலிருந்து… நீண்டு கிடக்கும்உன் பாதையிலே நிற்கிற மரமாய் நானிருப்பேன்! வேர்களில் ஊறிய ஈரத்துடன் & குளிர் விசிறிகள் விசிறக் காத்திருப்பேன்! காலங்காலமாய் நிற்கின்றேன் & உன் காலடி ஓசை எதிர்பார்த்து! கோடைப் பொழுதிலும் இலைகளெல்லாம் உதிரவிடாமல் வழிபார்த்து! அடடா… அடடா… வருகின்றாய் அமுதம் எனக்குள் சுரக்கிறதே! “இதுதான் உன் இடம் வா”வென்றே கிளைகள் காற்றில் குதிக்கிறதே! மண்ணைப் பஞ்சணை ஆக்கிவிட்டேன் மெல்லிய சருகுகள் நீக்கிவிட்டேன் வண்ணப் பறவைகள் கூடுகட்டி & உன் விழிமயங்கும் ...
உன் ஞாபகம்
மான்களுக்கும் கோபம் வரும்… புத்தகத்திலிருந்து… மழைசிந்தும் இளங்காலை நேரம் – என் மனதோடு இதமான ஈரம் இழையாக ஒருபாடல் தோன்றும் – அதில் இசையாகும் உன் ஞாபகம்! அலைவீசி வரும் காதல் வெள்ளம் – இது அணையேதும் இல்லாத உள்ளம் விலைபேச முடியாத இன்பம் – ஒரு விதமான சுகம் வாலிபம்! இதழ்பூத்த சிறுபூவின் மௌனம் – அதில் எழுகின்ற மணம்தானே வேதம் எதை இன்னும் அதுபேச வேண்டும் – இங்கு அதுபோல நம் நாடகம்! விடைதேடும் ...




