Blog

/Blog

எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே-24

எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே… புத்தகத்திலிருந்து… ஃபிலடெல்ஃபியாவிலிருந்து பாஸ்டன் திரும்ப விமானநிலையம் வந்தேன். பாஸ்டனில் இருந்துதான் இந்தியா திரும்புவதாகத் திட்டம். பாஸ்டன்ஃபிலெடல்ஃபியாவுக்கு ஏர்டிரான்ஸ் என்கிற உள்ளூர் விமானம், நம்மூர் ரயில்கள் போல் இரண்டு மணி நேரத் தாமதம். அதைவிட வேடிக்கை, வெவ்வேறு ஊர்களுக்காக அருகருகே நிற்கிற விமானங்களில், நம் கிராமத்துப் பேருந்துகளில் நடப்பது மாதிரி விமானம் மாறி ஏறுகிற கூத்துகளும் நடந்தன. விமானி பலமுறை அறிவித்தபிறகு “ஓ! காட்” என்று இறங்கி அடுத்த விமானத்தில் தொற்றிக் கொண்டவர்களும் ...

எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே-23

எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே… புத்தகத்திலிருந்து… பிலடெல்ஃபியா, அமெரிக்காவின் இரும்பு மனிதர்கள் கூடி அரசியல் சட்டத்தை வடிவமைத்த இடம். என் பயணத்திட்டத்தின்படி அங்கே ஒருநாள் தான் செலவிட முடிந்தது. ஃபிலடெல்ஃபியாவில் பல்கலைக்கழகப் பேராசிரியராகப் பணிபுரியும் ஃபெரோஸ்பாபு, என்னை அழைத்துச் சென்ற இடம், பெஞ்சமின்ஃபிராங்க்ளின் ஆராய்ச்சி மையம். உள்ளே நுழைந்தவுடன் பிரம்மாண்டமான சிலையாய்ப் பிள்ளையார் போல உட்கார்ந்திருக்கிறார் பெஞ்சமின் ஃபிராங்க்ளின். உள்ளே காட்சிக்கென்று அபூர்வமான அறிவியல் அம்சங்கள், பெஞ்சமின்ஃபிராங்க்ளினின் பல்வேறு கண்டுபிடிப்புகள். அந்தக் கண்காட்சிக் கூடத்தில் மனித இதயத்தின் ...

எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே-22

எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே… புத்தகத்திலிருந்து… படகு நிரம்பியதும் பயணம் தொடங்கியது. வெள்ளருவியின் மீது வானவில் கோலமொன்று தகதகத்தது. அருவியை நெருங்க நெருங்க குரல்கள் மங்கத் தொடங்கின. அருவியில் நனைகிற சந்தோஷச் சப்தங்களை விழுங்கியது, அருவி எழுப்பிய சந்தோஷச் சப்தம். கண்திறக்க முடியாத அளவு நீர்த் துகள்களை வாரியிறைத்து வரவேற்றது நயாகரா. முகத்தில் அறைந்த மல்லிகைப் பூக்களாய் நீர்த்துளிகள். தொட்டுவிடப் பார்க்கும் தூரத்தில் அழைத்துப்போய் தொடும் முன்னே திரும்பி விடுகிறது படகு. அருவி விழுகிற மலைப்பகுதி குதிரையின் ...

எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே-21

எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே… புத்தகத்திலிருந்து… அமெரிக்காவில் எதைப் பார்க்கிறோமோ இல்லையோ நிச்சயம் நயாகராவைப் பார்க்க வேண்டும் என்று முன்னரே கருதியிருந்தேன். அதற்குரிய பொழுது பாஸ்டனில் விடிந்தது. மழை பிலிற்றிக்கொண்டிருந்த அந்த அதிகாலைப் பொழுதில், என் பள்ளிப்பருவத் தோழன் அருண்குமாரும் நானுமாய் நயாகராவுக்குக் கிளம்பிய பொழுது, பள்ளிப் பருவத்தின் சுற்றுலா புறப்பாட்டு அனுபவம் மீண்டும் மனதில் நிழலாடியது. பயணங்களில், “நாம் வெளிநாட்டில் இருக்கிறோம்” என்கிற உணர்வை ஏற்படுத்துபவை உணவுகள். நண்பர்கள் எல்லா இடங்களிலும் இருந்ததால் இந்திய உணவே ...

எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே-20

எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே… புத்தகத்திலிருந்து… வாகனத்தில் ஏறும்போதே “ஒரு பெண் வழி காட்டியாய் வருவதை ஆட்சேபிக்கக் கூடிய ஆணாதிக்கக்காரர்கள் யாராவது வாகனத்தில் இருக்கிறார்களா?” என்று குறும்புச் சிரிப்போடு நுழைந்தார் அவர். ‘இது “டக் டூர்”. எனவே “க்வாக் க்வாக்” என்று குரல் கொடுத்தால்தான் வண்டி நகரும்’ என்றதும் பயணிகளும், குறிப்பாகக் குழந்தைகளும் “க்வாக் க்வாக்” என்று உற்சாகக் குரல் எழுப்பினர். ஒரு குறிப்பிட்ட பகுதி வந்தவுடன், “இது நோ க்வாக் ஸோன்! யாரும் க்வாக் என்று ...

எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே-19

எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே… புத்தகத்திலிருந்து… பள்ளிப் பருவத்து நட்பு பலமானது என்பது, என் அபிப்பிராயம் மட்டுமல்ல, அனுபவமும் கூட. அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் என் பள்ளிப் பருவத் தோழர்கள், தமிழ் மாநாட்டிற்கு நான் வரப் போவதறிந்து, என் சுற்றுப்பயணத்தை ஒருங்கிணைத்திருந்தார்கள். டல்லாஸில் இருக்கும் நண்பன் விஜய் ஆனந்த் குடும்பத்தினரிடமிருந்து விடைபெற்று பாஸ்டனுக்குப் பயணமானேன், அருண்குமார் என்கிற நண்பனின் இல்லம் நோக்கி… டல்லாஸிலிருந்து பாஸ்டனுக்கு நேரடி விமானம் இல்லை. சிகாகோ சென்று மாற வேண்டும். சிகாகோ ...
More...More...More...More...