எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே-11
எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே… புத்தகத்திலிருந்து… நகர்ந்து கொண்டிருப்பது நதியின் இயல்பு. பயணம் செய்வது மனித இயல்பு. இந்தியச் சமய மரபில் பயணம் என்பது ஆன்மீக வளர்ச்சியின் அம்சம். கங்கை, காவிரி, கன்யாகுமரி என்று பல இடங்களுக்கும் பயணம் செய்து, எல்லா இடங்களும் இறைவனின் இருப்பிடம் என்பதை உணரச் செய்வதற்காகவே தீர்த்த யாத்திரைகள் சமயத்தின் பெயரால் செய்யப்பட்டன. “கங்கை ஆடில் என்? காவிரி ஆடில் என்? பொங்கு தண் குமரித்துறை ஆடில் என்? ஓங்கு மாக்கடல் ஓதநீர் ...
எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே-10
எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே… புத்தகத்திலிருந்து… அன்று இரவே பாஸ்போர்ட் விஷயமாக சென்னைக்குப் புறப்பட்டேன். எனக்கு அமெரிக்க விசா அங்கீகரிக்கப்பட்டு, தூதரகத்தில் இருப்பதையும் புதிய பாஸ்போர்ட் கிடைத்தால் மறுபடி எழுதிப் போட்டு வாங்க வேண்டும் என்றும் பாஸ்போர்ட் அலுவலர்களுக்கு விளக்கினேன். அரைமனதோடு புன்னகைத்து விட்டு “மூன்று மாதங்களில் கிடைத்துவிடும்” என்றார்கள். அப்புறம் “தத்கால்” உள்ளிட்ட குட்டிக் காரணங்களையெல்லாம் அடித்துப் பத்து நாட்களில் பாஸ்போர்ட் வந்துவிட்டது. “உறியில் இருக்கு வெண்ணை எடுத்துக் கொடுங்க அண்ணே” என்று காலில்லாதவன் கேட்ட ...
எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே-9
எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே… புத்தகத்திலிருந்து… பஸ் காட்சிகள், பாடல் காட்சிகள் என்று படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து கொண்டிருந்தது. இதற்கு நடுவே என் அமெரிக்கப் பயணத்திற்கான தேதி வேறு நெருங்கியிருந்தது. விசா கிடைத்தும் பாஸ்போர்ட் கிடைக்காத விசித்திரமான சூழ்நிலையை முதல் அத்தியாயத்திலேயே சொல்லியிருந்தேன். யோசித்துப் பார்த்த போது அந்த நேரத்தில் பலருக்கும் பலவிதமான விஷயங்கள் கிடைத்தும் கிடைக்காமல் தான் இருந்தது. படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க வந்து வாய்ப்புக் கேட்ட சிலருக்கு படத்தில் வேஷம் கிடைத்தது. ஆனால் தங்கள் ...
எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே-8
எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே… புத்தகத்திலிருந்து… இதற்கு மேல் நடிகைகள் பற்றி நான் அதிகம் யோசித்ததில்லை. ஆனால், சக நடிகர்களை, குறிப்பாக என்னைப் போன்ற புது நடிகர்களை ஊக்குவிப்பதில், உற்சாகப்படுத்தி காட்சியில் ஈடுபடுத்துவதில் மீரா ஜாஸ்மின் என்னை அசத்திவிட்டார். இந்த அத்தியாயத்திற்குக் கூட “பக்த மீரா” என்று தலைப்பு தந்திருக்க வேண்டும். தொழிலில் அவருக்கு அவ்வளவு பக்தி. முதல் காட்சியில் அவரோடு நடித்தது பற்றி ஏற்கனவே எழுதியிருந்தேன். காட்சி முடிந்ததும் என்னை அழைத்து “நீங்க ரிகர்சலிலே செய்தது ...
எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே-7
எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே… புத்தகத்திலிருந்து… சில நாட்களுக்கு முன் நாஞ்சில்நாடன், தனக்கு வந்த விசித்திரமான ஒரு கனவைப் பற்றிச் சொன்னார். “சாகித்ய அகாதெமி விருதை அப்துல்கலாம் அறிவிக்கிறாருங்க! அதுவும் விஜயா பதிப்பகம் வேலாயுதம் அண்ணாச்சிக்கு! இதென்ன இப்படி ஒரு கனவு” என்றார். சுந்தர ராமிசாமிக்கு விஜயா பதிப்பகம் நிகழ்த்திய அஞ்சலிக் கூட்டம், அதில் விவாதிக்கப்பட்ட சாக்திய அகாதெமி விவகாரம், அப்துல்கலாமிடம் வேலாயுதம் அண்ணாச்சி பரிசு பெற்றது என்று வெவ்வேறு விஷயங்களை நாஞ்சில் நாடனின் ஆழ்மனம் மிக்ஸியில் ...
எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே-6
எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே… புத்தகத்திலிருந்து… “ஷிஃப்ட்” என்று சொல்லிப் பத்தாவது நிமிடம் அடுத்த இடத்தில் காமராமேன் ரத கஜ தூக பதாதிகளுடன் தன் முற்றுகையை முடித்திருப்பார். படப்பிடிப்புக் குழுவை “யூனிட்” என்று சொல்வது பொருத்தம்தான். அவ்வளவு ஒற்றுமை. அவ்வளவு ஒருங்கிணைப்பு. எந்த ஊரில்போய் இறங்கினாலும் அந்த ஊர்க்காரர்களுக்கே தெரியாத இடங்களில் போய் அபூர்வமான விஷயங்களை கொண்டுவந்து சேர்த்துவிடுவார்கள். முப்பது நாற்பது விஷயங்களை ஒரே நேரத்தில் நிர்வகிப்பது சர்வ சாதாரணமாக நடப்பதால்தானோ என்னவோ சினிமாக்காரர்களுக்கு ஆட்சியைப் பிடிப்பது ...