தலைவர்கள் தயார் செய்!
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… தனக்குத் தொண்டர்கள் வேண்டும் என்று கருதுபவர்கள் தலைகனத்த தலைவர்கள். தன்னைப் போல் தலைவர்கள் வேண்டும் என்று நினைப்பவர்களே தலை முறையின் தலைவர்கள். அலுவலகம் தொடங்கி அரசியல் வரையில் இன்று ஏற்பட்டிருப்பது தலைமைப் பஞ்சம். ஒருகிணைக்கும் ஆற்றல், முடிவெடுக்கும் திறன், முன்னேற்றும் சக்தி என எத்தனையோ அம்சங்களை வளர்த்தால்தான் ஒரு நிறுவனம் வளரும். இத்தகைய தலைவர்களை வளர்ப்பதே சிறந்த தலைமைப்பண்பின் அடையாளம். சொல்வதைச் செய்பவர்கள் மட்டுமே உடனிருந்தால் அதன் பேர் தலையாட்டி ...
மாறும் ரசனைகள் மலர்த்தும் உங்களை!
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… ஒவ்வொரு பருவத்திலும் உங்களுக்கு ஒவ்வொன்று பிடிக்கிறதா? நீங்கள் வளர்வதாக அர்த்தம். குத்துப்பாட்டு கேட்ட உங்களை மெல்லிசை ஈர்க்கிறது என்றால் மென்மை படியத் தொடங்குகிறது என்று பொருள். முன்னைவிட அதிக நேரம் படிப்பில் கவனம் செலுத்த முடிந்தால் பக்குவம் மலர்கிறது என்று பொருள். வாழ்க்கை ரசனை வளர வளர மனம் மலரத் தொடங்கும். உங்கள் ரசனையை உற்றுக் கவனிப்பதன் மூலமே உங்கள் வாழ்வின் போக்கை உங்களால் உணர முடியும். வயது வளர ...
வதந்திகள் விலக்கு!
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… மனித உறவுகளின் ஆகப்பெரிய அச்சுறுத்தலே வதந்திதான். மற்றவர்களின் விபரீதக் கற்பனைகள் வளர்ந்து வளர்ந்து விசுவரூபம் எடுக்கும்போது வதந்திகள் உலவத் தொடங்குகின்றன. உண்மையை மறைப்பதோடு மட்டுமல்ல. உண்மையிலிருந்து வெகுதூரம் நம்மை விலக்கிக்கொண்டு போகிற வேலையை வதந்திகளே செய்கின்றன. வதந்திகள் பலவிதம். விரோதத்தால் விளைகிற வதந்திகள். அரைகுறை தகவல்களில் கற்பனை கலப்பதால் உருவாகிற வதந்திகள். செயல்படாமல் இருக்கிற மனதின் விளையாட்டு காரணமாய் விளைகிற வதந்திகள். தவறான உள்நோக்கத்தோடு உருவாகிற வதந்திகள். கண்ணால் காண்கிற ...
உங்கள் பயணத்தின் ஒரே துணை…
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… உங்கள் பயணத்தின் ஒரே துணை நீங்கள்தான்! வருபவர்கள் எல்லோரும் உங்கள் பயணத்திற்கு துணை செய்தாலும் செய்யாவிட்டாலும் பயணம் உங்களுடையது. நீங்கள் கூட்டிக்கொள்ளும் பிரார்த்தனை, நெஞ்சில் சேர்க்கும் நம்பிக்கை, கருதியதை சாதிக்கும் செயல்திறன் ஆகியவைதான் உங்கள் இலக்கை எட்டத் துணை செய்யும். “அவரை மலைபோல் நம்பினேன். கைகழுவிவிட்டார். இவரை ஏகத்துக்கும், எதிர்பார்த்தேன். ஏமாற்றிவிட்டார் என்ற வெற்றுப் புலம்பல்கள் தன்னிகரத்தைத் தவிர எதையும் தராது.. உங்கள் பாதையில் உதவியவர்களுக்கு மிகுந்த நன்றியுடன் இருங்கள். ...
அடையாளங்களும் தடையாகும்
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… புதிதாக ஓர் இடத்துக்குப் போகிறீர்கள். அங்கே ஏற்கெனவே போன ஒருவர், அதற்கான சில அடையாளங்களை சொல்வது, அந்த அடையாளங்களை முன்னிலைப்படுத்தி சென்று சேர்வதற்காகவே தவிர அந்த அடையாளங்களிலேயே நின்று வருவதற்காக அல்ல. பாஞ்சாலி முன்னர் அரண்மனையில் துரியோதனன் பளிங்குத்தரையை நீச்சல் குளமென்றும் நீச்சல் குளத்தை பளிங்குத்தரையென்றும் எண்ணி ஏமாந்ததைப் போல் வாழ்வின் பல தருணங்களில் நாம் துரியோதனனாய் தடுமாறுகிறோம். இது ஏன் தெரியுமா? கண்ணெதிரே தோன்றுகிற நிதர்சனம் ஒருபுறம். உங்களுக்கு ...
சுமைகளைப் போடுங்கள்! சுயம் எது… தேடுங்கள்!
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… நீங்கள் தூக்கிச் சுமக்கிறபெரிய சுமை, உங்களைப்பற்றி அடுத்தவர்கள் தாங்களாக வளர்த்துக் கொண்ட அபிப்பிராயங்கள் தான். “இதுதான் நீங்கள்” என யாரோ தீட்டும் சாயத்தை “இதுவும் நான்” என்று ஏற்றுக் கொள்கிறீர்கள். இப்படி அடுக்கடுக்கான அபிப்பிராயங்களை அள்ளிக் கட்டிக் கொண்டு கண்கள் பிதுங்க கம்பீரம் என்று நினைத்தபடி நீங்கள் வலம் வருவது உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்வது. உங்கள் மேல், அப்பிக் கொண்டிருக்கும் இந்த அபிப்பிராயங்களை நீங்கள் அகற்றிய பிறகுதான், உங்கள் ...