Blog

/Blog

உங்கள் குறட்டையே உங்களை எழுப்பட்டும்.

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… குறட்டைவிடும் பழக்கம் உள்ளவர்களில் அவர், திடீரென்று திடுக்கிட்டு வழிப்பார்கள். வேறொன்றுமில்லை. அவர்களின் குறட்டையே அவர்களை எழுப்பியிருக்கும். அதன்பின் மறுபடி அயர்ந்து தூங்குவார்கள், மறுபடியும் குறட்டை எழுப்பும். ஒரு கட்டத்திற்குப் பிறகு உட்கார்ந்து யோசிப்பார்கள். எப்போதுமே, நமக்கு, நம்முடைய தவறுகள், அடுத்தவர்களைத் தொந்தரவு செய்யும்போது தெரிவதில்லை. நமக்கே தொந்தரவாய் இருக்கும்போதுதான் தீர்வு குறித்து யோசிப்போம். குறட்டை மட்டுமல்ல, அசட்டையாய் இருந்து வாழ்வில் பல நல்ல தருணங்களைக் கோட்டை விடுவது கூட அப்படித்தான். ...

மிரள்பவர்களே மிரட்டப்படுவார்கள்

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… “துரத்திய -குரங்குகளை எதிர்த்து நின்றேன். அவை தொலைதூரம் ஓடின” என்றார் விவேகானந்தர். குரங்குகள் மட்டுமல்ல. குரங்குக் குணங்களும் கூட மிரள்பவர்களைத்தான் மிரட்டுகின்றன. தடை, சவால், எதிர்ப்பு போன்ற எல்லா சூழல்களும் மிரள்பவர்களை மிதிக்கவே செய்கிறது. எவ்வளவுதான் சவாலான சூழல் அமைந்தாலும் அதனை திடமாக எதிர்கொள்ளும் தீர்மானமே அந்த சூழலிலிருந்து மீட்டெடுக்கிறது. நீங்கள் உங்கள் வாழ்க்கையை ஒரு நதியுடன் ஒப்பிடுங்கள். நதியில் வரும் சூழல் போன்றது வாழ்வில் வருகிறசூழல். அந்த சூழலிலிருந்து ...

குழந்தை மனமா? குழந்தை தனமா?

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… கள்ளம் தவிர்த்த உள்ளமே குழந்தை உள்ளம். அந்த இயல்பு வாழ்வை சுகமாக்கும். சுலபமாக்கும். வாழ்வை குழந்தை மனம் கொண்டு எதிர்கொள்ளும் போது குதூகலம் வருகிறது. குழந்தைத்தனம் கொண்டு எதிர்க்கொள்ளும் போது குழப்பம் வருகிறது. குழந்தைகள் கூர்மையானவர்கள். ஒரு சிறிய மாற்றம் கூட அவர்களின் சின்னக் கண்களில் விடுபடாது. பொய்யான மனிதர்களின் போலிக்கொஞ்சல் அவர்களிடம் எடுபடாது. அதுபோல, கூர்மையான பார்வையும், தவறான மனிதர்களிடம் முகம் திருப்பிக் கொள்கிறஇயல்பும் குழந்தை மனம் தருகிறபரிசுகள். ...

தண்டவாளக் கோடுகளே தம்பதிகள்!

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… தூரத்தில் பார்த்தால் ஒன்றாய் பின்னிப் பிணையும் தண்டவாளங்கள் அருகே வந்தால் விலகிப் போகின்றன என்றார் கவிஞர் கலாப்ரியா. வெற்றிகரமான தம்பதிகள் எவ்வளவுதான் நெருக்கமாக இருந்தாலும் அவர்களுக்குள் இருக்கும் சின்ன இடைவெளிதான் அவர்களின் வாழ்க்கையை ஆக்கபூர்வமாய் வைத்திருக்கிறது. தண்டவாளத்தின் இரண்டு கோடுகள் நடுவே இடைவெளி இல்லையென்றால் அது தண்டவாளமே இல்லை. தேவையான சிறிய இடைவெளி இல்லாத போது இல்லறவாழ்வில் புரிதல் இல்லை. எவ்வளவுதான் இணக்கமாக இருந்தாலும் ஒவ்வொருவரும் மிக நிச்சயமாய் தனி ...

முகங்களில் அவர்களையே பாருங்கள்

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… எதிர்ப்படும் முகங்களில் நாம் எதையெதையோ தேடுகிறோம். சில பேரின் சாயலை சிலரிடத்தில் தேடுவது முதல்படி “நீங்கள் இன்னார் மகனா” என்று விசாரிக்கிறோம். சில சமயங்களில் நம் கனிப்பு சரியாகவே இருக்கும். இன்னொரு பக்கம், இத்தகைய தோற்றம் இருப்பவர்கள், இந்த விதமான குணத்தில்தான் இருப்பார்கள் என்றமுன் முடிவு. ‘ரொம்ப சாதுவா இருந்தாரு திடீர்னு கோவிச்சுக்கிட்டாரு’, இது அவருடைய தவறல்ல, உங்கள் முன் முடிவின் தவறு-. ஒவ்வொரு மனிதருக்கும் தனித்தன்மை உண்டு. தனி ...

இலவச இணைப்பா இதயங்கள்?

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… திறமையாளர்களில் தொடங்கி உறவினர்கள் வரை, பணியாளர்களில் தொடங்கி பழகுபவர்கள் வரை, எல்லோரையும் பயன்படும் பொருளாக மட்டுமே பார்க்கிற பழக்கம் பெருகி வருகிறது. ஒரு மனிதனுடைய வாழ்வில் விலைமதிக்கவே முடியாத முதலீடும், அசையாச் சொத்தும், அவன் உருவாக்கி வைக்கக் கூடிய உறவுகள் மட்டுமே. உங்கள் வங்கி கணக்கை, நிலத்தின் மதிப்பை நகைகளின் எடையை கணக்கிட்டு விட முடியும். ஆனால் நீங்கள் உருவாக்கி வைத்திருக்கும் உறவுகள், எந்த நேரத்திலும் எந்த உதவியை எப்படி ...
More...More...More...More...