Blog

/Blog

குஷியாய் உலவும் குப்பைத் தொட்டிகள்

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… அரட்டை என்னும் ஆபத்தான பழக்கத்தை ஆசை ஆசையாய் பழகிக்கொண்டு அதனை ஆரவாரமாய் நிகழ்த்தியும் காட்டும் வேடிக்கை மனிதர்கள் உலகம் முழுவதிலும் உண்டு. இவர்களுக்கு சுயமாய் சாதிக்க சக்தியில்லை. சாதித்தவர்களை மதிக்கும் புத்தியில்லை. இத்தகைய மனிதர்கள் அனாவசியமான குப்பைகளை வாங்கி வைத்துக் கொள்ளும் குப்பைத் தொட்டிகள். சாலையோரத்தில் உள்ள குப்பைத் தொட்டிகளை சுத்தம் செய்ய முடியும். இந்த கால்முளைத்த குப்பைத் தொட்டிகள் பழைய குப்பைகளையும் அகற்றுவதில்லை. புதிய குப்பைகளை விடுவதுமில்லை. அடுத்தவர் ...

பேச விஷயமில்லையா? பேசாதீர்கள்!

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… ஒருவரைப் பார்த்து நலம் விசாரிப்பதும் வணக்கம் சொல்வதும் அடிப்படைப் பண்பாடு. அவர் நன்கு அறிமுகமானவர் என்றால் கூடுதலாய் சில வினவுதல்கள், பகிர்தல்கள், பரிமாற்றங்களுக்கு வாய்ப்பிருக்கும். ஆனால், அதிகம் அறிமுகம் ஆகாதவரை நட்பு வளையத்துக்குள் கொண்டு வருகிற முயற்சியில் அர்த்தமில்லாத, அவசியமில்லாத, உரையாடல்களில் ஈடுபடுவது பலநேரம் சங்கடங்களையே விளைவிக்கும். அருமையான மனிதர் என்று பேரெடுக்கிறீர்களா, அறுவையான மனிதர் என்று பேரெடுக்கிறீர்களா என்பது உங்கள் உரையாடல்களில் அர்த்தம் இருப்பதைப் பொறுத்தே அமையும். பேச்சு ...

உங்கள் அடிமையின் அடிமையா நீங்கள்?

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… உங்களிடம் இருக்கும் அபூர்வமான அசாத்தியமான திறமை ஒன்றிற்காக, ஒருவர் உங்களிடம் உணர்வுரீதியாய் அடிமையாகி இருப்பார். அவரிடம் இருக்கும் சிறப்பம்சம், ஏதேனும் ஒரு தீய பழக்கத்தை வெற்றி கொண்டிருப்பார். அது கோபமாக இருக்கலாம். புறம்பேசும் வழக்கமாக இருக்கலாம். புகை பிடிக்கும் பழக்கமாக இருக்கலாம். உங்களிடம் அந்த குணம் இருக்கும் பட்சத்தில், அவர் ஏமாற்றமே அதிர்ச்சியோ அடையலாம். “நாம் எண்ணிப்பாராத பெரிய விஷயம் இவருக்கு கை வந்திருக்கிறது. ஆனால் நாம் வேண்டாம் என ...

வேலை நேரம் இல்லாத அலுவலகம்

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… செய்வதை விரும்பிச் செய்தால் வேலை செய்ய வேண்டியதில்லை என்பார்கள். உற்சாகமாய் இயங்குவதை “உயிரியற்கை” என்கிறான் மகாகவி பாரதி. நாம் மேற்கொண்ட தொழிலைச் செய்ய வேண்டும் என்கிறவிழிப்புணர்வு, உள்ளே இருக்கிறஉந்துசக்தி, அதற்கென்று தனியான நேரமில்லை. நம் மற்றவிஷயங்களைச் செய்யும் நேரத்தில்கூட, நம் கனவுகளிலும் இலட்சியங்களிலும் மனம் லயித்துக் கிடக்கலாம். சிறந்த ஒரு மருத்துவரின் மனதுக்குள் நோய்களுக்கான தீர்வுகள் தேடும் வேட்கை, இதயத்துடிப்புடன் இணைந்து துடித்துக் கொண்டிருக்கும். சிறந்த நீதிமானின் நெஞ்சம், சத்தியத்தை ...

தூங்கும் முயல்கள் தூங்கட்டும்

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… ஒரு முயலின் ஓட்டத்தில் எப்போதோ நேர்கிற தோல்வியை தொடர்ந்து பேச வேண்டுமா என்ன? ஆமையிடம்தான் தோற்றிருக்கட்டுமே… அதனால் என்ன? “ஓடிக்கொண்டேயிரு” என்று உலகம் சொல்கிறது. ஓய்வு கொஞ்சம் தேவையென்று உள்ளம் சொல்கிறது. உலகம் சொல்வது, அதன் எதிர்பார்ப்பு. உள்ளம் சொல்வதோ உண்மையின் தீர்ப்பு. சின்னச்சின்ன தோல்விகளால் உங்கள் வாழ்க்கை வீழ்ச்சியடையப் போவதில்லை. ஆமை ஜெயித்த செய்தி கேட்டு முயல் தன் வியப்பையும் வாழ்த்துகளையும் தெரிவித்து விட்டு வழக்கம்போல ஓடிக்கொண்டே இருக்க ...

விற்பனையாளர்கள் விற்பனைக்கு

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… விற்பனை என்பது, அசாத்தியத்திறமையின் அடையாளம்தான். ஆனால் விற்பனையாளர்கள் எதையும் விற்கக்கூடியவர்கள் என்பது அவர்களின் பலமா? பலவீனமா? விரைந்து பணிகளை மாற்றிக் கொள்வதில் விற்பனை அலுவலர்கள் தனியிடம் வகிக்கிறார்கள். தங்கள் வளர்ச்சியின் படி நிலைகளைக் கணக்கில் கொண்டு, பூப்பூவாய் தேன் சேர்க்கும் வண்டுகள் போல் சுழல்வது அவர்களுக்கு நல்லதையே செய்தாலும் அவர்களுக்கு நம்பகத்தன்மையை நல்குவதில்லை. வாடிக்கையாளர்கள் விரும்பி வாங்கும் நுகர்பொருட்களில் இருந்து, வலைப்பின்னல் வணிகம் வரை மாறிக்கொண்டே இருப்பவர்களை நாம் அறிவோம். ...
More...More...More...More...