Blog

/Blog

விற்பனையாளர்கள் விற்பனைக்கு

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… விற்பனை என்பது, அசாத்தியத்திறமையின் அடையாளம்தான். ஆனால் விற்பனையாளர்கள் எதையும் விற்கக்கூடியவர்கள் என்பது அவர்களின் பலமா? பலவீனமா? விரைந்து பணிகளை மாற்றிக் கொள்வதில் விற்பனை அலுவலர்கள் தனியிடம் வகிக்கிறார்கள். தங்கள் வளர்ச்சியின் படி நிலைகளைக் கணக்கில் கொண்டு, பூப்பூவாய் தேன் சேர்க்கும் வண்டுகள் போல் சுழல்வது அவர்களுக்கு நல்லதையே செய்தாலும் அவர்களுக்கு நம்பகத்தன்மையை நல்குவதில்லை. வாடிக்கையாளர்கள் விரும்பி வாங்கும் நுகர்பொருட்களில் இருந்து, வலைப்பின்னல் வணிகம் வரை மாறிக்கொண்டே இருப்பவர்களை நாம் அறிவோம். ...

பத்மவிபூஷன் – தாமரையின் அணிகலன்

      தாமரைக்கோர் அணிகலனே! தாங்கவரும் அருள்மலையே! வான்மணக்கும் சூட்சுமங்கள்           விண்டுரைக்கும் தத்துவமே! தேன்மணக்கும் கற்பகமாய்           திகழுகிற திருவடிகள் சேமநிதி எங்களுக்கு;            சத்குருவே வணங்குகிறோம்! எல்லையிலாப் பெருங்கருணை         எங்கெங்கும் பரவிநிற்க வல்லமையின் திருவுருவாய்          வந்துதித்த  அற்புதமே சொல்லெதிலும் அடங்காத       ...

ஒன்றுமில்லை என்று ஒன்றுமில்லை

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… உங்களிடம் எதையோ சொல்லத் தயங்குபவர்கள், நீங்கள் “என்ன” என்றதும் “ஒன்றுமில்லை” என்று நகர்கிறார்களா? மற்றவர்கள் உங்களிடம் சகஜமாகத் தொடர்பு கொள்வதில் ஏதோ சிக்கல் இருப்பதாகப் பொருள். ஏனெனில், ஒன்றுமில்லை என்று ஒன்றுமில்லை. நீங்கள் வகிக்கும் பொறுப்பு, உங்களுக்கிருக்கும் அதிகாரம், அந்தஸ்து ஆகிய எதுவும் உங்களை சக மனிதர்களிடமிருந்து அந்நியப்படுத்தாமல் பார்த்துக்கொள்வது முக்கியம். சில சமயம், வீடுகளில் குழந்தைகள் எதையாவது பேசிக்கொண்டிருக்கும் போது, பெரியவர்கள் “என்ன” என்று கேட்டால், அவர்கள் “ஒன்றுமில்லை” ...

உத்தியோகம் இருப்பவர்கள் உருப்படலாம்

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… எல்லோருக்குத்தான் உத்தியோகம் இருக்கிறது. ஆனால், உத்தியோகத்தில் கூட “உத்தி”யோகம் இருப்பவர்கள் உருப்படலாம். உள்ளே தோன்றும் உத்திகள் உயர்ந்ததாய் இருக்க, புத்தியில் எப்போதும் புத்துணர்வு வேண்டும். அதுவொன்றும் பிரம்ம சூத்திரம் இல்லை. உள்ளே இருக்கும் உற்சாகத்தில்தான் எல்லாம் இருக்கிறது. ஒரு விஷயம் குறித்து எல்லோரும் குழம்பி நிற்கும்போது அத்தனை பேர் பார்க்கும் கோணங்களில் இருந்து தள்ளி நின்று பார்த்து, தகுந்ததைச் செய்தால், உங்கள் சாமத்தியம் அங்கே வெளிப்படுகிறது. எதையும் புதுமையாய் செய்ய ...

மேசையில் சிந்திய தேநீரால்… மேதைகளுக்கே இழப்பு

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… சில நேரங்களில், மின்னல் சொடுக்கியதுபோல் ஏற்படும் எண்ணம், உள்ளே வளர்ந்து கொண்டிருக்கும் போது, வெளியே எதையாவது செய்வோம். அந்த வெளிச்செயலை யாராவது தடுத்தால், உள்ளே நிகழும் அபார வளர்ச்சியும் அறியப்படாமல் போய்விட சாத்தியம் இருக்கிறது. ஒரு மேதை, தேநீர்ச் சாலை ஒன்றில் அமர்ந்திருந்தார். சிந்திய தேநீரை சும்மா விரலால் தொட்டு கோலம் வரைந்து கொண்டிருந்தார். உள்ளே வேறேதோ சிந்தனைக் கோலம் உருவாகிக் கொண்டிருந்தது. அவருக்குள் உருவாகிக் கொண்டிருந்த ஓர் அற்புதத்தை ...

சொந்தமாய் சில சொர்க்கங்கள்

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… திரிசங்குவுக்கென்று ஒரு சொர்க்கத்தைப் படைக்க விசுவாமித்திரர் விரும்பியதாய் புராணம் சொல்கிறது. யோசித்துப் பார்த்தால், நமக்கென்று சொந்தமாய் சில சொர்க்கங்கள் அமைவது அவசியம். எது சொர்க்கம்? எங்கே நாம் சொந்தமாய், நிம்மதியாய் உணர்கிறோமோ அதுவே சொர்க்கம். அடுத்தவர்கள் பார்த்து வியப்பதற்கல்ல, நம் சொர்க்கம். அனுபவித்து அறியத்தான் சொர்க்கம். நாம் எதைச் செய்தாலும் அதை யாராவது கவனிக்கிறார்களா என்று பார்க்கும் மனோபாவம்தான் திரிசங்குவின் அவஸ்தைக்குக் காரணம். தான் இருக்குமிடம் சொர்க்கம் என்று அவனே ...
More...More...More...More...