ஞானசூனியம் நல்ல வார்த்தைதான்!
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… யராவது ஞானசூனியம் என்று திட்டினால் வருத்தப்படத் தேவையில்லை. சூனியத்தில் இருந்துதான் இந்தப் பிரபஞ்சமே பிறந்தது என்று ஞானிகள் சொல்கிறார்கள். வெறுமையிலிருந்து வெளிப்படும் எதுவும் முழுமையாய் இருக்கிறது. கட்டியில்லாத கருப்பையில்தானே குட்டிப் பிள்ளை பிறக்கிறது. வீடு காலியாய் இருக்கிறதா என்று விசாரித்து குடியேறுவது போல் திறந்த மனதில்தான் சிறந்த சிந்தனைகள் தேடிவந்து தோன்றுகின்றன. நேற்றின் சுமைகள் இல்லாமல், நாளையின் எதிர்பார்ப்புகள் சூழாமல், நிகழ் காலத்தின், நிகழும் நொடியின் சூனியத்தில் இருப்பதே படைப்பின் ...
கல்லில் செதுக்கிய அலை
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… “இப்போது இவருடைய அலை வீசுகிறது” என்று யாரைப் பற்றியாவது சொல்லக் கேட்கிறோம். கொஞ்ச நாட்களில் அதே துறையில் வேறொருவர் எழுதுகிறார். முன்னவர் விழுகிறார். இப்போது இரண்டாவதாக எழுந்தவரின் “அலை” என்று சொல்கிறார்கள். உள்ளபடியே மனிதர்கள் எழுவதும் விழுவதும் அலைபோல்தான் இருக்கிறது. மிகச்சிலரின் பங்களிப்பு மட்டும் அவர்கள் துறையில் மற்றவர்களால் வெல்லமுடியாத வண்ணம் நிலையானதாக நிற்கிறது. திருவள்ளுவர், புத்தர் போன்றவர்கள் தங்களைப் பற்றிய பிறரின் அபிப்பிராயம் பற்றி அச்சமின்றி எண்ணியதைச் சொல்கிறார்கள். ...
ஒட்டுக் கேட்கும் உங்கள் கண்கள்
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… நமக்கிருக்கும் புலன்களை சரியாகத்தான் பயன்படுத்துகிறோம். ஆனால் முழுமையாகப் பயன்படுத்துகிறோமா என்பதுதான் முக்கியம். குறிப்பாக நம் கண்கள். விமான நிலையத்தில் பெட்டிக்குள் இருப்பதை சில விநாடிகளில் ஸ்கேன் செய்யும் கருவியைவிட, பலமடங்கு கூர்மையானவை கண்கள். ஓர் இடத்தைப் பார்க்கும்போது, சுற்றுவட்டாரத்தில் இருக்கும் அத்தனை அம்சங்களையும் பார்த்து மூளையில் பதிய வைத்துக் கொள்வது, நினைவாற்றலை மேம்படுத்தும் வழி. அது மட்டுமல்ல உங்களின் உள்வாங்கும் திறனும் பலமடங்கு பெருகும். ஒருவரின் முகத்தைப் பார்த்தே, அவர் ...
நீங்கள் மந்தையில் ஒருவரா? மேய்ப்பரா?
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… எல்லாவற்றையும் சரியென்று ஏய்ப்பவர்கள் சராசரிகள். வெளியில்கூட அப்புறம் பார்க்கலாம். வீட்டிலும், வேலை செய்யும் இடத்திலும் ஏற்படுகின்றகுறைகளை, “எல்லாம் அப்படித்தான் இருக்கும்” என்று தாண்டிப்போனால் நீங்கள் மந்தையில் ஒருவர். சிறுமைகளைக் கண்டு சீறமுடியா விட்டாலும் இது சிறுமை என்று சுட்டுவிரல் நீட்டினால் நீங்கள் மேய்ப்பனாகக் கூடிய தலைவர். தயக்கங்களை தகர்த்தவர்களும், தலைகுனிந்து குட்டுகளை ஏற்பதைத் தவிர்த்தவர்களுமே தலையெடுத்திருக்கிறார்கள், தலைவர்களாய் மலர்ந்திருக்கிறார்கள். உலகிலுள்ள ரசங்களிலேயே உப்பு சப்பு இல்லாத ரசம் சமரசம்தான். ஆனால் ...
அப்பாவைப் பற்றி….
ஒன்றிரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நண்பர் சுகா இல்லம் வந்திருந்தார்.சிறிது நேர உரையாடலுக்குப் பிறகு அவர் தங்கியிருந்த விடுதியில் இறக்கிவிடப் புறப்பட்டேன். அப்பாவும் உடன் வந்தார். அவர் வந்ததன் நோக்கம், வழியிலிருக்கும் பிரிட்ஜ் கிளப்பில் இறங்கிக் கொள்ள. அறுபது அறுபத்தைந்து வயது வரை ஆஃபீசர்ஸ் கிளப்பில் மாலைநேரங்களில் டென்னிசும் பிரிட்ஜும் விளையாடி வந்தார். பின்னர் காஸ்மாபாலிடன் கிளப்பிற்கு மாறிக்கொண்டார். 73 வயதான பின்னர் டென்னிஸ் நின்றது. பிரிட்ஜ் மட்டும் விடவில்லை.முன்னிருக்கையில் அவரிருக்க சுகாவும் நானும் பின்னிருக்கையில் அமர்ந்து பேசிக்கொண்டே ...
பிம்பங்களை நம்புங்கள்
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… “நம்புங்கள்” எனச்சொல்லும் பிம்பங்கள் நிஜத்தின் பிரதிபலிப்புதான் என்பதை நம்புங்கள். பிம்பங்களை நம்புவதில் உங்களுக்குக் கிடைக்கும் பயன், அது நிஜத்தின் நிஜமான தோற்றத்தை நினைவூட்டும். எது இருக்கிறதோ அதுவே பிம்பமாய் பிரதிபலிக்கும் என்பதால் நிஜமான ஒன்று இருக்கிறது என்கிற நம்பிக்கை. பிம்பங்களைப் பார்க்கிறபோதெல்லாம் பிறக்கிறது. பூக்கள், கடவுளின் பிம்பங்கள். குழந்தைகள், நம்பிக்கையின் பிம்பங்கள். அதிசயங்கள், நிகழ முடியாதவைகூட நிகழலாம் என்னும் சாத்தியத்தின் பிம்பங்கள். கடின உழைப்பு என்னும் உண்மையின் பிம்பமே வெற்றி. ...