ப்ளாஸ்டிக் பூவா நீங்கள்….
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… தொட்டுப்பார்த்தால் மென்மையில்லை. நுகர்ந்து பார்த்தால் வாசமில்லை கலையாத செயற்கை அழகு காலமெல்லாம் இருக்கிறது. இப்படி இருக்கிறபிளாஸ்டிக் பூக்களை பொதுவாக யாரும் பொருட்படுத்துவதில்லை. உண்மையான பூவுக்கு சவால்கள் அதிகம். பனியிலும் மழையிலும் நனைய வேண்டியிருக்கும். வண்டுகளுக்கு வாய்திறக்க வேண்டியிருக்கும். வெய்யிலில் வாட வேண்டியிருக்கும். ஆனாலும் அதன் வசீகரம் இயல்பானது; இயற்கையானது. எந்த சவாலுக்கும் தயாராகாமல் அதீத பாதுகாப்பில் அடைபட்டு வாழ்பவர்கள் சுவாசிக்கிறார்கள் என்பதற்குக்கூட சாட்சி வேண்டியிருக்கும். வாழ்வின் போக்குகளை ஏற்று வாழத் ...
அது வேறு இது வேறு
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… உங்களுக்கு வேண்டாத ஒருவரிடம் ஏதும் திறமை இருக்குமென்றால், அதைப் பாராட்டத் தயங்காதீர்கள். அது வேறு, இது வேறு. உங்களை அவமானப்படுத்திய ஒருவர் ஆபத்தில் இருந்தால், உங்களால் முடிந்த உதவிகளைச் செய்து அவரை மீட்கப் பாருங்கள். அதுவேறு, இதுவேறு. உங்களுக்கு மிகவும் நெருக்கமான ஒருவர், பிறருக்குத் தீங்கு செய்ய முற்பட்டாலோ தவறுகள் ஏதும் செய்தாலோ பார்த்துக் கொண்டிருக்காதீர்கள். அது வேறு இது வேறு. உங்களிடம் பல நிறைகள் இருக்கும்போது சில குறைகளுக்காக ...
காட்டிக் கொடுத்தவரை காப்பாற்றுங்கள்…
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… உங்களை வீழ்த்த விரும்புகிறவர்கள் உங்கள் பலவீனம் என்னவென்று பார்க்கிறார்கள். அதைக் கண்டறிந்ததும், உங்களைக் காட்டிக் கொடுக்கவோ, போட்டுக் கொடுக்கவோ தயாராகிறார்கள். உங்களைத் தள்ளிவிட அவர்கள் செய்த அதிரடி வேலைதான் உங்கள் தகுதிக் குறைவை உங்களுக்கே உணர்த்தியிருக்கும். அதைத் திருத்திக் கொள்ளவும் வழி படைக்கும். அவர் உங்களைக் காட்டிக் கொடுக்கவில்லை. சுயநலத்திற்காகவே செய்திருந்தாலும், உங்களுக்குள் இருக்கும் தகுதிக்குறைவை உங்களுக்கே காட்டிக் கொடுத்திருக்கிறார். நீங்கள் இன்னும் புதிய மனிதராய் புதுப்பிக்கப்பட்ட திறமைகளுடன் வடிவெடுக்க ...
தேவதைகளுக்கு தேதி கொடுங்கள்
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… அடுத்தகட்ட வளர்ச்சி என்பது அசாதாரணங்களாலும் அசாத்தியங்களாலுமே சாத்தியமாகிறது. அசாதாரணமான நம்பிக்கை. அசாத்தியமான உழைப்பு. இந்த அம்சங்கள் யாரிடம் இருக்கின்றனவோ அவர்களுக்கு வெற்றி நிகழ்கிறது. விபரம் புரிந்தவர்கள், வெற்றி தேவதையின் அசீர்வாதம் என்பார்கள். விபரம் புரியாதவர்கள் அதிர்ஷ்ட தேவையின் அசீர்வாதம் என்பார்கள். அதனாலென்ன? ஒன்றுக்கு இரண்டு தேவதையாய் இருந்துவிட்டுப் போகட்டுமே! நீங்கள் உழைப்பால் ஜெயித்தீர்கள் என்று சிலர் சொல்லலாம். அதிர்ஷ்டத்தால் ஜெயித்தீர்கள் என்று பலர் சொல்லலாம். இதில் யாருக்கும் நீங்கள் தன்னிலை ...
சிலந்திகளின் கவனத்திற்கு…
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… தனக்கான இரை தன்னைத் தேடி வர வேண்டும் என்று காத்துக் கிடக்கும் சிலந்திக்கு கொசுக்களும், ஈக்களும் தான் கிடைக்கின்றன. வரும் வாய்ப்புகள் போதும் என்று, சிலந்திகள் சமரசம் செய்துகொண்டு ஒரு நிலைலேயே நின்று போகின்றன. தன்னுடைய வலையை பின்னிய பிறகு சிலந்தியால் எங்கும் நகர முடிவதில்லை. தான் பின்னிய வலையில் தானே சிறையாகும் சோகம் சிலந்திக்கு. ஆனால் அது சோகம் என்றுகூட அதற்குத் தெரிவதில்லை. வாய்ப்புகளைத் தேடி வெளியே போகிறவர்களுக்கு ...
துணையாய் வருகிற துரோகங்கள்
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… மனித வாழ்வின் மிகப்பெரிய புதிர் என்ன? மனித வாழ்வின் மிகப்பெரிய தெளிவு என்ன? இந்த இரண்டு கேள்விகளுக்குமான விடைகள் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை. “யாரோ ஒருவரை நாம் சார்ந்திருக்கிறோம், அவர் தான் நமக்கு எல்லாம்” என்று எண்ணுவது வாழ்வின் மிகப்பெரிய புதிர். “யாரும் யாரை நம்பியும் இல்லை” என்பது வாழ்வின் மிகப்பெரிய தெளிவு. அந்தப் புதிரைத் தவிர்த்துவிட்டு தெளிவை உணர்பவர்கள்தான் வாழ்க்கையில் உன்னதமான உயரங்களைத் தொடுகிறார்கள். துரோகங்கள் ஏற்படுத்திய வலிகளைத் ...